Modi's Rhyming Tweet: மகா...மிகா...மெகா... ரைமிங்கில் ட்வீட் செய்து அசத்திய மோடி...எதை பற்றி தெரியுமா.?
இந்தியா மற்றும் அமெரிக்காவின் எதிர்கால பார்வைகள் குறித்து, ரைமிங்கில் ட்வீட் செய்து இந்திய பிரதமர் மோடி அசத்தியுள்ளார்.

இந்தியாவின் விக்சித் பாரத் திட்டத்துடன், அமெரிக்காவில் ட்ரம்ப் அரசின் ஸ்லோகனை ஒப்பிட்டு, பிரதமர் மோடி ரைமிங்கில் ட்வீட் செய்துள்ளார். அது குறித்து தற்போது பார்க்கலாம்.
பிரதமர் மோடியின் அமெரிக்க பயணம்
செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு உள்ளிட்ட நிகழ்வுகளில் பங்கேற்க பிரான்ஸ் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அங்கிருந்து 2 நாட்கள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றார். அங்கு, அமெரிக்க உளவுத்துறையின் தலைவராக தேர்வாகியுள்ள துளசி கப்பார்ட், அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக்கேல் வால்ட்ஸ், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனர் எலான் மஸ்க், தொழிலதிபர் விவேக் ராமசாமி ஆகியோரை சந்தித்து பேசினார். அதன் பின்னர், வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை சந்தித்து பேசிய பிரதமர் மோடி, அதன்பின் ட்ரம்ப்புடன் இணைந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
ரைமிங்கில் ட்வீட் செய்த மோடி
பின்னர், அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உடனான சந்திப்பு குறித்து ட்வீட் செய்துள்ள மோடி, அவருடனான சந்திப்பு அருமையாக இருந்ததாகவும், இந்திய-அமெரிக்க நட்புறவு குறித்த தங்கள் பேச்சு, குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கொடுக்கும் என்றும் கூறியுள்ளார்.
மற்றொரு ட்வீட்டில், அமெரிக்க அதிபர் அடிக்கடி MAGA குறித்து பேசுவதாகவும், இந்தியாவின் விக்சித் பாரத் திட்டத்தை அமெரிக்க மொழிபெயர்ப்பில் சொல்ல வேண்டுமென்றால் அது MIGA என்றும், இந்தியாவும்-அமெரிக்காவும் இணைந்து வளத்திற்கான MEGA கூட்டணி வைத்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அதாவது,
- MAGA - MAKE AMERICA GREAT AGAIN ( அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக ஆக்குங்கள் )
- MIGA - MAKE INDIA GREAT AGAIN ( 2047-ல் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் விக்சித் பாரத் திட்டத்தை, மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் )
- MEGA - MAKE EARTH GREAT AGAIN ( இரு நாடுகளும் இணைந்து உலகை சிறந்ததாக மாற்றுவது குறித்து மோடி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் )
இப்படி, ரைமிங்கில் அடித்து அசத்தியுள்ள பிரதமர் மோடியின் ட்வீட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
President Trump often talks about MAGA.
— Narendra Modi (@narendramodi) February 14, 2025
In India, we are working towards a Viksit Bharat, which in American context translates into MIGA.
And together, the India-USA have a MEGA partnership for prosperity!@POTUS @realDonaldTrump pic.twitter.com/i7WzVrxKtv
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

