Power Shutdown Chennai: வேலையை சீக்கிரம் முடிச்சிக்கோங்க!! இன்று இந்த இடங்களில் எல்லாம் மின்தடை அறிவிப்பு
சென்னையில் இன்று மின்தடை செய்யப்படும் இடங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்
மின் பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னையின் இன்று (பிப்ரவரி 07) மின் விநியோகம் துண்டிக்கப்படும் இடங்கள் குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது. மின் சேவை வழங்கும் துறை மாதத்தில் ஒரு நாள் பராமரிப்பு பணிகளுக்காக மின்சார சேவையைத் துண்டிப்பது வழக்கமாகும். அந்த வகையில் இன்று பராமரிப்பு பணிகளுக்காக சென்னையில் மின்தடை செய்யப்படும் இடங்கள் என்னென்ன என்பது குறித்து காணலாம்.
பராமரிப்புப் பணி காரணமாக புதன்கிழமை (08.02.2023) காலை 09.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.
அம்பத்தூர் பகுதி :
கொரட்டூர் பாரதி நகர், மின்வாரியா குடியிருப்பு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, தில்லை நகர், சர்ச் தெரு, மசுதி தெரு, வ. சி.நகர், திருவள்ளுவர் தெரு.
பொன்னேரி பகுதி :
தேர்வாய்கண்டிகை கரடிப்புத்தூர், ஜி.ஆர்.கண்டிகை, கண்ணன்கோட்டை, சின்ன புலியூர், பெரிய புலியூர், சிறுவாடா, என்.எம்.கண்டிகை..
தமிழ்நாட்டில் மின் கட்டண விவரம்:
தமிழ்நாட்டில் 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் சில மாதங்களுக்கு முன் உயர்த்தப்பட்டது. இந்த கட்டண உயர்வு வரும் 2026ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிதாக உயர்த்தப்பட்டுள்ள மின் கட்டணத்தின் படி முதல் 100 யூனிட்களுக்கு எந்தவித கட்டணமும் இல்லை என்ற நிலை தொடரும். அதன்பின்னர் 200 யூனிட்டுகளுக்கு பயன்படுத்துபவர்களுக்கு மாதம் ஒன்றுக்கு 27.50 ரூபாய் உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல் 300 யூனிட் வரை பயன்படுத்தினால் மாதம் ஒன்றிற்கு 72.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது. 400 யூனிட் வரை பயன்படுத்தோவருக்கு மாதம் ஒன்றுக்கு 147.50 ரூபாய் கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வு அனைத்தும் வரும் 2026-27 வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடில் கடைசியாக 2014ஆம் ஆண்டு மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டிருந்தது. அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் மின்சார கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
Also Read: கைவிடப்பட்ட 1333 ஆழ்துளை கிணறுகள் 14 நாட்களில் மீட்டெடுப்பு - திருவண்ணாமலை மாவட்டம் உலக சாதனை…