மேலும் அறிய
Advertisement
சென்னை அருகே தாய் கண் முன்னே நடந்த கொடூரம்.. விபத்தில் உயிரிழந்த சிறுமி..!
வண்டலூர் அடுத்த படப்பை செல்லும் சாலையில் ஐந்தாம் வகுப்பு மாணவியின் மீது மினி வேன் மோதி உயிரிழப்பு.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், படப்பை அடுத்த கரசங்கால் பகுதியில் ஆல்வின் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் கிருத்திகா என்ற மாணவி தனது தாயுடன் வழக்கம் போல், பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்தார். அப்போது, பின்னால் வந்த மினி வேன் மோதியதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கிருத்திகா மீது மினி வேன் மோதியதில் கிருத்திகா படுகாயம் அடைந்தார். உடனடியாக அங்கிருந்த பொதுமக்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு கொண்டு சென்றனர்.
பலத்த காயம் அடைந்த கிருத்திகாவிற்கு அங்கு சிகிச்சை அளிக்கும் பிரிவுகள் இல்லாததால், உடனடியாக அங்கிருந்து ஆம்புலன்ஸ் உதவியுடன் குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு கிருத்திகாவை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த நிலையில் இந்த விபத்தை ஏற்படுத்திய, மினி வேன் ஓட்டுநர் வாகனத்தை அந்த இடத்திலேயே விட்டு விட்டு தப்பி சென்று விட்டார்.
இந்த சாலையானது படப்பை வாலாஜாபாத் வழியாக செங்கல்பட்டு செல்லும் மிக முக்கியமான சாலை இந்த சாலையில், முறையான சிக்னல் எச்சரிக்கை பலகைகள் என எந்த விதமான பாதுகாப்பு ஏற்பாடுகளோ இல்லை எனவும், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் உள்ள மிகப்பெரிய தனியார் நிறுவனங்களுக்கு பணியாளர்களை ஏற்றி செல்லும் வாகனங்களை சாலையோரங்களில், நிறுத்தி விடுவதாலும், இந்த மாதிரியான விபத்துக்கள் அடிக்கடி நிகழ்கிறது என அப்பகுதி மக்கள் வேதனையுடன் தெரிவித்தனர். மேலும், கிருத்திகா உயிரிழந்தது அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து காவல்துறையினரிடம் தொடர்பு கொண்டு கேட்ட பொழுது, வேன் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம். அருகில் ஏதாவது சிசிடிவி காட்சிகள் இருக்கிறதா ? வண்டியை முந்தும் பொழுது இந்த விபத்து ஏற்பட்டதா எனவும் விசாரணை மேற்கொண்டு வருகிறோம் என தெரிவித்தனர்.
மேலும் படிக்க:உங்கள் மகனை இப்படி நடத்துவீர்களா? பயங்கரவாதி என அழைத்த பேராசிரியருக்கு இஸ்லாமிய மாணவன் சரமாரி கேள்வி..!
மேலும் படிக்க: Delhi murder case: டெல்லி கொலை வழக்கு: ஷ்ரத்தாவின் மோதிரத்தை புதிய காதலிக்கு பரிசாக அளித்த ஆப்தாப்: வெளியான திடுக் தகவல்
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
இந்தியா
கிரிக்கெட்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion