Kilambakkam Railway Station : தீர்ந்தது பிரச்சனை.. கிளாம்பாக்கம் ரயில் நிலையம், ஆகாய நடைபாதை.. ஜூலையில் திறப்பு ..
kilambakkam railway station Update: "கிளாம்பாக்கம் ரயில் நிலைய வருகின்ற ஜூலை மாதம் முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்"

சென்னை அடுத்த வண்டலூர் அருகே கிளாம்பாக்கம் பகுதியில், சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டு முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டது. பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டதிலிருந்து, பயணிகளுக்கு பல்வேறு நடைமுறை சிக்கல்கள் இருந்த வண்ணம் இருக்கிறது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலைய பிரச்சினை என்ன ? - Kilambakkam Bus Stand
கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை பொருத்தவரை பல்வேறு வசதிகள் பயணிகளைக் கவர்ந்திருக்கின்றன. ஆனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை சென்று அடைய வேண்டும் என்றால், தற்போதைய சூழலில் பேருந்து மட்டுமே ஒரே பொது போக்குவரத்தாக இருந்து வருகிறது.
கிளாம்பாக்கம் ரயில் நிலையம் - Kilambakkam Railway Station
இதனால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் எதிரில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம், அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை எழுந்தது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசும் அதற்கான நடவடிக்கையில் இறங்கியது. தெற்கு ரயில்வே நிதி ஒதுக்கி அதற்கான பணிகளை துவங்கினால், அதிகளவு நேரம் எடுத்துக் கொள்ளும் என்பதால், சிஎம்டிஏ சார்பில் 20 கோடி ரூபாய் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்காக நிதி ஒதுக்கப்பட்டது.
நடைமுறை சிக்கல்
தொடர்ந்து கடந்த ஆண்டு இறுதியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் பல்வேறு சிக்கல்கள் காரணமாக கிளாம்பாக்கம் ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதில் தொடர்ந்து பிரச்சினை நீடித்து வருகிறது. தற்போது இரண்டு பாதைகள் அமைக்கப்பட்ட பிறகும், மூன்றாவது பாதை அமைப்பதில் தாமதம் ஏற்பட்டு வருவதற்கு கிளாம்பாக்கம் நடை மேம்பாலம் தான் காரணம் என தகவல் வெளியாகியிருந்தது.
Kilambakkam உயர்மட்ட நடை பாதை - kilambakkam sky walk bridge
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில், இருந்து பேருந்து நிலையத்தின் மையப் பகுதி அடையும் வகையில், 400 மீட்டர் நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது.
நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கி ஆகியவற்றின் கூடிய நடை மேம்பாலம் அமைய உள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முதல் ரயில் நிலையம் வரை அமைக்கப்படும் உயர்மட்ட நடைபாதை சுமார் 79 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைய உள்ளது. இதற்கான பணிகளும் தொடங்கப்பட்டு வேகமாக நடைபெற்று வருகிறது.
நிலம் கையகப்படுத்துவதில் பிரச்சனை
கிளாம்பாக்கம் நடை மேம்பாலம் அமைப்பதற்காக 45 சென்ட் இடத்தை கையகப்படுத்த செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் நிலம் கையகப்படுத்தும் அறிவிப்பு ரத்து செய்யப்பட்டது.
ஆகாய மேம்பாலம் அமைக்கப்பட்ட பிறகு மூன்றாவது ரயில் பாதை அமைக்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டதால், ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதிலும் தாமதம் ஏற்பட்டது. ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தாலும், ஆகாய நடைமேடை இருந்தால் மட்டுமே பொதுமக்களுக்கு ரயில் நிலையத்தில் முழுமையான பயன் கிடைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பயன்பாட்டிற்கு வரும் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் - Kilambakkam Railway Station Opening Date
இந்தநிலையில், தற்போது கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்கான பிரச்சனைகள் தீர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்த 30 நாட்களுக்குள் அனைத்து பணிகளும் நிறைவடையும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பணிகள் நிறைவடைந்த உடன் தற்காலிக டிக்கெட் கவுண்டர் மற்றும் தற்காலிகமாக ரயில்கள் நிறுத்தும் பணி துவங்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
30 நாட்களுக்குள் அனைத்து பணிகளும் நிறைவேறும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதற்கு முன்னதாக தமிழக அரசு ஆகாய நடைமேடை அமைக்கும் பணிகளை முடிக்க வேண்டும் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக ஜூன் மாதம் முதல் வாரத்தில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் முழுமையாக முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உயர்மட்ட நடைபாதை நிலைமை என்ன ? Kilambakkam Skywalk Bridge
உயர்மட்ட நடைபாதை அமைப்பதற்கான இட பிரச்சனை தற்போது தீர்ந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பந்தப்பட்ட நிறுவனம் தடையில்லா சான்றிதழ் கொடுத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. இருந்தும் இதுவரை அந்த நிறுவனத்திற்கு எவ்வளவு தொகை என்பது மட்டுமே முடிவு செய்யப்படாமல் உள்ளது.
ஸ்கைவாக் பாலத்தில் தற்போது சில மாற்றங்களும் கொண்டுவரப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகள் அனைத்து டிராகுகளில் இருந்தும் உயர்மட்ட நடைபாதையை அடைய முடியும். பிரச்சனைகள் தீர்ந்து இருப்பதால், உயர்மட்ட நடைபெற அமைக்கும் பணியும் வேகம் எடுத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.





















