மேலும் அறிய

Metro Time Table for Pongal; பொங்கல் விடுமுறை நாட்களில் மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்... வெளியான முக்கிய அறிவிப்பு

பொங்கல் விடுமுறை நாட்களை ஒட்டி, சென்னை மெட்ரோ ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அது குறித்த முக்கிய அறிவிப்பை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை தொடர் விடுமுறையை ஒட்டி, சென்னையிலிருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்ட நிலையில், ஜனவரி 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரையிலான மெட்ரோ ரயில் சேவைக்கான அட்டவணையை மெட்ரோ நிர்வாகம் வெளியிட்டுள்ளது. அதன் முழு விவரங்களை காணலாம்.

14, 15, 16-ம் தேதிகளுக்கான மெட்ரோ ரயில் நேர அட்டவணை

பொங்கல் பண்டிகையை ஒட்டி, செவ்வாய், புதன், வியாழன் தவிர, வெள்ளிக்கிழமையும் விடுமுறை நாளாக தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது. இந்த தொடர் விடுமுறை காரணமாக, பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட, சென்னையிலிருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். இதனால், சென்னை நகரம் வெறிச்சோடி காணப்படுகிறது. இந்த நிலையில், பயணிகளின் வருகை குறைவாகவே உள்ளதாக, மெட்ரோ ரயில் சேவைக்கான நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, 14,15 மற்றும் 16ம் தேதிகளில் ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஞாயிறு அட்டவணை

  • காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்
  • காலை 5 முதல் மதியம் 12 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயங்கும்
  • மதியம் 12 முதல் இரவு 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்
  • இரவு 8 முதல் 10 மணி வரை 10 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்
  • இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்

17-ம் தேதிக்கான மெட்ரோ ரயில் அட்டவணை

தமிழ்நாடு அரசால் விடுமுறை நாளாக அறிவிக்கப்பட்டுள்ள 17-ம் தேதி, அதாவது வெள்ளிக்கிழமை, மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சனிக்கிழமை அட்டவணை

  • காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்
  • காலை 5 முதல் 8 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயங்கும்
  • காலை 8 முதல் 11 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயங்கும்
  • காலை 11 முதல் மாலை 5 மணி வரை 7 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்
  • மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயங்கும்
  • இரவு 8 முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்
  • இரவு 10 முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படும்

மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்தும் பயணிகளின் வசதிக்காக, மெட்ரோ ரயில் நிர்வாகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

இதையும் படிங்க: Gold Rate Increase; ஏறுமுகத்தில் தங்கம் விலை... சோக முகத்தில் இல்லத்தரசிகள்...

தலைப்பு செய்திகள்

"காவல்துறை அராஜகம் ஒழிக" கழிவறையில் சோதனை செய்து பெண்கள் கைது !! கொந்தளித்த ஆர்ப்பாட்டகாரர்கள்
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Gold Rate: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரம்.! மாலை நேரத்தில் இன்ப அதிர்ச்சி கொடுத்த விலை!
Chennai Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க.. சென்னையில் நாளை 9 மணி முதல் மின்தடை!
Chennai Power Cut: செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க.. சென்னையில் நாளை 9 மணி முதல் மின்தடை!
Anbil Mahesh Case:
Anbil Mahesh Case: "ஆளுநர் அதிகாரம் பற்றி திமுக எப்போது பேச ஆரம்பித்தது?" அன்பில் மகேஷ் வழக்கில் ஐகோர்ட் சரவெடி!

வீடியோ

Nepal Flood | அதிகாலையில் திடீர் வெள்ளம் அலறியடித்து ஓடிய மக்கள் நேபாளத்தில் மீண்டும் பேரதிர்ச்சி!
லவ் டார்ச்சர் கொடுத்த இளைஞர் இளம்பெண் விபரீத முடிவு அடித்தே கொன்ற உறவினர்கள்!
கோவிலுக்குள் பாலியல் தொல்லை சிறுமிக்கு நேர்ந்த கொடூரம் அதிர்ச்சியூட்டும் CCTV காட்சிகள்!
அன்று இந்தியாவுக்கு நெருக்கடி இன்று ரஷ்யாவுடன் டீல் அந்தர் பல்டி அடித்த ட்ரம்ப்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
TN Governor Rajendra Arlekar: தமிழகத்திற்கு முழு நேர ஆளுநராக அர்லேகர் நியமனம்.. யார் இவர்?
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
CM Vijay: கோவை செல்லும் முதல்வர் விஜய்.. பயணத் திட்டம் விவரம் இதோ!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
DMK: தவெக போடும் பிஸ்கட்டுக்காக திமுகவை விமர்சிக்க வேண்டாம்! ரஜினி ஸ்டைலில் மாணிக்கம் தாகூருக்கு பதிலடி!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
EPS-க்கு எதிராக ரகசிய மீட்டிங்..! அதிமுக-வில் விரைவில் வெடிக்கப்போகும் பூகம்பம்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
Holiday: தொடர்ந்து 4 நாட்கள் பள்ளிகள் விடுமுறை... குஷியில் மாணவர்கள், அரசு ஊழியர்கள்!
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
ரூபாய் 3.5 லட்சம்தான் பட்ஜெட்.. வாகன ஓட்டிகளின் ட்ரீம் பைக் Harley-Davidson X440 T..! சிறப்புகள் இத்தனையா?
விருதுநகர் கல்லூரி மாணவர்களுக்கு நேரடி பேருந்து சேவை: அமைச்சர் கீர்த்தனா தொடங்கி வைத்தார்!

Embed widget