மேலும் அறிய
Kanchipuram: போதையில் மகளை மறந்த தந்தை! 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவன்.!
சிறுமியை பூங்காவில் பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவன் தலைமறைவு
![Kanchipuram: போதையில் மகளை மறந்த தந்தை! 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவன்.! kanchipuram school boy who sexually abused the 4 age girl in the park has gone missing Kanchipuram: போதையில் மகளை மறந்த தந்தை! 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவன்.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/01/fccdbaed8522d30654b85d68c34e57c7_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பாலியல் வன்கொடுமை
காஞ்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பெண்ணொருவர் வசித்து வருகிறார், இவருக்கு 4 வயது பெண் குழந்தை ஒன்று உள்ளது. இவர் டிஎன்பிஎஸ்சி தேர்வுக்காக நேற்று இரவு வீட்டில் படித்துக் கொண்டிருந்தார். அவர் கணவரும் அப்போது வீட்டிலிருந்துள்ளார். இதையடுத்து 4 வயதுக் குழந்தையைப் பார்த்துக் கொள்ளுமாறு கணவரிடம் தெரிவித்துள்ளார்.
![Kanchipuram: போதையில் மகளை மறந்த தந்தை! 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவன்.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/16/3d0e7b251903b8dfb630e425d4aca115_original.png)
மது போதைக்கு அடிமையாகி இருந்த கணவர் அப்பொழுது போதையில் இருந்துள்ளார். கணவர் சிறுமியை அழைத்துக் கொண்டு அருகில் உள்ள பூங்காவிற்குச் சென்றுள்ளார். பூங்காவில் சிறுமி விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில் போதையிலிருந்த தந்தை ஆழ்ந்த தூக்கத்திற்குச் சென்றுவிட்டார். இதை அதே பகுதியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு படிக்கும் சிறுவன் கவனித்துள்ளான். பிறகு அந்த சிறுமிக்கு ஆசை வார்த்தை கூறி தனிமையில் அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளான். இதையடுத்து சிறுமியைப் பெற்றோர் தேடத் தொடங்கியிருக்கிறார்கள்.
அப்போது பூங்காவின் ஒரு புறத்தில் சிறுமிகள் அழுகை குரலை கேட்டு ஒரு வழியாக சிறுமியைக் கண்டுபிடித்த பெற்றோர் அவளின் நிலையைக் கண்டு கதறினார்கள். சிறுமிக்கு அதிக ரத்தப் போக்கு ஏற்பட்டதால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளிக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.
![Kanchipuram: போதையில் மகளை மறந்த தந்தை! 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த பள்ளி மாணவன்.!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/03/08/193aaa524b2d43fcc52c8d6d57be1fa0_original.jpg)
அங்கிருந்தவர்கள் விசாரித்த போது அதே பகுதியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் மாணவன் இந்த கொடூரத்தை செய்தது தெரியவந்துள்ளது. தற்போது பள்ளி மாணவன் தலைமறைவாகியுள்ள நிலையில், காஞ்சிபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தினர் வழக்கு பதிவு அந்த மாணவனைத் தேடிவருகிறார்கள். பள்ளி மாணவன் 4 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தற்போது 4 வயது சிறுமி செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தப்பி ஓடிய பள்ளி சிறுவனை கைது செய்ய காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது குறித்து மாணவன் வேறு ஏதாவது இதுபோன்ற சம்பவத்தில் ஈடுபட்டு இருக்கலாம், என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Crime : சென்னை பெண் தற்கொலை.. “மாமனாரின் தவறான நடத்தைதான் காரணம்” : கண்ணீர்விட்டு கதறிய பெற்றோர்..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
க்ரைம்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion