மேலும் அறிய

Crime : சென்னை பெண் தற்கொலை.. “மாமனாரின் தவறான நடத்தைதான் காரணம்” : கண்ணீர்விட்டு கதறிய பெற்றோர்..

செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூா் தனியாா் பொறியியல் கல்லூரி அதிகாரியின் மனைவி மா்மமான முறையில் உயிரிழப்பு, பெண்ணின் தாய், தாழம்பூா் போலீசில் புகாா் அளித்துள்ளார்

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே பொம்மியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் ராஜரத்தினம். இவரது மகள்  லாவண்யா என்கிற ஜெகதீஸ்வரிக்கும், திருப்பத்தூர் மாவட்டம் சாத்தனவளசு என்ற பகுதியை சேர்ந்த செல்வம் என்பவரது மகன் வெங்கடேஷ் என்பவருக்கும் கடந்த  2009-ஆம் ஆண்டு  திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணத்திற்கு பிறகு பெங்களூரில் வசித்து வந்த இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர்.

வெங்கடேசனுக்கு வண்டலூரில் உள்ள தனியார் கல்லூரியில் துறை  முதல்வராக பணி கிடைத்தது. இதையடுத்து  பெங்களூரில் இருந்து வண்டலூர் வந்து அந்த தனியாா் பொறியியல் கல்லூரியில் வெங்கடேஷ் பணியில் சோ்ந்தாா். அதோடு மேலக் கோட்டையூரில் உள்ள காவலர் குடியிருப்பில், வெங்கடேஷ், மனைவியுடன் வசித்து வந்துள்ளாா்..

Crime : சென்னை பெண் தற்கொலை.. “மாமனாரின் தவறான நடத்தைதான் காரணம்” : கண்ணீர்விட்டு கதறிய பெற்றோர்..

இந்நிலையில் லாவண்யா திடீரென வீட்டின் மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தகவலறிந்து வந்த தாழம்பூர் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் குறித்து லாவண்யாவின் தாயார் உஷாராணி  தாழம்பூர்  காவல்நிலையத்தில் அளித்த புகாரில், வெங்கடேசன் கடந்த 2019-ஆம் வருடம் ஜீலை மாதம் சென்னை வண்டலூரில் உள்ள கிரஸண்ட் பொறியியல் கல்லூரியில் பணியில் சோ்ந்தாா்.

மேலக் கோட்டையூரில் உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். எனது மகளை அழைத்து சென்று குடும்பம் நடத்தாமல் எங்களிடமே விட்டுட்டு சென்றுவிட்டார். நான் பலமுறை பேசியும் எனது மகளை தகாத வார்த்தைகளால் திட்டியதோடு இங்கு உன் மகள் வந்தால் உன் மகளை, கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.

நான் அச்சத்தின் காரணமாக  என் மகளை பெங்களூரில் என் வீட்டிலேயே வைத்துக் கொண்டேன். பின்பு மீண்டும் இனி இதுபோல் தவறுகள் நடக்காது என சமாதானம் பேசிய  வெங்கடேஷ் என் மகளை அழைத்து சென்றார். லாவண்யாவை அழைத்து சென்ற கொஞ்ச நாளில், என் மகளின் மாமனார், என் மகளிடம் மருமகள் என்று கூட பார்க்காமல் தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார். இதுகுறித்து என் மகள் என்னிடமும், தனது கணவரிடமும் கூறி கதறி அழுது எனக்கு மிகவும் அவமானமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்தது என கூறினார்.

இது சம்பந்தமாக புகார் கொடுக்க சென்றபோது மருமகன் வெங்கடேஷ் , அவரது அப்பா செல்வம் , மாமியார் ஆகிய மூவரும் சேர்ந்து கொண்டு என் மகளை தகாத வார்த்தைகளால் பேசி இனி உன்னை வாழவே விடமாட்டேன்  என மிரட்டினார்கள்.

Crime : சென்னை பெண் தற்கொலை.. “மாமனாரின் தவறான நடத்தைதான் காரணம்” : கண்ணீர்விட்டு கதறிய பெற்றோர்..

அதனால் மீண்டும் கடந்த 6 மாதமாக எனது மகள் 2 குழந்தைகளும் எங்கள் வீட்டிலேதான் இருந்தார்கள். இந்நிலையில் கடந்த  2022 ஏப்ரல் மாதம் மீண்டும்  சமாதானம் பேசி அழைத்துச் சென்று வசித்து வந்தார். இதற்கிடையில்  எனது மகள் லாவண்யா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வெங்கடேஷ் நேற்றிரவு எனக்கு தகவல் தெரிவித்ததாகவும், என் மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு கோழையில்லை என்பதால் எனது மகளின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் எனவே ஆர்டிஓ விசாரணை நடத்த வேண்டும் என புகார் அளித்துள்ளார். அதனை தொடர்ந்து சடலத்தை செங்கல்பட்டு பழவேலி மின் மயானத்தில் தகனம் செய்தனர்.

தலைப்பு செய்திகள்

சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
சதாப்தி ரயிலில் வெடிகுண்டு சோதனை! மயிலாடுதுறை ரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பு..! 
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
மயிலாடுதுறையில் பரபரப்பு: கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இளைஞர்கள் மீது பாய்ந்த குண்டர் சட்டம்..!  
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!
சவுதியில் தமிழக மீனவர் சுட்டுக்கொலை: ஈரானிய கடற்கொள்ளையர்கள் அட்டகாசம்!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
CM Vijay: மத்திய அரசுக்கு திடீரென கடிதம் எழுதிய முதலமைச்சர் விஜய்! எதற்காக?
Embed widget