மேலும் அறிய
Advertisement
"தமிழ்மண்ணில் விண்வெளி ஆராய்ச்சி அதிகம் நடக்கவில்லை" - மயில்சாமி அண்ணாதுரை வேதனை
இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்கள் பங்கு அதிகமாக இருந்தாலும் கூட தமிழக மண்ணில் விண்வெளி ஆராய்ச்சி குறித்தான பணிகள் அதிகமாக நடைபெறவில்லை என்று மயில்சாமி அண்ணாதுரை வேதனை கூறியுள்ளார்.
சென்னை மாநகர காவல் துறை சார்பில் மேற்கு தாம்பரம் பகுதியில் , உள்ள தனியார் கல்லூரியில் சிற்பி திட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கு தேசப்பற்று ஊக்குவிக்கும் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் சென்னையில் உள்ள 100 அரசு பள்ளிகளை சேர்ந்த 5000 மாணவர்கள் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (ஐஎஸ்ஆர்ஓ) முன்னாள் இயக்குநர் மயில்சாமி அண்ணாதுரை, பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பின் (டிஆர்டிஓ) இராணுவ விஞ்ஞானி வி.டில்லிபாபு, சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால், ஸ்ரீ சாய்ராம் கல்வி குழும தலைமை செயல் அதிகாரி சாய்பிரகாஷ் லியோ முத்து, சென்னை மாநகர காவல் துறை தலைமை இடம் இணை ஆணையர் சாமுண்டீஸ்வரி, உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதில் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யா மொழி அரசு பள்ளி மாணவர்களுடன் கலந்துரையாடினார்,
அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி, 100 அரசு பள்ளியிலிருந்து ஒவ்வொரு பள்ளியிலும் சுமார் 50 மாணவர்கள் என 5000 மாணவர்களை தேர்ந்தெடுத்து மாணவ செல்வங்களுக்கு ஒவ்வொரு புதன்கிழமை பயிற்சி மையங்கள் நடத்தப்படுகின்றன. அதில் எவ்வாறு ஒழுக்கமாக வாழ வேண்டும், எவ்வாறு உடற்பயிற்சிகள் மேற்கொள்ள வேண்டும, யோகா செய்வது குறித்து பலவித கருத்துக்களை அவர்களுக்கு சொல்லி தருவதோடு பயிற்சிகளும் வழங்கப்படுகிறது.
இதை நல்ல விதமாக வடிவமைத்துள்ள சென்னை காவல் துறை உயர் அதிகாரிகளுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வர் அறிவித்ததன் படி 4.25 கோடி செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் தாக்கத்தை பொறுத்து வரும் காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களை அதிக அளவில் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கும் பயிற்சிகள் கொடுக்கப்படும். சிற்பி திட்டம் மூலமாக பயிற்சி எடுக்கும் மாணவர்கள் எப்படி ஒழுக்கமாக இருக்க வேண்டும், தேச தேசப்பற்றை உருவாக்க வேண்டும், போதைப் பொருட்களை எப்படி ஒழிக்க வேண்டும் போன்ற கருத்துக்களை உள்வாங்கி அவர்கள் செல்லும் பள்ளிகளில் சென்று மாணவர்களிடையே உரையாடல் செய்து எடுத்துச் சொல்லும் நல்ல விஷயமாக அமைந்துள்ளது.
மேலும் மாணவர்களை சுற்றாதளங்களுக்கு அழைத்துச் சென்று அங்கு இருக்கும் வரலாற்றுகள் குறித்தும் அவர்களுக்கு எடுத்துரைக்கப்படும்.நல்ல சமூகத்தை முன்னெடுத்து செல்லக்கூடிய நல்ல ஒரு திட்டமாக இது உள்ளது. வருங்காலங்களில் இத்திட்டத்தினை சென்னை மட்டுமில்லாமல் மற்ற மாவட்ட அரசு பள்ளிகளிலும் செயல்படுத்தப்படும் இவ்வாறு தெரிவித்தார்.
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை அளித்த பேட்டியில்,
இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் மிக முக்கியமான நாடாக இந்தியாவை உருவாக்கி உள்ளோம் இதற்கு முக்கிய காரணம் நம் நாட்டிலேயே செய்த பல பரிசோதனைகள் மற்றும் சாதனைகள் தான். இது போன்ற சாதனைகள் எல்லா துறையிலும் பண்ண முடியும். இதனால் நாமும்,நாடும் முன்னேற முடியும். இதன் மூலம் தேசப்பற்றை புதிய பரிமாணத்தில் கொண்டு செல்ல முடியும் இதனை மாணவ செல்வங்கள் தன்னுடைய படிப்புடன் சேர்ந்து தேசப்பற்றை முன்னெடுத்துச் செல்பவர்களாக விளங்குவதை இந்த சிற்பி திட்டத்தின் மூலம் தொடங்கப்பட்டுள்ளது,
இந்தியாவில் உள்ள முன்னணி துறைகளில் விண்வெளி ஆராய்ச்சி துறையும் ஒன்று நம் நாட்டில் இருந்து விண்வெளிக்கு இன்னும் மனிதன் மட்டும் தான் அனுப்பப்படவில்லை மற்ற அனைத்து முயற்சிகளிலும் இந்தியா தன்னிறைவு பெற்றுள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் தமிழர்கள் பங்கு அதிகமாக இருந்தாலும் கூட தமிழக மண்ணில் விண்வெளி ஆராய்ச்சி குறித்தான பணிகள் அதிகமாக நடைபெறவில்லை. இந்த நிலையில் குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் ஏவுதளம் அமைந்த உடன் அதில் பல்வேறு பணிகளை தமிழக மாணவர்கள் செய்யக்கூடிய வாய்ப்புகள் கிடைக்கும். மேலும் சிக்கனமாக செயற்கை கோலை செய்து முடிக்க முடியும் இதன் மூலம் தமிழகத்தில் குலசேகரபட்டினத்தில் அமையும் ராக்கிட் ஏவுதளத்தின் இந்தியாவிற்க்கு திருப்புமுனையாக அமையும் இவ்வாறு தெறிவித்தார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சென்னை
தேர்தல் 2024
தேர்தல் 2024
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion