New Year Restrictions: இளைஞர்களே உஷார்.. ECR, OMR, GST சாலையில் கட்டுப்பாடுகள் என்னென்ன ?
2025 New Year Celebration Restrictions in Chennai: புத்தாண்டு விழாவை முன்னிட்டு இசிஆர், ஓஎம்ஆர் மற்றும் ஜிஎஸ்டி சாலையில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
New Year Eve Restrictions in Chennai: புத்தாண்டு கொண்டாட்டம் 2025 முன்னிட்டு 31.12.2024 பிற்பகல் முதல் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள முக்கிய சாலை ECR, OMR & GST மற்றும் மாவட்டத்தின் பலமுக்கிய சந்திப்புகள் உட்பட மொத்தம் 30 க்கும் மேற்பட்ட இடங்களில் காவலர்கள் வாகன தணிக்கையில் ஈடுபடுத்தப்படுவார்கள். மேலும் மாவட்டத்தில் சுமார் 180-க்கும் மேற்பட்ட மிக முக்கிய இடங்கள் கோயில்கள் தேவாலயங்கள் போன்றவற்றிற்கு ரோந்து காவலர்கள் நியமித்து தீவிர ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளார்கள்.
மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்ட பாதுகாப்பு பணிக்கு காவல் கண்காணிப்பாளர்-1, கூடுதல் காவல் கண்காணிப்பாளர்-1, காவல்துறை கண்காணிப்பாளர்கள்-6, ஆய்வாளர்கள் - 20 மற்றும் 645 காவலர்கள் என மொத்தம் 671 காவல் அதிகரிகள் ஆகிரர்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
பொதுமக்கள் புத்தாண்டு கொண்டாடத்தின்போது கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு வழிமுறைகள் பின்வருமாறு :
ECR, OMR மற்றும் GST சாலைகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் Beach Resorts உணவகங்களில் புத்தாண்டு கொண்டாட்டமானது 01.01.2025 தேதி 12.30 மணிக்கு மேல் எந்தவித நிகழ்ச்சியும் கொண்டாட்டங்களும் பொதுமக்களுக்கு இடையூறு மற்றும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் பட்டாசு வெடித்தல் கூடாது.
இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் வரும் நபர்கள் மதுபோதையில் வாகனத்தை இயக்கக்கூடாது. மீறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட நபர் மீது சட்டப்படி வழக்குப்பதிவு செய்யப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும்.
கிழக்கு கடற்கரை சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலைகள் முறையே திருவிடந்தை மற்றும் SSN கல்லூரி அருகில் வாகன தணிக்கை செய்யப்பட்டு புத்தாண்டு கொண்டாட்டத்திற்கான உணவகம் / தங்கும் விடுதிகளில் முறையான முன்பதிவு பெற்ற நபர்கள் மட்டுமே மாமல்லபுரம் பகுதிக்கு அனுமதிக்கப்படுபவர்.
அபராதம் விதிக்கப்படும்
இரண்டு சக்கர வாகனத்தை இயக்கும்பவரும் பின் அமர்ந்துவரும் நபரும் கட்டாயம் தலைக்கவசம் அணிந்தும் நான்கு சக்கர வாகனத்தை இயக்குபவர் சீட் பெல்ட் அணிந்திருக்க வேண்டும். மீறுபவர்கள் மீது தக்க வழக்கு பதிவு செய்யப்படும்.
இளைஞர்கள் புத்தாண்டை கொண்டாடும் விதமாக பெண்களை கேலி மற்றும் கிண்டல் செய்வதை தவிர்க்க வேண்டும். மீறும் நயர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
விதிமீறல்கள் கூடாது:
ECR, OMR மற்றும் GST சாலைகளில் புத்தாண்டு கொண்டாடும் விதமாக வாகன பந்தயம் மற்றும் சாகசத்தில் (Bike Race) ஈடுபடக்கூடாது. மீறும் நபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வாகனத்தை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்புவிக்கப்படும்.
மேலும் புத்தாண்டை முன்னிட்டு பொதுமக்கள் திருவிடந்தை முதல் கல்ப்பாக்கம் வரையிலான கடற் பகுதிகளில் குளிக்கவும் மற்றும் படகில் கடலுக்குள் அழைத்து செல்வதையும் தடைசெய்யப்பட்டுள்ளது. மீறுபவர்கள் மீது தக்க சட்ட நடவடிக்கை எடுத்து படகுகள் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும்
காவல்துறை வேண்டுகோள்
இந்த பண்டிகை நாட்களை மகிழ்ச்சியாகவும் பாதுகாப்பாகவும் கொண்ட இந்த பண்டிகை நாட்களில் எவ்வித அசம்பாவிதமும் இன்றி கடந்து செல்ல காவல் துறைக்கு ஒத்துழைப்பு நல்குமாறும் செங்கப்பட்டு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
தங்கள் பகுதிகளில் செயல்படும் பொழுது போக்குதலங்கள் மற்றும் விடுதிகள் மேற்கூறிய விதிமுறைகளை மீறினால் அதுகுறித்தும், மதுபோதையில் வாகனத்தை செலுத்துதல் மற்றும் ஊகன் சாகசங்களில் எடுபடுதல் போன்ற இளைஞர்களின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் குறித்தும் பொதுமக்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களில் நேரடி கண்காணிப்பில் இலங்கும் HELLO POLICE எண்.7200102104-க்கு எவ்வித தயக்கமுமின்றி தொலைபேசி அல்லது வாட்ஸ்ஆப் வாயிலாக தகவல் தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் தொடர்புக்கு :
கால் கட்டுபாட்டு அறை தனிப்பிரிவு அலுவலகம் Hello Police - 044-295408880, 044-29540555/777, 7200102104