மேலும் அறிய

வாடகைக்கு விடப்படும் " அம்மா திருமண மண்டபம் " எவ்வளவு வாடகை தெரியுமா ?

நகரங்களில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபங்களை நேரடியாக வாடகைக்கு விட வீட்டுவசதி வாரியம் முடிவு செய்துள்ளது. அதற்கான வாடகை விபரங்களை அறிவித்து உள்ளது

அம்மா திருமண மண்டபம்

சென்னை மதுரையில், 51 கோடி ரூபாய் செலவில் , கடந்த ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் முடங்கி கிடக்கின்றன. கடந்த அ.தி.மு.க., ஆட்சியில் , சென்னை பெருநகரில் நான்கு இடங்கள் , மதுரையில் ஒரு இடம் என 5 இடங்களில் , 51 கோடி ரூபாய் மதிப்பீட்டில் , அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்டது.

பயன்பாட்டுக்கு வராமல் முடக்கம்

அதன்படி மதுரை அண்ணா நகர், சென்னையில் ஆவடி பருத்திப்பட்டு , அயப்பாக்கம் , கொரட்டூர் , வேளச்சேரி ஆகிய இடங்களில் , அம்மா திருமண மண்டபங்கள் கட்டப்பட்டன. 2018 - ல் அறிவிக்கப்பட்டு , 2020 - க்குள் அனைத்து மண்டபங்களும் கட்டி முடிக்கப்பட்டன. இவற்றை தனியார் வாயிலாக நிர்வகிக்க , வீட்டு வசதி வாரியம் முடிவு செய்தது. ஆனால், ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் இந்த மண்டபங்கள் இன்னும் மக்கள் பயன்பாட்டுக்கு வராமல் முடங்கி கிடக்கின்றன.

அம்மா திருமண மண்டபம் வாடகைக்கு

சென்னையில் மண்டபங்கள் கட்டுமான பணிகள் முடிந்து , திறப்பு விழாவும் 2020 - ல் நடந்தது. ஆனால் இதை நிர்வகிப்பதற்கான தனியாரை தேர்வு செய்வதில் , வாரிய அதிகாரிகள் மிகுந்த அலட்சியத்துடன் செயல்படுவதாக கூறப்பட்ட நிலையில் , சென்னை , மதுரை , நகரங்களில் கட்டப்பட்ட அம்மா திருமண மண்டபங்களை நேரடியாக வாடகைக்கு விட முடிவு செய்த வீட்டு வசதி வாரியம் , அதற்கான வாடகை விபரங்களை அறிவித்து உள்ளது.

வாடகை விபரம்

ஆவடியில் உள்ள திருமண மண்டபத்துக்கான ஒரு நாள் வாடகை 1.50 லட்சம் ரூபாய் , அரை நாள் வாடகை 75,000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதே போன்று , மதுரை அண்ணா நகர் திருமண மண்டபத்துக்கான ஒரு நாள் வாடகை 50,000 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

தேனி - வீரபாண்டி பிரதான சாலையில் கட்டப்பட்ட திருமண மண்டபத்துக்கு ஒரு நாள் வாடகை 70,000 ரூபாய். இந்த மண்டபங்களை வாடகைக்கு எடுக்க சம்பந்தப்பட்ட கோட்ட அலுவலகங்களை அணுகலாம் என வீட்டு வசதி வாரியம் அறிவித்து உள்ளது.

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு! உலகளவில் புகழ்பெறப்போகும் ECR கடற்கரை சாலை!
தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு! உலகளவில் புகழ்பெறப்போகும் ECR கடற்கரை சாலை!
Tamil Nadu Budget 2026: இனி சென்னை வேற லெவல்! 5,904 சதுர கி.மீ.-க்கு விரிவடையும் தலைநகரம் – பட்ஜெட்டில் வெளியான மாஸ் அப்டேட்!
இனி சென்னை வேற லெவல்! 5,904 சதுர கி.மீ.-க்கு விரிவடையும் தலைநகரம் – பட்ஜெட்டில் மாஸ் அப்டேட்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
பெண்களை இழிவா பேசுறவங்களுக்கு ஆண்மையே கிடையாது! - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!
பெண்களை இழிவா பேசுறவங்களுக்கு ஆண்மையே கிடையாது! - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
ஆடி பரணியும் கிருத்திகையும் ஒரே நாளில்! வல்லக்கோட்டை கோயிலில் காத்திருக்கும் பேரதிசயம்!
Embed widget