மேலும் அறிய
Advertisement
மின்சாரம் தாக்கி 10 மாடுகள் பலி - மதுராந்தகம் அருகே சோகம்
பத்து மாடுகள் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்தை செய்யூர் தேவராஜபுரத்தைச் சேர்ந்தவர்கள் சீனிவாசன், , ராமசாமி , உள்ளிட்ட ஏழு பேர்களின் மாடுகள் நேற்று மேச்சலுக்காக அருகில் உள்ள வயல்வெளி பகுதிக்கு சென்றுள்ளது. மேச்சலுக்குச் சென்ற மாடுகள் மீண்டும் வீடு திரும்பும் பொழுது வயல்வெளியில் பகுதியில் அறுந்து கிடந்த மின் கம்பியை மிதித்ததில் 10 மாடுகள் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானது. தகவல் அறிந்து வந்த மாட்டின் உரிமையாளர்கள் இறந்து கிடந்த மாடுகளை மீட்டனர் .
மின்சாரத் துறையின் மெத்தன போக்கினால் ஒயர்கள் அறுந்து விழுந்து மாடுகள் இருந்துள்ளதாகவும், தங்களுக்கு உரிய இழப்பீடு மின்சாரத்துறை வழங்க வேண்டும் என பாதிக்கப்பட மக்கள் செய்யூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாட்டின் உரிமையாளர்கள் நம்மிடம் கூறுகையில், “எங்களுடைய வாழ்வாதாரமாக மாடு இருந்து வருகிறது. இதுபோல எதிர்பார்க்காத தருணத்தில் மாடு உயிரிழந்திருப்பது எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதித்து உள்ளது. எனவே தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இதில் தலையிட்டு, நிவாரணத் தொகையை ஏதாவது வழங்க வேண்டும்” என கோரிக்கை வைத்தனர்
தமிழகத்தில் 25 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம் மற்றும் கடலோர ஆந்திரப்பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதேபோல் இன்று நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர், ஈரோடு, நாமக்கல், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நீலகிரி ,கோவை, திருப்பூர், தேனி ,ஈரோடு ,சேலம் ,நாமக்கல் ஆகிய மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளது. அத்துடன் கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களிலும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை ,ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என்றும் புதுச்சேரி , காரைக்காலிலும் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
தொலைக்காட்சி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion