மேலும் அறிய
Advertisement
மேல்மருவத்தூர் ஊராட்சியின் துணை தலைவர் யாரு ..! அடிகளார் மகளா அல்லது பேரனா?
மேல்மருவத்தூர் ஊராட்சி மன்ற தலைவராக அடிகளாரின் மனைவி லட்சுமி பொறுப்பேற்றுள்ள நிலையில், துணைத் தலைவர் பதவியும் அவர்கள் குடும்பத்திற்கு செல்ல வாய்ப்புள்ளது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, நெல்லை ஆகிய மாவட்டங்களுக்கு அக்.6-ஆம் தேதியும், தென்காசி, விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களுக்கு அக்.9 ம் தேதியும் தேர்தல் நடைபெற்றது.
பொதுவாக ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் கட்சிகள் தங்களின் அடிமட்ட பலத்தை அதிகரிக்கும் வகையில் தனியாக நிற்பது வழக்கம். அதேபோல் ஒவ்வொரு ஊரிலும் புகழ்பெற்று விளங்கும் நபர்கள், பிரபலங்கள் தனித்து சுயேச்சையாக போட்டியிடுவதும் வழக்கம். அந்த வகையில் மேல்மருத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு அடிகளாரின் மனைவி லட்சுமி, போட்டியிட வேட்புமனு தாக்கல் தாக்கல் செய்திருந்தார். அவரை எதிர்த்து வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்ததால், போட்டியின்றி ஊராட்சி மன்ற தலைவர் ஆனார் லட்சுமி .
துணைத் தலைவர் யார்
இன்று மேல்மருவத்தூர் ஊராட்சியில் அடிகளாரின் மனைவி லட்சுமி ஊராட்சி மன்ற தலைவராக பதவியேற்றுக்கொண்டார். அவருடன் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் பதவி ஏற்றுக் கொண்டனர். இதனைத் தொடர்ந்து வருகின்ற 22-ஆம் தேதி மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இந்த மறைமுக தேர்தலில் மேல்மருவத்தூர் ஊராட்சியின் துணைத்தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
மேல்மருவத்தூர் ஊராட்சியில் மொத்தம் 6 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளது. 6 வார்டுகளில் 3 வார்டு உறுப்பினர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. வார்டு எண் 2-இல் போட்டி இல்லாமல் வெற்றி பெற்ற ஸ்ரீ தேவி அடிகளாரின் மகள் ஆவார். அதேபோல், வார்டு எண் 6 இல் போட்டியிட்டு வெற்றிபெற்ற அகத்தியன், அடிகளாரின் மகன் வழி பேரன் ஆவர். ( அடிகளாரின் மூத்த மகன் கே.ப. அன்பழகனின் மகன் ). மற்ற வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களும் அடிகளாரின் ஆதரவாளர்கள் என கூறப்படுகிறது. இதனால் இருவரில் ஒருவர் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப் பட வாய்ப்பு உள்ளது.
சொத்து மதிப்பு குழப்பம்
முன்னதாக கடந்த மாதம் 16-ஆம் தேதி பங்காரு அடிகளாரின் மனைவி தாக்கல் செய்த வேட்புமனுவில் தனது மொத்த சொத்து மதிப்பு அசையும் சொத்துக்கள் - 75,149,141 , அசையா சொத்துக்களின் மதிப்பு - 160,280,003 , இதன் கூட்டுத்தொகை 23,54,29,144 வருகிறது. ஆனால் வேட்பு மனுவில் , அதற்கு பதிலாக 253,54,29,144 என தவறாக குறிப்பிடப்பட்டது. இதன் காரணமாக சமூக வலைத்தளத்தில் 250 கோடி ரூபாய் சொத்து மதிப்பு என பரவத்துவங்கியது. இதுதொடர்பாக மேல்மருவத்தூர் வட்டாரங்கள் இச்செய்தியை மறுத்து வந்தனர்.
இதனைத் தொடர்ந்து 20 ஆம் தேதி லஷ்மி மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளார். தனது அசையும் சொத்துக்களின் மதிப்பு 95,495,146 அசையா சொத்துக்களின் மதிப்பு 160,280,003 என குறிப்பிடப்பட்டுள்ளது. அதில் தனது சொத்து மதிப்பு 25,57,75,149 எனக் குறிப்பிட்டுள்ளார்.
வார்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அடிகளார் மகள் மற்றும் அவரை சார்ந்தோர் சொத்து மதிப்பு 133,409,870 என வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் அடிகளாரின் பேரனான அகத்தியன் சொத்து மதிப்பு 6,91,45,207 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேல்மருவத்தூர்
செங்கல்பட்டு மாவட்டம், சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது மேல்மருவத்தூர். இங்குள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடம்தான் இந்த ஊரின் அடையாளமாக தெரிவித்து வருகிறது. தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் அதிக அளவில் இங்கு வருகிறார்கள். அதிக வருமானம் உள்ளதால், ஆதிபராசக்தி அறக்கட்டளை மூலமாக மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, சி.பி.எஸ்.இ பள்ளிகள், மருத்துவமனைகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவை இயங்குகின்றன.
இந்தக் கோயிலுக்கு குடியரசுத்தலைவர், முதலமைச்சர்கள், அரசு உயர் அதிகாரிகள், நீதிபதிகள் , தமிழகத்தை சேர்ந்த அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் இக்கோவிலுக்கு வர தவறியது கிடையாது. இக்கோவிலை சுற்றிவட்டார ஊர்களில், உள்ள பகுதிகளில் இயங்கி வரும் கடைகளில் ஆதிபராசக்தி புகைப்படத்தை தாராளமாக காணலாம். அதேபோல் திருமணம் உள்ளிட்ட சுப நிகழ்ச்சிகளில் மேல்மருவத்தூர் கோவிலை சார்ந்தவர்கள் இல்லாமல் நடைப்பெறுவது கிடையாது. அப்பகுதியில் பங்காரு அடிகளார் மற்றும் அவரது மகன்களான அன்பழகன் செந்தில் ஆகியோர் செல்வாக்கு மிக்கவர்களாக திகழ்ந்து வருகின்றனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion