மேலும் அறிய
காஞ்சிபுரம்: சூரிய கிரகணத்தை பயன்படுத்தி கோயிலில் கைவரிசை காட்டிய திருடர்கள்
ஆறு பஞ்சலோக சிலைகள் உள்ளிட்ட பத்து சுவாமி சிலைகள் தப்பியது

கோயில் திருட்டு
காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட செவிலிமேடு பிராமணர் தெருவில் அமைந்துள்ளது 1000 ஆண்டு பழமையான அருள்மிகு காமாட்சி அம்மன் உடனுறை ஸ்ரீ கிழக்கு கைலாசநாதர் திருக்கோயில். இத்திருக்கோயிலை கடந்த 2018 மீண்டும் புனரமைக்கப்பட்டு சிவகாமி அம்பாள், நடன சுந்தரர் , நடராஜர் , முருகர் பிரதோஷ நாயகர், நாயகி உள்ளிட்ட ஆறு பஞ்சலோக சிலைகளும், விநாயகர் , முருகர் வள்ளி , தெய்வானை என மொத்தம் பத்து சுவாமி சிலைகள் உள்ளது.

திருக்கோயில் புனரமைக்கப்பட்ட போது கிடைக்கப்பெற்ற கல் சிலைகள் உள்ளிட்ட எட்டு தனி தனி சன்னதிகள் அமைந்து நாள்தோறும் ஆகம விதிகளின்படி பூஜைகள் நடைபெற்று வருகிறது. மேலும் இத்திரு கோயில் இந்து சமய அறநிலை துறையின் கட்டுப்பாட்டிற்கு அருள்மிகு கட்சி பேசுவத திருக்கோயில் செயலர் கோயிலின் தக்கார இருந்து, அக்கிராம பெரியவர்களின் உதவியுடன் செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று முன் தினம் சூரிய கிரகணத்தை முன்னிட்டு உச்சி கால பூஜைக்கு பின் நடை சாத்தப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை 8 மணி அளவில் பக்தர்கள் கோயிலை தரிசிக்க வந்தபோது கோயிலின் கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு இருந்ததைக் கண்டு உடனடியாக அப்பகுதி மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
திருக்கோயில் பராமரிப்பு குழுவை சேர்ந்தவர்கள் உடனடியாக திருக்கோயிலுக்கு வந்து பார்த்தபோது திருக்கோயிலின் பாதுகாப்புக்காக அமைக்கப்பட்டிருந்த 8 சிசிடிவி கேமராக்களில் ஒரு கேமரா தவிர அனைத்தும் உடைக்கட்டும் கோயிலில் பூட்டப்பட்டிருந்த 11 பூட்டுகளையும் உடைத்து கொள்ளையடிக்க முயன்றதுள்ளனர். முதல் இரண்டு கேமராக்களை உடைத்தபின் சுதாரித்துக் கொண்ட கொள்ளையன் அதன்பின் அனைத்து கேமராக்களையும் பின்பக்கமாக சென்று உடைத்து கோயில் முழுவதும் சல்லடையாக பணம் மற்றும் நகையை தேடி உள்ளார்.

கோயிலில் உள்ளே இருந்த இரும்பு பொருட்களைக் கொண்டு பீரோ கதவுகளையும் உடைக்க முயற்சித்துள்ளான். இது அனைத்தும் பலனளிக்காத நிலையில் அருகில் உள்ள காணிக்கையாக இருந்த சுமார் ரூ2000 மதிப்புள்ள சில்லறை காசுகளை திருடிக் கொண்டு அங்கு இருந்த கோயில் ஏணி மூலம் மதில் சுவர் ஏறி குதித்து தப்பியுள்ளது சிசிடிவி கட்சியில் தெரியவந்துள்ளது.

இதுகுறித்து காஞ்சிபுரம் தாலுகா காவல்துறையினருக்கு தகவல் அளித்ததின் பேரில் காவல்துறை ஆய்வாளர் துளசி, செயல் அலுவலர் மூழ்கி ஆகியோர் சம்பவ இடத்தை ஆராய்ந்து வழக்கு பதிய உள்ளார். மேலும் சிசிடிவி காட்சியில் உள்ள நபரின் முகம் கொண்டு காவல்துறை தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளது.

கோயிலில் இருந்த ஆறு பஞ்சலோக சிலைகள் உட்பட 10 சிலைகள் அனைத்தும் பாதுகாப்பாக உள்ளது. கடந்த இரு தினங்களுக்கு முன்பு தான் படப்பை அருகில் கோயில் கொள்ளை அடிக்க வந்தபோது அலாரம் அடித்ததால் தப்பி ஓடிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பு ஏற்படுத்தியது. தற்போது சூரிய கிரகணத்தை ஒட்டி கோயில் நடை சாத்தப்பட்டதால் மறுநாள் திறக்கப்படும் என்பதை அறிந்து இக்கோயிலில் திருடன் முயற்சித்துள்ளது தெரியவந்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


646
Active
28426
Recovered
157
Deaths
Last Updated: Sat 12 July, 2025 at 10:55 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
கல்வி
அரசியல்
Advertisement
Advertisement