மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொட்டித் தீர்க்கும் கனமழை..
திடீர் மழையின் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
தமிழகத்தில் 14 மாவட்டங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் மாலை நேரத்தில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்து கொண்டு காற்று,இடியுடன் கூடிய கனமழை பெய்யத் தொடங்கியது.
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான செவிலிமேடு, ஓரிக்கை, பேருந்து நிலையம், சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சுங்குவார் சத்திரம், ஶ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடி காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக சாலையில் செல்லும் பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு, வாகன ஓட்டிகளும் அவதிப்பட்டு வருகின்றனர். இருப்பினும் கோடை வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
அடுத்த 2 மணிநேரத்திற்கு தமிழகத்தின் 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. நாளை நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், சேலம், தர்மபுரி, நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கடலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் இன்று காலை முதல் வெயில் சுட்டெரித்த நிலையில், தற்போது புறநகர்ப் பகுதிகளில் மழை பெய்து வருகிறது. பூந்தமல்லி, திருவேற்காடு, செம்பரம்பாக்கம், குன்றத்தூர், மாங்காடு, திருமழிசையில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், சேலம், நாமக்கல், விருதுநகர், சிவகங்கை, கோவை, மதுரை, திண்டுக்கல், தென்காசி, தூத்துக்குடி, நீலகிரி, திருப்பூர், கரூர், வேலூர், ராணிப்பேட்டை, உள்ளிட்ட மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.. திருவள்ளூர் மாவட்டத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்லதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது..
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion