மேலும் அறிய

சென்னை-புதுச்சேரி-நாகப்பட்டினம் இடையே நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க திட்டம்!

சென்னை துறைமுகத்தில் இருந்து, புதுச்சேரி, கடலுார், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் இடையேயான பயணியர் மற்றும் சரக்கு கப்பல் போக்குவரத்து அடுத்த ஐந்து மாதங்களில் தொடங்கப்பட உள்ளது.

மத்திய அரசின் சாகர்மாலாதிட்டத்தின் கீழ், கடலோர படகு போக்குவரத்தை மேம்படுத்த, மத்திய துறைமுகம், கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் தீவிரம் காட்டி வருகிறது. அதன்படி, நாட்டின் 7,500 கி.மீ. கடலோர பகுதியில் படகு போக்குவரத்தை மேம்படுத்தும் திட்டமாக, ‘சாகர்மாலாதிட்டம் உள்ளது. பல வழித்தடங்களில் ரோ-ரோ, ரோ-பேக்ஸ்என்ற சரக்கு மற்றும் பயணியர் கப்பல் சேவைகளுக்கான பணிகள் இதன் ஓர் அம்சமாக இருக்கும் நிலையில், அதற்கான பணிகள் விரைவு படுத்தப்பட்டுள்ளன.

வர்த்தக ரீதியிலான மத்திய அரசின் இந்த முயற்சியை அமல் படுத்துவதற்கான வழித்தடங்களை அடையாளம் காண, தனியார் நிறுவனங்களை, மத்திய கப்பல் மற்றும் நீர்வழி போக்குவரத்து அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது. நாள்தோறும் பயணம் மேற்கொள்பவர்கள், சுற்றுலா பயணியர், சரக்கு போக்குவரத்தில் ஈடுபடுபடுபவர்களுக்கு, இந்த துணை போக்குவரத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில், சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலுார், நாகப்பட்டினம், காரைக்கால் இடையே கப்பல் போக்குவரத்து அறிமுகமாக உள்ளது. இதற்கான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது.


சென்னை-புதுச்சேரி-நாகப்பட்டினம் இடையே நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க திட்டம்!

இதுகுறித்து, சென்னை துறைமுக நிர்வாகம் தரப்பில், சென்னை துறைமுகத்தில் ரோ-ரோ, ரோபேக்ஸ்என்ற கப்பல் சேவை, புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது. இதில், கார்கள் ஏற்றிச் செல்லப்படுகின்றன. பயணிகளும் செல்லலாம். இந்த வசதியை மற்ற துறைமுகங்களுக்கு விரிவுப்படுத்தும் வகையில், கப்பலை இயக்க ஆர்வமுள்ள நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்தோம். சென்னை துறைமுகத்திற்கு, பயணிகள் கப்பல் வந்து செல்கிறது. புதுச்சேரியிலும் 4 மீட்டர் ஆழத்தில் கப்பல் நிறுத்துமிடம் தயாராகி வருகிறது. கடலுார் துறைமுகத்திலும், 9 மீட்டர் ஆழம், 240 மீட்டர் நீளத்தில் கப்பல் நிறுத்துமிடம் செப்டம்பர் மாதத்தில் தயாராகி விடும். இதில், 120 மீட்டர் நீளமுடைய இரண்டு கப்பல்களை நிறுத்தலாம். அதே போல, காரைக்கால் துறைமுகத்தில் 130 மீட்டர் நீளத்தில் கப்பல் நிறுத்தும் தளம் உள்ளது.


சென்னை-புதுச்சேரி-நாகப்பட்டினம் இடையே நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க திட்டம்!

புதுச்சேரியில் 4 மீட்டர் ஆழத்தில் கப்பல் நிறுத்துமிடம் தயாராகி வருகிறது. கடலுார் துறைமுகத்திலும், 9 மீட்டர் ஆழம், 240 மீட்டர் நீளத்தில் கப்பல் நிறுத்துமிடம் செப்டம்பர் மாதத்தில் தயாராகி விடும்.

இங்கிருந்து கொழும்பு - காரைக்கால் - சென்னை கப்பல் போக்குவரத்தை இயக்கும் திட்டமும் உள்ளது. சென்னையில் இருந்து புதுச்சேரி, கடலுார், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் இடையே, ரோ-ரோ, ரோபேக்ஸ் கப்பல்கள் இயக்குவது குறித்து, முதற்கட்ட ஆலோசனை கூட்டத்தில், விருப்பம் உள்ள ஐந்து நிறுவனங்கள் பங்கேற்றன. இதற்காக துறைமுகத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய வசதிகள் உள்ளிட்டவை குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இது தொடர்பான ஒப்பந்தங்கள் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்த வசதி அடுத்த ஐந்து மாதத்தில் தொடங்கக் கூடும். இதன் மூலம், சென்னையில் இருந்து கப்பலில் சுற்றுலா செல்வோர் எண்ணிக்கை அதிகரிக்கும். சாலை நெரிசலும் குறையும். துறைமுகங்களில் தேவையான வசதிகள் உள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு! உலகளவில் புகழ்பெறப்போகும் ECR கடற்கரை சாலை!
தமிழக பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு! உலகளவில் புகழ்பெறப்போகும் ECR கடற்கரை சாலை!
Tamil Nadu Budget 2026: இனி சென்னை வேற லெவல்! 5,904 சதுர கி.மீ.-க்கு விரிவடையும் தலைநகரம் – பட்ஜெட்டில் வெளியான மாஸ் அப்டேட்!
இனி சென்னை வேற லெவல்! 5,904 சதுர கி.மீ.-க்கு விரிவடையும் தலைநகரம் – பட்ஜெட்டில் மாஸ் அப்டேட்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
பெண்களை இழிவா பேசுறவங்களுக்கு ஆண்மையே கிடையாது! - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!
பெண்களை இழிவா பேசுறவங்களுக்கு ஆண்மையே கிடையாது! - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget