மேலும் அறிய

Kanchipuram Lakes: மீண்டும் அடித்து வெளுக்கும் மழை.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் நிலவரம் இதோ..!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் 71 ஏரி முழு கொள்ளளவை எட்டி உள்ளது. பாலாறு படுக்கைக்கு கீழ் வரும் ஏரிகளில் 102 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டி உள்ளது.

காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் ஏரிகள் நிறைந்த மாவட்டங்களாக இருந்து வருகிறது. பாலாறு படுக்கைக்கு கீழ் வரும் ஏரிகள் காரணமாக அதிக அளவு விவசாயமும், காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் பருவ மழை காலங்களில் நிரம்பும் ஏரிகளை நம்பி தான் , காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சார்ந்த விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். அதேபோல காஞ்சிபுரம் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த குடிநீர் ஆதாரமாகவும் சில ஏரிகள் இருந்து வருகின்றன. 

Kanchipuram Lakes: மீண்டும் அடித்து வெளுக்கும் மழை.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் நிலவரம் இதோ..!
 
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தை சேர்ந்த பிரதான ஏரிகள்
 
காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தின் பெரிய ஏரியாக மதுராந்தகம் ஏரி, தென்னேரி, உத்திரமேரூர் ஏரி, ஸ்ரீபெரும்புதூர் ஏரி, எடமிச்சி ஏரி, தாமல் ஏரி  ஆகியவை உள்ளன. 
 
வடகிழக்கு பருவமழை
 
கடந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை அக்டோபரில் தொடங்கியது. எதிர்பார்த்ததை விட தமிழகத்தில் நல்ல மழை பெய்தது. இந்தியாவில், தென்மேற்கு பருவமழை, வடகிழக்கு பருவமழை என்ற இரு பருவ காலங்கள் மூலமாக மழை பெய்து வருகிறது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வடகிழக்கு பருவமழைதான் அதிக அளவில் கைகொடுக்கும். வடகிழக்கு பருவமழை அக்டோபரில் தொடங்கி டிசம்பர், ஜனவரி மாதங்கள் வரையில் நீடிக்கும். அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Kanchipuram Lakes: மீண்டும் அடித்து வெளுக்கும் மழை.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் நிலவரம் இதோ..!
 
கடந்த ஓராண்டு மேலாக அவ்வப்பொழுது மழை பெய்து வந்ததால், ஏரிகள் முழுமையாக வற்றாமல் இருந்து வந்தன. இந்நிலையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் 71 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன.
 
பாலாறு படுகை ஏரிகள்
 
காஞ்சிபுரம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் சுமார் 1022 ஏரிகள் உள்ளன. அவற்றில் 102 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த 42 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த 29 ஏரி, சென்னையை மாவட்டத்தை சேர்ந்த 1 ஏரி, திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த 30 ஏரிகள் ஆகியவை முழு (100 சதவீத கொள்ளளவு) கொள்ளளவை எட்டியுள்ளது. 
 
Kanchipuram Lakes: மீண்டும் அடித்து வெளுக்கும் மழை.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் நிலவரம் இதோ..!
 
76% - 99%  கொள்ளளவை எட்டிய ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 33 ஏரிகள் , செங்கல்பட்டு மாவட்டத்தில் 43 ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில்  32 ஏரிகள், சுமார் 76% சதவீதத்திலிருந்து 99% சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.

Kanchipuram Lakes: மீண்டும் அடித்து வெளுக்கும் மழை.. காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட ஏரிகளின் நிலவரம் இதோ..!
 
51%- 75% கொள்ளளவை எட்டிய ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 143 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 92 ஏரிகள், திருவண்ணாமலையில் 10 ஏரிகள், சுமார் 51 சதவீதத்திலிருந்து 75 சதவீத கொள்ளளவை எட்டியுள்ளது.
 
26%- 50% கொள்ளளவை எட்டிய ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 118 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 162 ஏரிகள்,  திருவண்ணாமலை மாவட்டத்தில் 10 ஏரிகள், திருவள்ளூர் மாவட்டத்தில் 1 ஏரி ,26%- 50% கொள்ளளவை எட்டியுள்ளது.
 
25 சதவீதத்திற்கும் கீழ் உள்ள ஏரிகள்
 
காஞ்சிபுரம் மாவட்டத்தில் 45 ஏரிகள், செங்கல்பட்டு மாவட்டத்தில் 202 ஏரிகள், திருவண்ணாமலை மாவட்டத்தில் 0 ஏரி, திருவள்ளூர் மாவட்டத்தில் 3 ஏரிகளில் 25 சதவீதத்திற்கும் நீர் உள்ளது. தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருவதால், கால்வாய்களில் நீர்வரத்து அதிகரிக்க துவங்கியிருப்பதால், விரைவாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் இன்னும் பல ஏரிகள் நிரம்பும் என பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Aadhav arjuna Resign VCK : ஆதவ் அர்ஜுனா ராஜினாமா!’’எனக்கு உள் நோக்கமா?’’திருமாவுக்கு பதிலடி!Aadhav Arjuna Joins Vijay TVK : விசிகவுக்கு டாட்டா!தவெகவில் இணையும் ஆதவ்?TARGET திருமாPriyanka Gandhi Palestine bag : Shankar Jiwal Daughter : தமிழ்நாடு DGP-யின் மகள்..ஜெயம் ரவி ஹீரோயின்!யார் இந்த தவ்தி ஜிவால்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா?
ஆவின் பாலின் விலை மறைமுகமாக ஏற்றப்படுகிறதா? அமைச்சர் விளக்கம்!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
இனி, பிச்சைக்காரர்களுக்கு பணம் கொடுத்தால் கேஸ்தான்.. உஷாரய்யா உஷாரு!
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க:  இளையராஜா
Ilaiyaraaja: நான் என் மரியாதையை விட்டுக்கொடுப்பவன் அல்ல; வதந்தியை நம்பாதீங்க: இளையராஜா
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
போதை பொருள் கடத்தல் தலைவனுடன் தொடர்பு? - அண்ணாமலை காட்டும் ஆதாரம்! அன்பில் மகேஸுக்கு தலைவலி
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
பிரதமர் மோடி எடுத்த ஸ்டெப்! ஓகே சொன்ன இலங்கை அதிபர்! மீனவர்கள் பிரச்சினைக்கு வருகிறது முடிவு! 
"இங்கிலீஷ் நல்லாதான் பேசுறாங்க.. ஆனா, செயல் சரி இல்ல" நிர்மலா சீதாராமனை பங்கமாக கலாய்த்த கார்கே!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
TN Rain Alert: 2 நாட்களுக்கு கனமழை இருக்கு; சென்னைக்கு எப்படி?வானிலை அப்டேட்!
"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்
Embed widget