kanchipuram: மாஸ் காட்டும் காஞ்சிபுரம்..மீண்டும் மஞ்சப்பை...பிளாஸ்டிக் கவருக்கு BYE BYE..!
Meendum Manjappai : மீண்டும் மஞ்சள் பை பயன்பாட்டை ஊற்றி வைக்கும் வகையில் காஞ்சிபுரம் கோவில்களில் மஞ்சள் கைப்பை வழங்கும் இயந்திரம்.
காஞ்சிபுரம் மாவட்டமாக மாற்ற காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரியம் நடத்தும் மீண்டும் மஞ்சப்பை விழிப்புணர்வின் அங்கமாக திருத்தலங்களில் நெகிழியை உபயோகப்படுத்துவதை தடுக்கும் பொருட்டு தானியங்கி மஞ்சப்பை இயந்திரத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் மா. ஆர்த்தி, திறந்து வைத்து, அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கி பேசியதாவது: தற்பொழுது காஞ்சிபுரம் அருள்மிகு ஏகாம்பரநாதர் திருக்கோவில் மற்றும் வரதராஜ பெருமாள் திருக்கோவில் ஆகிய திருக்கோவில்களில், தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் நிறுவப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் நெகிழியை பயன்படுத்தாதவாறு, மஞ்சப்பையை பயன்படுத்தும் விதமாக மக்கள் அதிகம் கூடும் இடமான மார்க்கெட் பகுதிகளில், மேலும் தானியங்கி மஞ்சப்பை இயந்திரம் நிறுவப்படும். எனவே பொதுமக்கள் அனைவரும் மஞ்சப்பையை பயன்படுத்தும்மாறு கேட்டுக்கொண்டார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்