விமர்சையாக நடந்த சத்தியம் டிவி இல்லத் திருமண விழா.. துணை முதல்வர் உட்பட அரசியல் பிரபலங்கள் பங்கேற்று வாழ்த்து!
பூந்தமல்லியில் உள்ள CSI Mary Magdelene திருச்சபையில் சென்னை பேராயர் ரெவரண்ட் பால் பிரான்சிஸ் தலைமையில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை: சத்தியம் டிவி-யின் நிர்வாக இயக்குநரும், ஆலிவ் ட்ரீ குளோபல் கல்வி குழுமத்தின் தலைவருமான டாக்டர் ஐசக் லிவிங்ஸ்டோனின் மூத்த மகனும் ஆலிவ் ட்ரீ குளோபல் பள்ளியின் CEO-வுமான ஆலன் பால் ஐசக்-கிற்கும், கிரேஸ் வேர்ல்ட் தொழில் குழுமத் தலைவர் சுதாகரின் மகள் கிரேஸ் செல்ஸி-க்கும் சென்னையில் கோலாகலமாக திருமணம் நடைபெற்றது.
விமர்சையாக நடந்த திருமண வரவேற்பு:
பூந்தமல்லியில் உள்ள CSI Mary Magdelene திருச்சபையில் சென்னை பேராயர் ரெவரண்ட் பால் பிரான்சிஸ் தலைமையில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் இயேசு அழைக்கிறார் ஊழியங்களின் தலைவர் டாக்டர் பால் தினகரன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மூத்த பத்திரிகையாளர் இந்து ராம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
அதனைத் தொடர்ந்து திருவேற்காட்டில் உள்ள GPN மஹாலில் நடைபெற்ற திருமண வரவேற்பு விழாவில் அரசியல், தொழில்துறை, மத, ஊடக உலக பிரமுகர்கள் திரளாக பங்கேற்றனர்.
துணை முதல்வர் பங்கேற்பு:
திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பேசிய இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி.லாசரஸ், இல்லறத்தில் இணைந்த மணமக்களுக்கு வாழ்த்து செய்தியை வழங்கினார். திருமண வரவேற்பு விழாவில் மணமக்களுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியை மணமக்களிடம் வழங்கினார். சத்தியம் டிவி நிர்வாக இயக்குநர் டாக்டர் ஐசக் லிவிங்ஸ்டோன் மகனின் இல்லற வாழ்க்கை பயணத்தில் எல்லா வளமும், நலமும் பெற்று வீட்டிற்கும் நாட்டிற்கும் ஒளிவிளக்காக திகழ்ந்திட எனது நெஞ்சார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் வாழ்த்துச் செய்தியை முன்னாள் அமைச்சர் பெஞ்சமின், எம்.எல்.ஏ அலெக்ஸாண்டர் ஆகியோர் வழங்கினர். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் டி.ஜெயக்குமார், மாஃபா பாண்டியராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர் பங்கேற்பு
மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ்குமார், காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மூத்த தலைவர்கள் திருநாவுக்கரசர், பீட்டர் அல்போன்ஸ் ஆகியோரும் மணமக்களுக்கு வாழ்த்து தெரிவித்தனர். பாமக சார்பில் சவுமியா அன்புமணி, கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர்.
பாஜக சார்பில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், முன்னாள் எம்.எல்.ஏ விஜயதரணி உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர். தேமுதிக நிறுவனர் மறைந்த விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன், வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன், மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி உள்ளிட்டோரும் மணமக்களை வாழ்த்தினர்.
முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சகாயம், வணிகத் தலைவர்கள் டாக்டர் பத்மசிங் ஐசக் (ஆச்சி மசாலா), வி.ஜி சந்தோஷம், வி.ஜி செல்வராஜ், விக்கிரமராஜா (வணிகர் சங்க பேரமைப்பு தலைவர்) உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.
பிரபல போதகர்கள் D. மோகன், சாம் P. செல்லதுரை, ஸ்டீபன், ஜெர்சன் எடின்புரோ, டேவிட் கணேசன் ஆகியோர் மற்றும் கிறிஸ்தவ நல்லெண்ண இயக்க தலைவர் இனிகோ இருதயராஜும் நிகழ்வில் பங்கேற்றனர்.
நக்கீரன் கோபால், சகிலன் (நியூஸ் தமிழ்), கலைகோட்டுதயம் (தமிழன் டிவி) உள்ளிட்ட ஊடக நிர்வாகிகளும் விழாவில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.விழாவில் “இயேசு விடுவிக்கிறார்” ஊழியங்களின் ஸ்தாபகர் சகோதரர் மோகன் சி. லாசரஸ் சிறப்புரை ஆற்றி, மணமக்களின் இல்லற வாழ்வுக்கு ஆசீர்வாதம் வழங்கினார்.
திருமண வரவேற்பு விழாவில் உற்றார், உறவினர், நண்பர்கள், சத்தியம் டிவி ஊழியர்கள், ஆலிவ் ட்ரீ பள்ளி ஆசிரியர்கள் என திரளானோர் கலந்து கொண்டு, ஆலன் பால்–கிரேஸ் செல்ஸி தம்பதியை என மனமார வாழ்த்தினர்.























