Watch video: மாமல்லபுரத்தில் கார் மோதி இறந்த குரங்கு.. சோகத்துடன் பாசப்போராட்டம் நடத்திய சக குரங்குகள்!
இறந்த குரங்குக்கு அருகில் கூட்டமாக நின்று சோகத்துடன் பாசப்போராட்டம் நடத்திய சக குரங்குகள்..
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் கிழக்கு ராஜ வீதியில் நேற்று குரங்கள் கூட்டம், கூட்டமாக சாலையை கடந்து சென்று கொண்டிருந்தது. அப்போது ஒரு குரங்கு திடீரென சுற்றுலா வந்த ஒரு காரின் சக்கரத்தில் சிக்கி, தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தது. அப்போது சாலையை கடக்க முயன்ற மற்ற குரங்குகள் கார் சக்கரத்தில் சிக்கி இறந்த குரங்குக்கு அருகில் பொதுமக்கள் யாரையும் நெருங்க விடாமல் கூட்டமாக கூடி நின்று சூழ்ந்தபடி அமைதியாக இருந்தன.
VK Sasikala on MGR Birth Anniversary : “மீண்டும் எம்.ஜி.ஆர் ஆட்சியைக் கொண்டு வருவோம்”- சசிகலா உறுதி
15-க்கும் மேற்பட்ட குரங்கள் அங்கும், இங்கும் பரிதவித்தன. பொதுமக்கள் சிலர் இறந்த குரங்கை அடக்க செய்ய முயற்சித்து அருகில் நெருங்க முயன்றபோது யாரையும் குரங்கள் அருகில் நெருங்க அனுமதிக்கவில்லை. துரத்தின. ஆதனால் சுற்றி நின்ற பொதுமக்கள் பலர் செய்வதறியாது நின்று கொண்டிருந்தனர். பிறகு தகவல் அறிந்து மாமல்லபுரம் பேரூராட்சி செயல் அலுவலர் கணேஷ், பேரூராட்சி துப்புரவு ஆய்வாளர் ரகுபதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேரூராட்சி வாகனத்தில் இறந்த குரங்கை எடுத்துச்சென்று கடற்கரை சாலையில் உள்ள ஒரு இடத்தில் மாலை அணிவித்து, பால் ஊற்றி, கற்பூரம் ஏற்றி அந்த குரங்கினை நல்லடக்கம் செய்தனர்.
மாமல்லபுரத்தில் கார் மோதி குரங்கு பலி
— Kishore Ravi (@Kishoreamutha) January 21, 2022
இறந்த குரங்கு அருகில் கூட்டமாக நின்று சோகத்துடன் பாசப்போராட்டம் நடத்திய சக குரங்குகள்! pic.twitter.com/5i5cNWrq6w
குரங்கு அடக்கம் செய்ய எடுத்துச்செல்லப்பட்ட பிறகும் சக குரங்குகள், சம்பவம் நடந்த இடத்தைவிட்டு அகன்று செல்லாமல் அங்கேயே சுற்றி, சுற்றி வந்த காட்சி பார்ப்போரை மனம் உருகச் செய்தது. ஒரு மணிநேரம் அங்கு நடந்த குரங்குகளின் பாசப்போராட்டம் அவ்வழியாக சென்றவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.
மேலும் படிக்க: 32 ஆண்டுகளுக்கு முன்... தனது முதல் நேர்காணலில் சச்சின் என்ன சொன்னார் தெரியுமா?
Alanganallur Jallikattu : விடாமல் போராடிய இளைஞர்.. தூக்கியெறிந்த காளை
Vadalur Vallalar Jothi Dharisanam | ’விலக்கப்பட்ட 7 திரைகள்’ தெரிந்த ஜோதி தரிசனம்!
Zee Tamil Controversy | குழந்தைகளின் காமேடி ஷோ! ஜீ நிறுவனம் 7 நாளில் பதிலளிக்க நோட்டீஸ்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்