நாளை அமெரிக்கா செல்லும் முதலமைச்சர் ஸ்டாலின்! அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனை! நடந்தது என்ன?
மு.க ஸ்டாலின் அமெரிக்கா பயணம் - அமைச்சர்களுடன் ஆலோசனை
தமிழகத்தை 2030 ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதார மாநிலமாக உயர்த்த மு.க ஸ்டாலின் இலக்கு நிர்ணயித்துள்ளார். அதன் ஒரு பகுதியாக அபுதாபி , ஜப்பான் , சிங்கப்பூர் , ஸ்பெயின் , துபாய் உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கும் முதலமைச்சர் பயணம் மேற்கொண்டு முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுத்தார்.
சென்னையில் கடந்த ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடும் , முதலீட்டாளர்கள் சந்திப்புகளும் நடத்தப்பட்டு, ரூ.9 லட்சம் கோடிக்கும் அதிகமான முதலீடுகளுக்கு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனை தொடர்ந்து உயர்தர வேலைவாய்ப்பு, முதலீடு ஆகியவற்றை நோக்கமாக கொண்டு, முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அமெரிக்கா செல்வதாகவும் அறிவிக்கப்பட்டது.
அறிவிப்பை தொடர்ந்து , நாளை ( 27.8.24 ) அமெரிக்கா புறப்பட உள்ள நிலையில் கட்சி பணிகளை ஒருங்கிணைத்து மேற்கொள்வது குறித்து அமைச்சர்கள் மற்றும் கட்சியின் நிர்வாகிகளுடன் அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.
2026 சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் பொருட்டு கட்சியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாறுதல்கள் குறித்து திமுக தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரை செய்ய இந்த குழு அமைக்கப்பட்டது. இந்த குழு ஏற்கனவே திமுகவை சார்ந்த சார்பு அணிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், இந்த குழு இன்று ஆதி திராவிடர் நல குழு, விவசாய அணி, விவசாய தொழிலாளர் அணி ஆகிய அணிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
மக்களவைத் தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பதற்காக அமைக்கப்பட்ட ஒருங்கிணைப்புக் குழு, தனது பணிகளை மிகச் சிறப்பாகச் செய்தது எனவும் அந்த வகையில், வரும் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில், கட்சியில் மேற்கொள்ள வேண்டியமாறுதல்கள், அமைப்பு ரீதியான சீரமைப்புகளை கட்சித் தலைவருக்கும், தலைமைக்கும் பரிந்துரைக்கவும், உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் ஒருங்கிணைப்புக் குழு அமைக்கப்படுகிறது என்றும்
இந்தக் குழுவில் அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின் இடம்பெற்றுள்ளனர்.