மேலும் அறிய
Advertisement
Top News | சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் கவனிக்கவேண்டிய முக்கிய செய்திகள்
உள்ளாட்சி மறைமுக தேர்தல், பஞ்சாயத்து தலைவரை வெட்டியவர் கைது உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ...!
1. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஒன்றிய தலைவர், துணை தலைவர், ஊராட்சி துணை தலைவர் ஆகிய பதவிகளுக்கு, இன்று மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது.
2. கடலூா், காஞ்சிபுரம், கரூா், சிவகாசி ஆகிய நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயா்த்துவதற்கான அவசரச் சட்டத்தை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்மூலம், தமிழகத்தில் மாநகராட்சிகளின் எண்ணிக்கை 20-ஆக உயா்கிறது.
3. வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் தெரிவித்துள்ளார்.
4.. தாம்பரத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட உள்ள ஆணையரகத்திற்காக, செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி., விஜயகுமார், 63 போலீசாரை மாற்றியுள்ளார்.
5. செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட பகுதிகளில், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, பட்டாசுகள் வாங்கி, விற்பனை செய்ய விரும்பும் விற்பனையாளர்கள் மற்றும் வணிகர்கள், தற்காலிக பட்டாசு உரிமம் பெறலாம். இ-சேவை மையங்கள் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என, கடந்த மாதம் 30ம் தேதி வரை அறிவிக்கப்பட்டிருந்து. தற்போது நீட்டிப்பு செய்து இன்று வரை விண்ணப்பிக்கலாம்.
6. திருவள்ளூரில் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகுந்து ஊராட்சிமன்ற தலைவரை வெட்டிய வழக்கில் 6 பேரை கைது செய்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தப்படுகிறது.
7. வரும் நவம்பா் 1-ஆம் தேதி முதல் 1-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படுவதால், கொரோனா தடுப்பு வழிகாட்டி நெறிமுறைகளை அனைத்து கல்வி நிறுவனங்களும் தீவிரமாகப் பின்பற்ற வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் டாக்டா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
8. அறநிலையத் துறை சார்பில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள கபாலீஸ்வரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு உதவி பேராசிரியர், நூலகர், உடற்கல்வி ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 11 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
9. கொலை, அதிக வட்டி வசூலித்தது, போலி நீதிமன்ற வில்லையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான ஆறு வழக்குரைஞா்கள் பணி செய்யத் தடை விதித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பாா் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.
10. தமிழகத்தில் 53 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளதால், தாமதிக்காமல் அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். ஓராண்டுக்கு அனைவரும் முக கவசம் அணிய வேண்டும், என மக்கள் நல்வாழ்வு துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
தமிழ்நாடு
ஆட்டோ
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion