மேலும் அறிய
Advertisement
மனு அளித்த மாற்றுத்திறனாளி.....30 நிமிடத்தில் கோரிக்கையை நிறைவேற்றி காசோலை வழங்கிய காஞ்சி ஆட்சியர்
காஞ்சிபுரத்தில் சுய தொழில் செய்வதற்கு மனு அளித்த மாற்றுத்திறனாளிக்கு 30 நிமிடத்தில் உடனடியாக காசோலை வழங்கி நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர்.
வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தலைமையில் மக்கள் குறைத்தீர்க்கும் நாள் முகாம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் காஞ்சிபுரம் ஒன்றியத்திற்க்குட்பட்ட சிறுனை பெருக்கல் கிராமத்தை சார்ந்த மாற்றுத்திறனாளி பெண்மணி சரண்யா (33) சுயதொழில் செய்வதற்கு உதவித்தொகை வழங்கக்கோரி மனு அளித்தார்.
உடனடி விசாரணை மேற்கொண்டு, தகுதி உடையவர் என்பதை அறிந்த மாவட்ட ஆட்சியர்
மனு அளித்ததைத் தொடர்ந்து மனு மீது உடனடி விசாரணை மேற்கொண்டு உதவிதொகை பெற தகுதி உடையவர் என்பதை அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியிலிருந்து ரூபாய் 80 ஆயிரத்துக்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி வழங்கினார்.
வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமம்
இதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி பெண்மணி சரண்யா கூறுகையில், “வயதான தாய் தந்தையுடன் பெரிதும் வாழ்வாதாரத்திற்கு மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். ஏரி வேலை மற்றும் மாற்றுத்திறனாளி ஓய்வூதியம் வைத்துதான் மருத்துவ செலவு மற்றும் குடும்ப செலவுகளையும் பார்த்துக்கொள்கிறோம்.
30 நிமிடத்தில் நடவடிக்கை எடுத்த ஆட்சியர்
இந்நிலையில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் சுய தொழில் செய்வதற்கு உதவித்தொகை வழங்கக்கோரி மனு அளித்திருந்தேன். மனு அளித்த 30 நிமிடத்திற்க்குள் உடனடியாக பரிசீலித்து மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி அவர்களின் விருப்புரிமை நிதியிலிருந்து பெட்டிக்கடை வைப்பதற்க்குகாக 80 ஆயிரம் ரூபாய்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். உடனுக்குடன் நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியருக்கும், தமிழ்நாடு அரசுக்கு பெரிதும் நன்றியினை தெரிவித்தனர். இந்நிகழ்வின் போது உடன் மாவட்ட வருவாய் அலுவலர் சிவருத்ரய்யா உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
கிரிக்கெட்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion