Crime ; மகனை கொல்ல வந்த கும்பல் ! தந்தையை சரமாரியாக வெட்டிய அதிர்ச்சி சம்பவத்தால் பரபரப்பு
மகன் இல்லாததால் தந்தையை சரமாரியாக வெட்டிய வழக்கில் திருநங்கை உட்பட 5 பேர் கைது. தப்பித்து ஓடும் போது இரண்டு பேருக்கு கை உடைந்தது

தந்தையை வெட்டிய கும்பல்
சென்னை ஓட்டேரி நம்மாழ்வார் பேட்டை பராக்கா இரண்டாவது தெரு பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாசன் ( வயது 50 ) இவர் தனது வீட்டின் அருகே இருந்த போது சுமார் ஐந்து பேர் கொண்ட கும்பல் அங்கு வந்து சீனிவாசனின் மகன் கார்த்திக் என்பவரை வெட்ட வந்துள்ளனர். கார்த்திக் வீட்டிற்குள் சென்று பூட்டு போட்டுக் கொண்டதால் வெளியே நின்று கொண்டிருந்த அவரது தந்தை சீனிவாசனை அந்த கும்பல் சரமாரியாக வெட்டியுள்ளது.
இதில் சீனிவாசனுக்கு கை மற்றும் கால் உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டுக் காயம் விழுந்து சம்பவ இடத்திலேயே மயக்கமடைந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து சீனிவாசனை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து தலைமைச் செயலக குடியிருப்பு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் சீனிவாசனின் மகன் கார்த்திக் என்பவர் சரித்திர பதிவேடு ரவுடியாக உள்ளார் என்பது தெரிய வந்தது.
திருநங்கைக்கு பாலியல் சீண்டல்
ஓட்டேரி எஸ்.வி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் ( எ ) குள்ள கருப்பா ( வயது 21 ) என்ற நபரும் நட்பாக பழகி வந்துள்ளனர். பிரசாந்த் , அறிவழகன் ( எ ) கீதா என்ற திருநங்கையை காதலித்து திருமணம் முடித்துக் கொண்டார். பிரசாந்த் அடிக்கடி குற்ற வழக்கில் சிக்கி சிறைக்கு செல்லும் போது திருநங்கை கீதாவிடம் கார்த்திக் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
இது குறித்து கீதா அளித்த புகாரின் பேரில் கார்த்திக் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கார்த்திக் சிறையில் இருந்து வெளியே வந்தவுடன்
பிரசாந்த் தன்னை ஏதாவது செய்து விடுவான் என்று எண்ணி வெளியூருக்கு சென்று விட்டார்.
நண்பர்களுடன் சேர்ந்து கொலை
குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் இருந்த பிரசாந்த் மீண்டும் ஜாமினில் வெளியே வந்து கார்த்திக் மீண்டும் வீட்டில் இருப்பதை அறிந்து இரவு தனது நண்பர்களுடன் வந்து அவரை கொலை செய்ய முயற்சி செய்த போது அதில் அவர் தப்பித்து அவரது தந்தை சிக்கிக் கொண்டது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடைய ஓட்டேரி எஸ்.வி.எம் நகர் பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் என்கின்ற குள்ள கருப்பா ( வயது 25 ) புவன் ( வயது 19 ) திருநங்கையான அறிவு என்கின்ற அறிவழகன் ( வயது 26 ) மற்றும் 15 வயது சிறுவர்கள் இரண்டு பேர் என 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
இதில் பிரசாந்த் மற்றும் புவன் ஆகியோரை போலீசார் பிடிக்க முயற்சி செய்த போது அவர்கள் தப்பித்து ஓடும் போது கீழே விழுந்ததில் அவர்களது கை உடைந்தது போலீசார் அவர்களை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மாவுக்கட்டு போட்டனர். அதன் பிறகு திருநங்கை ட அறிவழகன், குள்ள பிரசாந்த், புவன் ஆகிய மூன்று பேர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுவர்கள் இருவரையும் சிறுவர் சீர் திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்தனர்.




















