மேலும் அறிய

அதானி குறித்து கேட்கப்பட்ட கேள்வி! ஆடிப்போன மோடி! செய்தியாளர் சந்திப்பை கிழித்தெடுக்கும் எதிர்க்கட்சிகள்!

இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அமெரிக்க நிதி நிறுவனங்களில் நிதி பெற்றதாக கௌதம் அதானி மீது கடந்த ஆண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

 

சோலார் எனர்ஜி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு, 250 மில்லியன் டாலர்கள் அதாவது இந்திய மதிப்பில் 2 ஆயிரத்து 100 கோடி ரூபாய்க்கு மேல் லஞ்சம் கொடுக்க திட்டமிட்டதாக,  உலகின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவரான கௌதம் அதானி மீது அமெரிக்க வழக்கறிஞர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். தாக்கல் செய்யப்பட்டுள்ள 5 குற்றப்பத்திரிகையில், அதானி உடன் சேர்ந்து இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி நிறுவனத்தின் நிர்வாகிகளான சாகர் ஆர் அதானி மற்றும் வினீத் எஸ் ஜெயின் ஆகியோர் கூட்டாட்சி சட்டங்களை மீறியதாக குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்திய அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்து அமெரிக்க நிதி நிறுவனங்களில் நிதி பெற்றதாக கௌதம் அதானி மீது கடந்த ஆண்டு அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

ஜோ பைடன் அரசு எடுத்த நடவடிக்கைக்கு குடியரசு கட்சி தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அமெரிக்காவின் குடியரசு கட்சியை சேர்ந்த ட்ரம்ப் அதிபராக பொறுப்பேற்றதும் எஃப்.சி.பி.ஏ சட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக கையெழுத்திட்டார்.

இதுகுறித்து ட்ரம்ப் அப்போது பேசும்போது இந்த சட்டம் காகிதத்தில் நன்றாக இருக்கிறது எனவும் நடைமுறையில் பேரழிவை உண்டாக்குகிறது எனவும் தெரிவித்தார்.

மேலும் இதன் மூலம் அமெரிக்கா பெரும் அளவிலான வணிக வளர்ச்சி அடையும் எனவும் இந்த சட்டத்தை அமல்படுத்தியதால் இந்த உலகம் நம்மை பார்த்து சிரிக்கிறது எனவும் குறிப்பிட்டார்.

இந்நிலையில் அரசு முறை பயணமாக அமெரிக்கா சென்ற இந்திய பிரதமர் மோடி அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்புடன் சந்திப்பு நடத்தினார். அப்போது பல்வேறு விஷயங்கள் குறித்து அவர்கள் ஆலோசித்தனர்.

இதையடுத்து வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த மோடியிடம் அதானி மீதான அமெரிக்கா குற்றச்சாட்டுகள் குறித்து ட்ரம்ப்புடன் பேசுனீர்களா என கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த மோடி, “ஒவ்வொரு இந்தியனையும் எனது சொந்தமாகவே நான் கருதுகிறேன். தனிநபர் குறித்து இரு நாடுகளின் தலைவர்கள் ஒருபோதும் விவாதிப்பதில்லை” எனத் தெரிவித்தார்.

அதானி விவகாரம் குறித்து ட்ரம்ப்புடன் பிரதமர் மோடி பேசாமல் மவுனம் காத்தது ஏன்? என காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி கேள்வி எழுப்பியிருந்தார். இதையடுத்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் அமெரிக்காவிலும் கூட அதானியின் ஊழலை மூடிமறைத்துவிட்டார் என்று கூறினார்.

மேலும், மோடிக்கு நண்பர்களின் பைகளை நிரப்புவது 'தேசத்தைக் கட்டியெழுப்புதல்' என்றால், லஞ்சம் வாங்குவதும் நாட்டின் செல்வத்தைக் கொள்ளையடிப்பதும் தனிப்பட்ட விஷயமாக மாறிவிடும் என ராகுல்காந்தி சாடினார்.

பிரதமர் மோடியின் செய்தியாளர் சந்திப்பு குறித்து திரிணாமுல் காங்கிரஸ் எம்பி கோகலே தனது எக்ஸ் பக்கத்தில், “"பிரதமர் மோடி அமெரிக்காவில் பத்திரிகையாளர் சந்திப்பை நடத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் - கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவில் அவர் செய்யாத ஒன்று. அதனால்தான் அவர் இந்தியாவில் பத்திரிகையாளர் கேள்விகளுக்கு ஒருபோதும் பதிலளிப்பதில்லை. அதனால்தான் இந்தியாவில் அவரது 'நேர்காணல்கள்' முழுமையாக எழுதப்பட்டவை. அவர் மிகவும் கோபமாகவும், பதட்டமாகவும் இருக்கிறார்," எனத் தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
சபரிமலை பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு: கொள்முதல் நடைமுறையில் புதிய விதிகள்! விபரம் இதோ..
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
Independence Day 2026 Theme: எதிர்காலத்திற்கு உத்வேகம் அளிப்போம்.. 2026 சுதந்திர தினத்தின் தீம் என்ன?
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
இந்தியாவில் குழந்தைகள் சோசியல் மீடியா பயன்படுத்த தடையா?.. வருகிறது சட்ட மசோதா!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!
எதிரிகளை சுட்டெரிக்கும் அக்னித் தலம்: திருவண்ணாமலையில் அமித் ஷா! பரபரக்கும் அரசியல் பின்னணி!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
பாஜகவிற்கு பயந்து கூட்டத்தை புறக்கணித்த விஜய்.! இப்போ துரோகத்தை மறைக்க M.P.கூட்டமா.? திமுக கேள்வி
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
UDISE+: என்ன கொடுமை? வகுப்பறைகளில் ஏஐ; ஆனா 1 லட்சம்+ பள்ளிகளில் மாணவிகளுக்கு கழிப்பறையே இல்லை!
US Iran War: “சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
“சும்மா மேல இருந்து மட்டும் குண்டு போட்டா வேலைக்கு ஆகாது“; ட்ரம்ப்புக்கு US ராணுவ ஜெனரல் வார்னிங்
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
SBI-ல் அரசு வேலை! 1538 கிளர்க் பணியிடங்கள்- பட்டதாரிகளுக்கு அரிய வாய்ப்பு!
US Tariff on India: இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
இந்தியாவிற்கு பெரிய ஆப்பாக வைத்த US நாடாளுமன்றம்; 100% வரி விதிக்க வழிவகுக்கும் மசோதா நிறைவேற்றம்
Zelensky Serbia Weapons: பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
பலே கில்லாடி மா நீ.! ரஷ்யாவின் நட்பு நாட்டிடமே ஆயுதங்களை கேட்கும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; கிடைக்குமா.?
Lottery Martin's donation ; ”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
”லாட்டரி கிங் மார்ட்டின்” ஒவ்வொரு கட்சிக்கும் இத்தனை கோடியில் நன்கொடை கொடுத்தாரா.!! ஷாக் கொடுக்கும் பட்டியல்
Best Selling Midsize SUV: எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
எத்தன புது SUV வந்தாலும் தோத்துதான் ஓடனும்.! விற்பனையில் தொடர்ந்து முதலிடம்; அசத்தும் அந்த கார் எது.?
Embed widget