மேலும் அறிய
இது உங்க ஏரியா.! காஞ்சிபுரம், சென்னை, திருவள்ளூரில் கவனிக்கவேண்டிய முக்கியச் செய்திகள்!
மருத்துவ சாதனை பூங்காவிற்கு அனுமதி, தமிழிசை சௌந்தரராஜன் எதிராக தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி , ரவுடிகளை ஒழிக்க புது மசோதா உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ

சென்னை விமானநிலையம்
1. காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் ரூ.450 கோடியில் மருத்துவ சாதனங்கள் உற்பத்திப் பூங்கா அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
2. தமிழகத்தில் காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு,அக்.6 மற்றும் 9 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளபகுதிகளுக்கு மட்டும் பொதுவிடுமுறை அறிவிக்கப்படுகிறது.
3.விசிக தலைவர் திருமாவளவனுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் மீது தொடரபட்ட அவதூறு வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.

4. ஆப்பரேஷன் திருவள்ளூர் என்ற பெயரில்,5 டன் வெடிகுண்டுகளை, ராணுவ வெடிகுண்டு செயலிழப்பு குழுவினர் அழித்தனர். ராணுவ வெடிகுண்டு செயலிழப்பு குழு சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில் இந்த ஆண்டு துவக்கத்தில், 'மிகப் பெரிய வெடிகுண்டு அகற்றும் ஆப்பரேஷன்' நடத்தப்பட்டது.
5. சென்னை வில்லிவாக்கம் 200 அடி சாலையில் தறிகெட்டு ஓடிய கார் மோதியதில், தடுப்புச் சுவருக்கு வர்ணம் பூசிக்கொண்டிருந்த 2 பெண் தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

6.அத்திப்பட்டில், மின் வாரியத்திற்கு, வட சென்னை என்ற பெயரில் அனல் மின் நிலையம் உள்ளது.அங்கு தலா, 210 மெகா வாட் திறனில் மூன்று அலகுகளில் மின் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில்,ன் மூன்றாவது அலகில், பராமரிப்பு பணிக்காக, நேற்று முன்தினம் மாலை முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.
7. ரவுடிகளை ஒழிக்க 'திட்டமிட்ட குற்றச் செயல்கள் தடுப்பு சட்ட மசோதா' தயாராக இருப்பதாகவும், அடுத்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில் இது சட்டமாக இயற்றப்படும் எனவும் அரசு தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

8. சென்னையில் மழைநீா் வடிகால் தூா்வாரும் பணிகளை பருவமழைக்கு முன்பாகவே முடிக்க வேண்டும் என்று அனைத்துத் துறைகளுக்கும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
9. தென்மேற்கு பருவக்காற்று காரணமாக, கடலோர மாவட்டங்கள் மற்றும் அதையொட்டிய உள் மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இன்று இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும்.சென்னையில் சில இடங்களில், இன்று லேசான மழை பெய்யும்.

10 சென்னையில் இரண்டாம் தவணை கோவிஷீல்ட் தடுப்பூசி 12 லட்சம் பேருக்கும், கோவேக்ஸின் தடுப்பூசி 6 லட்சம் பேருக்கும் என திங்கள்கிழமை வரை மொத்தம் 18 லட்சம் பேருக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















