மேலும் அறிய

Cyclone Michaung: மழையால் பழுதான வாகனங்களை சரிசெய்ய சிறப்பு ஏற்பாடு; உதவி எண்கள் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு

வெள்ளதால் பாதிக்கப்பட்ட வாகனங்களை சரி செய்ய மக்கள் தொடர்ந்து சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

மிக்ஜாம் புயலினால் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வடக்கு மாவட்டங்களான தலைநகர் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகியவை கடும் வெள்ளத்தினை எதிர்கொண்டது. இதில் மக்கள் பெரும் துயரத்தினை எதிர்கொண்டனர். குறிப்பாக பலர் தங்களது இரண்டு சக்கர வாகனங்களையும் நான்கு சக்கர வாகனங்களையும் இழக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். லட்சகணக்கான வாகனங்கள் நீரில் மூழ்கியது.  வெள்ளதால் பாதிக்கப்பட்ட வாகனங்களை சரி செய்ய மக்கள் தொடர்ந்து சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இன்சுரன்ஸ் கம்பெனிகளோ தொடக்கத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகனங்களுக்கு இன்சுரன்ஸ் செல்லாது என கைவிரித்தது. ஆனால் அதன் பின்னர் தமிழ்நாடு அரசு இன்சுரன்ஸ் கம்பெனிகள் வாகனங்களைச் சரி செய்வதில் மக்களுக்கு உதவ முன்வரவேண்டும் என அறிவுருத்தியது. இந்நிலையில் வாகன உற்பத்தி கம்பெனிகள் தொடங்கி இன்சுரன்ஸ் கம்பெனிகள் வரை அனைத்தும் வாகனங்களை சரி செய்வதில் களமிறங்கி முகாம்களை நடத்தி வருகின்றது. இது தொடர்பாக உதவி எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னை, திருவள்ளுர், காஞ்சிபுரம் மற்றம் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மிக்ஜாம் புயலினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு மட்டுமல்லாமல் வெள்ளம் தேங்கியிருந்த பகுதிகளில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இரண்டு, மூன்று மற்றும் நான்கு சக்கரவாகனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்வாகனங்களுக்கு பழுது நீக்கம் செய்யவும், உரிய இழப்பீடு வழங்கவும் வாகனத்தயாரிப்பு, நிறுவனங்கள், டீலர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களுடன் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து பணியாற்றிட உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும், 08.12.2023 அன்று நிதிஅமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திலும் வாகனத்தயாரிப்பு நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் வட்டாரப்போக்குவரத்து அலுவலர்கள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட கூட்டத்திலும் உடனடியாக மேற்கொள்ளவேண்டிய நடவடிக்கைகள் குறித்து அறிவுரைகள் வழங்கப்பட்டன” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

அதன்படி கீழ்கண்ட நடவடிக்கைகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

டீலர்கள்:

• அனைத்துவாகனத் தயாரிப்பு நிறுவனங்களின் சர்வீஸ் சென்டர்கள் மற்றும் டீலர்களின் சர்வீஸ் சென்டர்கள் அனைத்தும் உடனடியாக செயல்பாட்டிற்க்கு கொண்டுவரப்பட்டு பழுதுநீக்கப்பணிகள் துறிதப்படுத்தபட்டுள்ளது.

• வெள்ளத்தில் மூழ்கியிருந்த வாகனங்களை எக்காரணம் கொண்டும் இயக்க வேண்டாம் எனவும் அவற்றின் Engine- ஆன் செய்யாமல் மீட்புவாகனங்களில் சர்வீஸ் சென்டர்களுக்கு கொண்டுவருமாறும் பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இருந்த வாகன உரிமையாளர்களின் அலைபேசி எண்களுக்கு தயாரிப்பு நிறுவனங்கள் அவர்களின் முகவர்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்கள் சார்பில் மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட குறுஞ்செய்திகளும், வாட்ஸ்ஆப் செய்திகளில் அனுப்பப்பட்டுள்ளன. 

சிறப்பு முகாம்கள் நடைபெறும் இடங்கள் குறித்து தொடர்புடைய நிறுவனங்கள் விரிவான பத்திரிக்கைச் செய்திகளையும் வெளியிட்டுள்ளது.  TVS, Royal Enfield, Maruti, TATA Motors, Hyundai, உள்ளிட்ட நிறுவனங்களும் New India Insurance உள்ளிட்ட காப்பீட்டு நிறுவனங்களும் இத்தகைய சிறப்புமுகாம்கள் பத்திரிக்கைச்செய்திகள் ஏற்கனவே வெளியிட்டுள்ளன.

• Hyundai மற்றும் TATA Motors நிறுவனங்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப்பொருட்களை வழங்கியும் இலவச மருத்துவப்பரிசோதனை முகாம்களையும் நடத்திவருகின்றன.

TVS நிறுவனம் சென்னை முழுவதும் 68 சிறப்பு முகாம்களை நடத்தி வருகின்றது. 

• வாகன உரிமையாளர்கள் எளிதில் தொடர்புகொள்ள Toll Free எண்கள மற்றும் 24 மணிநேரமும் இயங்கக்கூடிய Road Side Assistance வசதிகளையும் ஏற்படுத்தியிருக்கின்றன.

• Honda மோட்டார் சைக்கிள் நிறுவனம் சென்னை முழுவதும் Mobile Service முகாம்களை ஆரம்பித்து நடத்தி வருகின்றது. சென்னையில் மழை பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் டிசம்பர் 18 வரையில் இந்த சிறப்பு முகாம்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டோல் ஃப்ரீ எண்கள் 

ராயல் என்ஃபீல்ட் - 1800 2100 007

Cyclone Michaung: மழையால் பழுதான வாகனங்களை சரிசெய்ய சிறப்பு ஏற்பாடு; உதவி எண்கள் அறிவிப்பு - தமிழ்நாடு அரசு

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Shaktikanta Das: பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
ENG vs AUS: ஆஸ்திரேலியா அழுகை! டக்கெட் சூரசம்ஹாரம்! 351 ரன்களை குவித்த இங்கிலாந்து
ENG vs AUS: ஆஸ்திரேலியா அழுகை! டக்கெட் சூரசம்ஹாரம்! 351 ரன்களை குவித்த இங்கிலாந்து
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
‘ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...?’: கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் – என்ன காரணம்?
‘ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...?’: கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் – என்ன காரணம்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Three Language Policy | மாநில அதிகாரம் பறிப்புசெக் வைத்த மத்திய அரசுCBSE-ல் நடக்கும் ட்விஸ்ட் | Hindi | DMK | UdhayanidhiDurai Murugan Slams Vijay: போட்டுடைத்த கமல்  ”விஜய்க்கு 2026-ல புரியும்” டார்கெட் செய்த சாட்டை!PM Modi with pawan kalyan:  காவி உடையில் ENTRY! மோடி சொன்ன வார்த்தை? உண்மையை உடைத்த பவன்கல்யாண்!Udhayanidhi Vs Alisha BJP | ”தமிழ்தாய் வாழ்த்து பாட முடியுமா?” உதயநிதிக்கு அலிஷா சவால் | DMK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Shaktikanta Das: பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
பிரதமரின் முதன்மை செயலாளரானார் சக்திகாந்த தாஸ்.! காஞ்சிபுரம் டூ மோடி ஆஃபிஸ்...
ENG vs AUS: ஆஸ்திரேலியா அழுகை! டக்கெட் சூரசம்ஹாரம்! 351 ரன்களை குவித்த இங்கிலாந்து
ENG vs AUS: ஆஸ்திரேலியா அழுகை! டக்கெட் சூரசம்ஹாரம்! 351 ரன்களை குவித்த இங்கிலாந்து
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
JEE Main 2025: ஜேஇஇ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்னும் சில நாட்கள்தான்!- வழிமுறை இதோ!
‘ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...?’: கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் – என்ன காரணம்?
‘ஏர் இந்தியா நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா...?’: கடுமையாக சாடிய மத்திய அமைச்சர் – என்ன காரணம்?
கண்ட்ரோல் ரூம்க்கு போன கால்.. முதல்வருக்கு கொலை மிரட்டல்.. ஜெயில் கைதியின் ஸ்கெட்ச்!
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
ENG vs AUS: ஸ்மித் பாய்சை சுளுக்கெடுக்கும் பென் டக்கெட்! 350 ரன்களுக்கு மேல் குவிக்குமா இங்கிலாந்து?
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Watch Video: நட்ட நடுரோட்டில் கிஸ் அடிக்க வந்த ரசிகர்.. தெறித்து ஓடிய பூனம் பாண்டே
Trump's Tension: ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
ட்ரம்ப்பை டென்ஷனாக்கிய பொடியன்.!?! ஆத்திரத்தில் அவர் என்ன செய்தார் தெரியுமா.?
Embed widget