மேலும் அறிய
Advertisement
என்னது சென்னையில் மழை பெய்ததா? நம்ம முடியலையா... படித்தாலே பரவசம் தான்!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 13 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
திடீர் மழை
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான ஆவடி, திருமுல்லைவாயில், திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இது மட்டுமல்லாமல் குரோம்பேட்டை, தாம்பரம், பெருங்களத்தூர் உள்ளிட்ட பகுதிகளிலும் பலத்த மழை பெய்தது. நேற்று காலையிலிருந்து கடும் வெயில் வாட்டி வந்த நிலையில் திடீர் மழை காரணமாக வாகன ஓட்டிகள் சிரமம் அடைந்தனர். இருந்தும் சில வாகன ஓட்டிகள் மழையில் நனைந்தபடியே மகிழ்ச்சியாக இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருப்பதையும் பார்க்க முடிந்தது. வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு கோடை காலத்தில் அடிக்கடி மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. செங்கல்பட்டு, சிங்கபெருமாள்கோவில், மறைமலை நகர், காட்டாங்குளத்தூர், கூடுவாஞ்சேரி, பாலூர் உள்ளிட்ட பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை பெய்தது.
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி
தமிழ்நாட்டில் இன்று, 13 மாவட்டங்களிலும், நாளை 12 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
உங்கள் ஏரியாவில் மழை பெய்யுமா ?
நீலகிரி, கோவை, திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருச்சி, திண்டுக்கல், நாமக்கல், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, ஈரோடு மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நாளை (மே 26): தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம், நீலகிரி, கோவை, திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
சென்னை
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion