மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கான தற்காலிக நடைபாதை - நாளை திறப்பு
சென்னை, மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான தற்காலிக நடைபாதையை சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை திறந்து வைக்கிறார்.
சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக விளங்குவது மெரினா கடற்கரை. முக்கிய சுற்றுலா தளமாக திகழும் மெரினா கடற்கரைக்கு தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால், மெரினா கடற்கரையில் நடைபாதைகள், அணுகுசாலைகள், பூங்காக்கள் உள்ளிட்ட பலவற்றும் அமைக்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்ற கடற்கரை
— Kannan Jeevanantham (@Im_kannanj) December 25, 2021
மெரினா கடற்கரை அமைக்கப்பட்டு நடைபாதை pic.twitter.com/WG7jhu7YP6
இருப்பினும், சாலையில் இருந்து கடற்கரைக்கு சென்று கடலின் அழகை ரசிப்பதற்கு மணலில் நடந்து செல்வது முதியவர்களுக்கும், உடல்நலம் முடியாதவர்களுக்கும் மிகுந்த சிரமமாக இருக்கும். மாற்றுத்திறனாளிகள் கடற்கரைக்கு செல்வது மிகவும் கடினமான ஒரு விஷயமாகவே இருந்து வருகிறது. இதுதொடர்பாக, பலரும் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த காரணத்தால் மெரினா சாலையில் இருந்து கடற்கரைக்கு செல்வதற்கு நடைபாதைகள் அமைக்கப்பட்டு வருகிறது.
🦉சென்னை மெரினா கடலை மாற்றுத்திறனாளிகள் அருகில் சென்று பார்த்து மகிழ தற்காலிக நடைபாதையை திங்கள் கிழமை சென்னை கார்ப்பரெச்சன் கமிஷனர் தொடங்கி வைக்கிறார் pic.twitter.com/coSVKH84Mk
— Dr. Rofina Subash, VJ (@rj_rofina) December 25, 2021
இந்த பணிகள் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடைபாதை தற்போது தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபாதையை நாளை சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி திறந்து வைக்க உள்ளார். இந்த தற்காலிக நடைபாதையில் மாற்றுத்திறனாளிகள் செல்வதற்காக சிறப்பு வாகனங்களும் மாநகராட்சி சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது அமைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு நடைபாதை பயனளிக்கும் வகையில் அமைந்துள்ளதாக கடற்கரைக்கு வரும் மாற்றுத்திறனாளிகள் கருத்து தெரிவித்துள்ளனர். இதுபோன்று அனைத்து சுற்றுலா தளங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு ஏற்பாடுகள் செய்து தர வேண்டும் என்றும் பலரும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்