(Source: ECI/ABP News/ABP Majha)
Viduthalai: விடுதலை படம் பார்க்க குழந்தையுடன் வந்த பெண் மீது வழக்குப்பதிவு - பின்னணி என்ன?
கடந்த 16 ஆண்டு கால திரை வாழ்வில் வெற்றிமாறன் சமூகக் கருத்துகளைப் பேசும் படங்களை ஜனரஞ்சகமாகக் கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தியுள்ளார்.
விடுதலை திரைப்படத்தைப் பார்க்க சிறுவர்களை அனுமதிக்க வேண்டும் என்று சென்னையில் ஒரு திரையரங்கில் பெண் ஒருவருக்கும் காவல் துறையினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விடுதலை
வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படம் கடந்த மார்ச்-31 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. முதல் நாள் வசூல் உலக அளவில் 8 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 16 ஆண்டு கால திரை வாழ்வில் வெற்றிமாறன் சமூகக் கருத்துகளைப் பேசும் படங்களை ஜனரஞ்சகமாகக் கொடுத்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏறபடுத்தியுள்ளார். ரசிகர்கள் இந்தத் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.
எழுத்தாளர் ஜெயமோகனின் 'துணைவன்' என்ற நாவல் கதையை அடிப்படையாக வெற்றிமாறன் விடுதலை திரைப்படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக சூரி நடித்துள்ளார். சூரியின் நடிப்பு மிகவும் இயல்பாகவும், கதாபாத்திரத்திற்கு பொருந்திபோகும் வகையிலும் அமைந்துள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
நட்சத்திர பட்டாளங்கள்:
மேலும் விஜய் சேதுபதி, பவானி ஸ்ரீ, சேத்தன், கௌதம் மேனன், ராஜீவ் மேனன் (இந்தத் திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகிறார்.) உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர். வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இளையராஜா இசையமைத்துள்ளார்.
முன்னதாக விடுதலை படத்தின் பாடல்கள், ட்ரெய்லர் எல்லாம் வெளியாகி ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் படமானது 2 பாகங்களாக உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்.எஸ். இன்போடெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்துள்ள இந்த படத்தின் தியேட்டர் வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியிருந்தது.
இதனிடையே விடுதலை படம் நல்ல வரவேற்பை ரசிகர்களிடத்தில் பெற்றுள்ளது. குறிப்பாக நாளுக்கு நாள் காட்சிகள் அதிகமாகி ரசிகர்கள் தியேட்டரை நோக்கி படையெடுத்து வருகின்றனர். இந்த படத்தில் ஓசி (Officer In charge) என்னும் கேரக்டரில் நடிகர் சேத்தன் நடித்திருந்தார். சர்வாதிகார போலீசாக தனக்கு கீழே உள்ள சக காவல்துறையைச் சேர்ந்தவர்களை மதிக்காத அவரது கேரக்டர் ரசிகர்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இரண்டாம் பாகம் எப்போது?
இந்நிலையில் விடுதலை படத்தின் இரண்டாவது பாகம் இந்த ஆண்டு செப்டெம்பர் மாதம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விஜய் சேதுபதி பெருமாள் வாத்தியர் கதாபாத்திரத்துக்கு லீட் கொடுத்து முதல் பாகம் நிறைவடைந்துள்ள நிலையில், இரண்டாம் பாகம் விஜய் சேதுபதி கதாபாத்திரத்தைச் சுற்றி கட்டமைக்கப்பட்டிருக்கும் என்றும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துள்ளனர் அவரது ரசிகர்கள்.
சென்னையில் உள்ள திரையரங்கில் வாக்குவாதம்
சென்னை அருகே விருகம்பாக்கத்தில் உள்ள ஒரு திரையரங்கில் ‘விடுதலை’ திரைப்படம் ஓடிக்கொண்டிருந்தது. திரையரங்கிற்குள் வந்த காவல் துறையினர் படத்தை பாதியில் நிறுத்தினர். 18 வயதுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே திரைப்படத்தை பார்க்க வேண்டும் என்று கூறினர்.அதோடு, மற்றவர்கள் வெளியே செல்லுமாறு அறிவுறுத்தினர்.இதனால் பெற்றோர்கள் போலீஸாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டனர். ’ஏ’ சான்றிதழ் அளித்த படத்தைப் பார்க்க சிறுவர்களை அனுமதிக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
திரையரங்கில், வளர்மதி என்ற பெண் காவல் துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அந்தப் பெண், “ வன்முறை காட்சிகள் உள்ளதால் தான் ’ஏ’ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அதனால் சிறுவர்களை வெளியே அனுப்ப முடியாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவருடைய பேச்சு சரியாக இல்லை. பொது இடத்தில் இடையூறு ஏற்படுத்துதல், அத்துமீறி உள்ளே நுழைதல் உட்பட 3 பிரிவுகளில் வளர்மதி மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.