மேலும் அறிய

Parandur Protest: தீவிரமடையும் பரந்தூர் விமான நிலைய போராட்டம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பயணம்

பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்களின் போராட்டம் தீவிரம் அடைந்து வருகிறது.

சென்னையின் இரண்டாவது புதிய விமான நிலையம் காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. இதற்கென பரந்தூர், ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட 13 கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட நிலங்கள் கையகப்படுத்தப்படவுள்ளது. இந்த புதிய விமான நிலையம் ஏகனாபுரத்தை மையப்படுத்தி அமைக்கப்படவுள்ளது என்ற தகவல் பரவியதை தொடர்ந்து, புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு வெளியான நாள் முதல் ஏகனாபுரம் கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் தரப்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

Parandur Protest: தீவிரமடையும் பரந்தூர் விமான நிலைய போராட்டம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பயணம்

சர்வதேச ஒப்பந்தப்புள்ளி:

இந்த அறிக்கையில் பரந்தூர் விமான நிலைய மேம்பாட்டிற்கான சர்வதேச ஒப்பந்தப்புள்ளியை கோரியுள்ளது, விரிவான தொழில்நுட்ப பொருளாதார அறிக்கையும் தயாரிக்கும் பணி பற்றியும் விமான போக்குவரத்தின் வளர்ச்சி நிலைகளை ஆய்வு செய்ய வேண்டும் என நிபந்தனையும் இடம் பெற்றுள்ளது. 2069- 70 ஆம் நிதியாண்டு வரை எதிர்கால போக்குவரத்தின் கணிப்புகள் இடம்பெற வேண்டும். பசுமை விமான நிலையம் மற்றும் சென்னை விமான நிலையம் இடையே சாலை, ரயில் இணைப்பு போக்குவரத்து தேவைகளை ஆராய வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அப்புகுதி மக்கள் 144 நாட்களாக இரவு நேர போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Parandur Protest: தீவிரமடையும் பரந்தூர் விமான நிலைய போராட்டம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பயணம்

போராட்டம் அறிவிப்பும் - வாபஸ் பெறுவதும் ..

இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் கோட்டையை நோக்கி பேரணி நடத்தப் போவதாக, அறிவிப்பு ஒன்றை பரந்தூர் போராட்ட குழு மற்றும் அப்பகுதி பொதுமக்கள் அறிவித்திருந்தனர். இந்தப் போராட்டம் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து, அப்பகுதியில் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டு, தொடர்ந்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டு வந்தனர். பெரிய அளவு போராட்டம் அறிவிப்பு வெளியான சில நாட்களில், சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் முன்னிலையில் போராட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட பேச்சுவார்த்தையானது நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் தமிழ்நாடு அமைச்சர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனை அடுத்து இந்தப் பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அந்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

Parandur Protest: தீவிரமடையும் பரந்தூர் விமான நிலைய போராட்டம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பயணம்

மீண்டும், நடை பயண போராட்டம் அறிவிப்பு

அப்பகுதியில் எந்தவித பிரச்சனையும் நடைபெறாத வண்ணம் இருக்க, காவல்துறை 13 சோதனை சாவடிகளை அமைத்து நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் கண்காணிப்பணி மேற்கொண்டு வந்தனர். இந்த நிலையில் நாளை காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தியை சந்தித்து மனு அளிக்க நடைப்பயணம் மேற்கொள்ளதாக காவல்துறையினம் அனுமதி கேட்டனர். இந்நிலையில் அவர்களுடன் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி இன்று பேச்சுவார்த்தையில், ஈடுபட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியும் ஒருங்கிணைப்பு குழு அதனை மறுத்தால் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது.
Parandur Protest: தீவிரமடையும் பரந்தூர் விமான நிலைய போராட்டம்; மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி நடைப்பயணம்

இந்த பேச்சுவார்த்தை குறித்து ஒருங்கிணைப்பு குழு உறுப்பினர் இளங்கோ கூறுகையில் , தொடர்ந்து விளைநிலங்கள்,  நீர்நிலைகள் மற்றும் குடியிருப்புகளை அகற்றக் கூடாது என தொடர்ச்சியாக அரசை வலியுறுத்தி வரும் நிலையில் நாளை போராட்டத்தை கைவிடுமாறு மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டதும் அதற்கு மறுப்பு தெரிவித்து போராட்டம் நடைபெறும் என தெரிவித்தாக கூறினார். மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தமிழ்நாடு முதலமைச்சர் அன்னூர் பகுதியில் விவசாயிகள் அனுமதியின்றி விளைநிலங்கள் எடுக்கப்படாது என தெரிவித்த நிலையில்,  பரந்தூரில் மட்டும் அதற்கு விதிவிலக்கு இல்லையா? எனவும் கேள்வி எழுப்பினர்.விமான நிலையம் அமைக்க நீர்நிலைகள் விளைநிலங்களை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம் என தெரிவித்து நாளை கண்டிப்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து இக்கூறிக்கையில் அளிப்போம் என தெரிவித்தார்.

தலைப்பு செய்திகள்

" கள்ளக் காதலை கைவிடாத தாய் " கஞ்சா போதையில் மகன் செய்த கொடூர காரியம்
பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்த அதிர்ச்சிப்பொருள்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
பெண் பயணி உள்ளாடைக்குள் மறைத்து வைத்த அதிர்ச்சிப்பொருள்! சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
மக்களே உஷார்! இன்று காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மழை பெய்யுமா? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அப்டேட்!
TN Weather News: சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை
சென்னையில் இன்றும் மழை தொடருமா? எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங்? தமிழக வானிலை அறிக்கை

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Iran: ''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
''என்னைய அடிச்சதுக்கு பணத்த குடு'': ஈரானிடம் இழப்பீடு கோரும் ட்ரம்ப்; இது ரொம்ப புதுசா இருக்கே.!
NEET Coaching Centre : ’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
’நீட் தேர்வுக்கு எதிர்ப்பு – பயிற்சி மையத்திற்கு Personal Loan’ இருமுகன் முதல்வர் விஜய்..?
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
Dhanush: உறுப்பினர் சேர்க்கையைத் தீவிரப்படுத்தும் தனுஷ்.. உன்னிப்பாக கவனிக்கும் விஜய்! அனல்பறக்கும் தமிழக அரசியல்!
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
நாளை முதல் 10ஆம் வகுப்பு அசல் மதிப்பெண் சான்றிதழ்; நேரில் பெறுவது எப்படி?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சென்னையில் இன்று இரவும் இடியுடன் கொட்டப்போகும் மழை? - வானிலை கொடுத்த வார்னிங் என்ன?
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
சியரா, கிரெட்டாவுக்கு போட்டி; பட்ஜெட் விலையில் களமிறங்கும் SUV- ஹைப்ரிட், எலக்ட்ரிக் மாடல்களில்!
DMK Slams CM Vijay : ‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
‘வெட்கமில்லையா? – இந்த அவமானம் தேவையா முதல்வர் விஜய்?’ திமுக கடும் விமர்சனம்..!
EPS vs Cv Shanmugam :சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
சி.வி சண்முகத்தை அதிமுகவில் இருந்து நீக்க இபிஎஸ் தயங்குவது ஏன்.? இது தான் காரணமா.? பரபரப்பு பின்னணி
Embed widget