மேலும் அறிய
Advertisement
காஞ்சிபுரம் மக்கள் ஹேப்பி..! இனி சாலையில் நிம்மதியாக போகலாம்..! மாநகராட்சி எடுத்த முடிவு..!
சுற்றித்திரிந்த மாடுகளை பிடிக்கும் போது உரிமையாளர்கள் மிரட்டும் தொனியில் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தலைநகரை உலுக்கிய சம்பவம்
தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பள்ளிக்குச் சென்ற சிறுமியை சாலையில், சுற்றித்திரிந்த மாடு முட்டி மோதி படுகாயம் அடைந்தது. இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் சாலைகளில் , சுற்றித் திரியும் கால்நடைகளை பிடித்து அப்புறப்படுத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
காஞ்சிபுரத்தில் இதே கொடுமை
இதேபோன்று காஞ்சிபுரத்திலும் சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால், வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிப்படைந்திருந்தனர். இதுகுறித்து அவ்வப்போது மாநகராட்சி சார்பில் நடவடிக்கை எடுத்தாலும், கால்நடை வளர்ப்பு தொடர்ந்து கால்நடைகளை சாலையில் திரிய விட்டுக் கொண்டிருந்தனர். இந்தநிலையில், கால்நடைகளை பிடிக்க வருவாய்த்துறை காவல்துறை, கால்நடைத்துறை, சமூக ஆர்வலர்கள் மாநகராட்சி அதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவினர் தலைமையில் காலை நேரத்திலேயே, காஞ்சிபுரத்தின் ரயில்வே சாலை, திருகாளிமேடு சாலை, உள்ளிட்ட பகுதிகளில் காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் களத்தில் இறங்கி சாலையில் சுற்றித்திரிந்த கால்நடை களை கயிறு கட்டி பிடித்தனர்.
கால்நடைகளை கோசாலைகளுக்கு அனுப்பும் பணி
கால்நடை மருத்துவத்துறையினர் பரிசோதனை செய்து, சான்று வழங்கியதை தொடர்ந்து, பிடிப்பட்ட கால்நடைகள் லாரிகளில் ஏற்றி கோசாலைகளுக்கு அனுப்பி வைக்கும் பணியினை மாநகராட்சி அதிகாரிகள் மேற்கொண்டனர். மாநகராட்சி ஊழியர்கள் காலையிலேயே சாலையில் சுற்றித்திரிந்த கால்நடைகளைப் பிடித்துச் சென்ற காட்சியைப் பார்க்க பொதுமக்கள் அனைவரும் ஆட்சியில் நிர்வாகத்தின் செயலை பாராட்டினர்கள்.
மாட்டின் உரிமையாளர் வாக்குவாதம்
மேலும் ஓரிக்கை பகுதியில் கஜேந்திரன் என்பவருடைய மாடை மாநகராட்சி ஊழியர்கள் பிடித்து வாகனத்தில் ஏற்ற முயற்சித்த போது, மாட்டின் உரிமையாளர் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் . இதை அடுத்து போலீசார் சமாதானம் செய்ய ஈடுபட்டபோது போலீசாரை மிரட்டும் தூணில் பேசியதால், சிறிது சலசலப்பு ஏற்பட்டது. மாநகராட்சி ஊழியர்களையும் மாட்டை வாகனத்தில் ஏற்றக் கூடாது என அரை மணி நேரத்திற்கு மேலாக வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் மற்றொரு மாட்டின் உரிமையாளர், எங்களுடைய மாட்டையும் வீட்டுக்கு அனுப்புமாறு கண்ணீர் மல்க அழுதார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு தொற்றிக் கொண்டது. போலீசார் பத்துக்கு மேற்பட்டோர் வரவைக்கப்பட்டு, அவர்களை சமாதானம் செய்யும் பணியிலும் வாக்குவாதத்த ஈடுபட்ட கஜேந்திரன் என்பவரை எச்சரித்தும், அவருடைய மாட்டை பிடித்து சென்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
அரசியல்
உலகம்
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion