மேலும் அறிய
Advertisement
Kanchipuram: வேறு திருமணம் செய்து கொண்ட காதலன்.. கடத்தி திருமணம் செய்துகொண்ட முன்னாள் காதலி..!
திருமணமான காதலனைக் கடத்திச் சென்று முன்னாள் காதலி திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது "
திருமணமான காதலனைக் கடத்திச் சென்று முன்னாள் காதலி திருமணம் செய்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
ஐடி ஊழியர்
வேளச்சேரி ( Velachery News ) : சென்னை வேளச்சேரி பகுதியில் வாசித்து வருபவர் பார்த்திபன். இவர் சென்னை கிண்டியில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவருக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறி உள்ளது, இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இருவரும் பிரிந்துள்ளனர். இதனை அடுத்து, பிரியா என்ற பெண்ணை கடந்த ஜூலை மாதம், திருமணம் செய்து கொண்டார்.
காரில் கடத்திச் சென்ற கும்பல்
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை பணிக்கு செல்வதற்காக, பார்த்திபன் வீட்டில் இருந்து நடந்து சென்றார். அப்போது ஒரு கும்பல் பார்த்திபனை காரில் கடத்தி சென்றது. அந்த காரில் 2 பெண்கள், 2 ஆண்கள் இருந்துள்ளனர். பார்த்திபனை கடத்த தடுக்க முயன்ற கும்பலை அவரது மனைவி பிரியா, தாய் ஆஷா பிந்து தடுத்துள்ளனர். ஆனால், அந்த கும்பல் அவர்களை தாக்கியது. இதையடுத்து பார்த்திபனின் தாயார் ஆஷா பிந்து காரை மடக்க முயன்றுள்ளார். அப்போது கார் அவரை மோதிவிட்டு, நிற்காமல் அதிவேகமாக சென்றுள்ளது. இதனால் காயமடைந்த ஆஷா பிந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
இருப்பிடத்தைக் காட்டிக் கொடுத்த செல்போன்
இதனையடுத்து சம்பவம் குறித்து பார்த்திபனின் மனைவி பிரியா, வேளச்சேரி போலீசாரிடம் அளித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். மேலும் சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகள் மற்றும் பார்த்திபனின் செல்போன் எண்ணை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில் பார்த்திபன் காஞ்சிபுரத்தில் இருப்பது தெரியவந்தது. காஞ்சிபுரம் அடுத்துள்ள களக்காட்டூர் என்ற பகுதியில், ஒரு வீட்டில் பார்த்திபனை மீட்டனர்.
காதல் விவகாரத்தில் நடந்த கடத்தல் சம்பவம்
பின்னர் இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில், கடத்தல் சம்பவத்தில் ஈடுபட்டது, பார்த்திபனின் முன்னாள் காதலி விசாரணையில் தெரியவந்தது. காவல்துறையினர் நடத்திய தொடர் விசாரணையில், கடத்தப்பட்ட பார்த்திபன் கல்லூரியில் படிக்கும் போது ராணிப்பேட்டையை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். 7 வருடங்களாக இருவரும் காதலித்து வந்த நிலையில், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமா, கடந்த ஏப்ரல் மாதம் இருவரும் சுமூகமாக பேசி பிரிந்து விட்டதாக கூறப்படுகிறது.
எதிர்கால நலன் கருதி
இதையடுத்து பார்த்திபன் கடந்த ஜூலை மாதம் பிரியாவை திருமணம் செய்துள்ளார். ஆனால் பார்த்திபனின் முன்னாள் காதலி , பார்த்திபனுடன் ஏற்பட்ட காதலை மறக்க முடியாமல், வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள விருப்பம் இன்றி இருந்துள்ளார். விசாரணையில், இரண்டு தரப்பினரும் சமரசமாக செல்வதாக கூறினர். இதனால், அவர்களது எதிர்காலத்தை கருத்தில் வைத்து வழக்குப்பதிவு செய்யவில்லை காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion