மேலும் அறிய
Advertisement
பட்டுச்சேலை எடுக்க குவியும் மக்கள்..! வாகன நெரிசலில் ஸ்தம்பிக்கும் காஞ்சிபுரம்..! விரைந்து தீர்வு காணப்படுமா ?
Kanchipuram : " பட்டு ஜவுளி கடைகள் மிகுந்த காஞ்சிபுரம் காந்திசாலையில் மணமக்கள் வீட்டார்,சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் பட்டுபடுவை எடுத்திட குவியும் பொதுமக்கள் "
பட்டு ஜவுளி கடைகள் மிகுந்த காஞ்சிபுரம் காந்திசாலையில் மணமக்கள் வீட்டார்,சுற்றுலா பயணிகள் என ஏராளமானோர் முகூர்த்த நாளை முன்னிட்டு பட்டுப்புடவை எடுத்திட குவிந்து வருவதால் போக்குவரத்து நெரிசல் மிகுந்து காணப்படுகிறது.
ஆவணி மாத சுப முகூர்த்த நாள்
காஞ்சிபுரம் ( Kanchipura News ) : பட்டு நகரம் என்று அழைக்கப்படும், காஞ்சிபுரத்தில் பட்டுப்புடவைகளை வாங்கிட வெளிமாநில, மாவட்டங்களை சேர்ந்த மக்கள் அதிகளவிலானோர் வருகைதந்து பட்டு ஜவுளி புடவைகளை வாங்கி செல்வர். இந்தநிலையில் சுபமுகூர்த்த மாதம் என்று அழைக்கப்படகூடிய ஆவணி மாதம் இந்த மாதத்தில் சுபமுகூர்த்த நாட்கள் அதிகம் வரக்கூடிய நிலையில் மணமக்கள் வீட்டார்கள் பட்டு புடவைகளை வாங்கிட அதிகளவிலானோர், காஞ்சிபுரத்தில் படையொடுத்துள்ளனர்.
கடும் போக்குவரத்து நெரிசலில் காஞ்சிபுரம்
இந்நிலையில், இன்று ஞாயிறுகிழமை பொது விடுமுறையை ஒட்டி தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, கேரளா, கர்நாடகா போன்ற பிற மாநிலத்தில் இருந்து ஏராளமானூர் பட்டுப்புடவை எடுப்பதற்கு இன்று கூடியதால், போக்குவரத்து கடும் நெரிசல். இந்த வகையிலே பட்டு ஜவுளி கடைகள் மிகுந்த காஞ்சிபுரம் காந்தி சாலை பகுதியில் காலை முதலே அதிகளவிலானோர் வருகைதந்து பட்டு ஜவுளி புடவைகளை வாங்கிட அதிகளவில் வருகை தந்து தங்களுக்கு தேவையான பட்டுப்புடவைகளை வாங்கி சென்று வருகின்றனர்.
பார்க்கிங் என்று சொல்லப்படகூடிய வாகன நிறுத்தமிடங்கள் இல்லாததால் பட்டுப்புடவைகள் எடுக்க வரக்கூடிய வாகனங்கள் அனைத்தையும் சாலையிலேயே நிறுத்தவிட்டு சென்று விடுகின்றனர். இதன் காரணமாக அச்சாலை முழுவதுமே போக்குவரத்து நெரிசலானது ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து செல்ல கூடிய நிலையானது ஏற்பட்டுள்ளது.
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி சாலை, தேரடி மூங்கில் மண்டபம், கீரை மண்டபம், மேட்டு தெரு உள்ளிட்ட முக்கிய பிரதான சாலைகள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த போலீஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், சாலையில் நிறுத்தப்படும் அந்த வாகனங்களினால் போக்குவரத்து சீர் செய்வதில் சிரமம் ஏற்பட்டு திணறி வருகின்றனர்.
வாகனம் நிறுத்தும் இடம் முறையாக பயன்பாட்டு வருமா ?
குறிப்பாக கடந்த சில நாட்களுக்கு முன்பு மேட்டுத்தெரு பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் புதிய வாகனம் நிறுத்துவதற்கான பார்க்கிங் இடம் திறக்கப்பட்டது. ஆனால் அங்கு வாகனங்களை பெரும் அளவில் யாரும் நிறுத்தாமலும் , பட்டு கடையின் உரிமையாளர்களும், அது குறித்து வெளியூர் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தாமல், கடை வாசலிலே வாகனங்கள் நிறுத்தப்பட்டு வருவது தொடர் கதையாகவே உள்ளது. வாகனங்கள் குறிப்பிட்ட வாகனம் நிறுத்தும் இடத்தில் நிறுத்தினால், போக்குவரத்து நெரிசல் சற்று குறைந்திருக்கும் என அப்பகுதி மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion