மேலும் அறிய
Chengalpattu: முற்றுகையிட்ட பெண்கள்..டென்ஷனான அமைச்சர் சேகர்பாபு - செங்கல்பட்டில் நடந்தது என்ன ?
செங்கல்பட்டில் பேருந்து நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்களை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்.

அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள்
செங்கல்பட்டில் பேருந்து நிலையம் அமைக்க ஆய்வு மேற்கொண்ட அமைச்சர்களை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்ட மக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்கல்பட்டு (Chengalpattu News): செங்கல்பட்டு நீதிமன்றம் அடுத்த பி.வி.களத்தூர் செல்லும் சாலையில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக சுமார் 52 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்நிலையில் தற்போது புதிய பேருந்து நிலையம் மற்றும் அதனருகில் இயங்கிவரும் அரசு பேருந்து பணிமனை இருப்பதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்தது.
அதனடிப்படையில், புதிய பேருந்து நிலையம் மற்றும் பணிமனை அமைப்பதற்காக இடம் தேடிவந்த நிலையில், செங்கல்பட்டு நீதிமன்றம் அடுத்த பி.வி. களத்தூர் செல்லும் வழியில் உள்ள அரசு பேருந்து பணிமனை, பிவி களத்தூர் செல்லும் சாலையில், உள்ள நேதாஜி நகர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 17 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்ட இடத்தில் 52 வீடுகள் இடையூறாக உள்ளதால் அந்த வீடுகளை அகற்றக்கோரி சம்மந்தப்பட்ட நபர்களுக்கு உரிய நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் மக்கள் இடத்தை காலி பண்ணவில்லை. இந்நிலையில் இன்று தமிழக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மற்றும் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் தேர்வு செய்யப்பட்ட இடத்தை ஆய்வு மேற்கொண்டனர். தகவலறிந்து வந்த நேதாஜிநகர் மக்கள் அமைச்சர்களை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேலும் பெண்கள் அமைச்சர்கள் காலில் விழுந்து எங்கள் இடத்தை எங்களுக்கு விட்டு கொடுங்கள் என அழுது கொண்டே கேட்டதற்கு அமைச்சர் காட்டமாக பேசினார். மேலும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாய்ப்ரனீத் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு வருவாய்த்துறையினர் மற்றும் போலீசார் சமரசம் பேசியும் மறியலை கைவிடாமல் சாலையில் உருண்டு புறண்டு அழுது ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வேறு வழியின்றி போலீசார் அனைவரையும் குண்டுகட்டாக தூக்கி கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இச்சம்பவத்தால் சிறிதுநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் அப்பகுதியே பரபரப்பாக காணப்பட்டது.
ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்





















