மேலும் அறிய
Advertisement
இந்துக்களுக்கான தனது பணிகள் தொடரும் - கனல் கண்ணன் உறுதி
அரசியல் சார்பான பிற கேள்விகளுக்கு பதில் அளிக்க கனல் கண்ணன் மறுத்துவிட்டார்.
பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்து தெரிவித்ததாக கைதாகி ஜாமீனில் விடுதலையான இந்து முன்னணி பிரமுகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன், இந்துக்களுக்கான தனது பணிகள் தொடரும் என உறுதியுடன் கூறினார்.
சென்னை மதுரவாயலில் கடந்த மாதம் 1ஆம் தேதி நடைபெற்ற ஒரு கூட்டத்தில், இந்து முன்னணி மாநில கலை பண்பாட்டு பிரிவின் செயலாளரும், ஸ்டண்ட் மாஸ்டருமான கனல்கண்ணன் பங்கேற்றார். அப்போது பெரியார் குறித்து கனல் கண்ணன் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக திராவிடர் கழகம் அளித்த புகாரின் பேரில் சென்னை சைபர் கிரைம் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தொடர்ந்து தலைமறைவாக இருந்த கனல் கண்ணன் கடந்த மாதம் 15ஆம் தேதி பாண்டிச்சேரியில் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்று சென்னை உயர்நீதிமன்றம் கனல் கண்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதனையடுத்து மாலை புழல் சிறையில் இருந்து இந்து முன்னணி பிரமுகரும் ஸ்டண்ட் மாஸ்டருமான கனல் கண்ணன் நிபந்தனை ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்து முன்னணி நிர்வாகிகள் மாலை அணிவித்து கனல் கண்ணனுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய கனல் கண்ணன் இந்துக்களுக்காக சிறை சென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், இந்துக்களுக்காக தொடர்ந்து பணியாற்றுவேன், போராடுவேன் என உறுதியாக தெரிவித்தார். மேலும் அரசியல் சார்பான பிற கேள்விகளுக்கு பதில் அளிக்க கனல் கண்ணன் மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய இந்து முன்னணி மாநில செய்தி தொடர்பாளர் இளங்கோவன், சுதந்திர தினத்தன்று கருத்துருமையை முடக்கும் வகையில் கனல் கண்ணன் கைது செய்யப்பட்டதாக குற்றம் சாட்டினார். கடந்த ஒன்றரை ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் கருத்துரிமை நசுக்கப்பட்டு வருவதாக சாடினார். இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்கள் சுதந்திரமாக நடமாடுவதாக குற்றம் சாட்டிய இளங்கோவன், உடனே இந்துக்களுக்கு எதிராக பேசுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார். பதவியேற்கும் போது எடுத்த உறுதிமொழிக்கு மாறாக இந்துக்களுக்கு எதிராக முதலமைச்சரும், அமைச்சர்களும் செயல்பட்டு வருவதாக குற்றம் சாட்டினர். இந்து முன்னணி பிரச்சனையை முன்னெடுக்கும் போது பிறர் துணைக்கு வருகிறார்களா என பார்க்காமல் இந்துக்களுக்கான பணிகளை தொடருவோம் என இளங்கோவன் தெரிவித்தார்.
முன்னதாக, ஆகஸ்ட் 26ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்ட கனல் கண்ணன் ஜாமீன் கோரிய மனுக்கள் சென்னை எழும்பூர் நீதிமன்றத்தாலும், முதன்மை அமர்வு நீதிமன்றத்தாலும் தள்ளுபடி செய்யப்பட்டன.
இதையடுத்து ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அவரது மனுவில், தான் பேசியது இந்த நாட்டின் சட்டத்திற்கு புறம்பானது ஏதும் இல்லை என்றும், சிலையில் இருந்த வாசகங்கள் தான் இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட வேண்டிய குற்றம் என மனுவில் குறிப்பிட்டுள்ளார். கோயிலின் முன் அந்த சிலையை வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காவல்துறை, துரதிஷ்டவசமாக தன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக கனல் கண்ணன் தன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, தேவையற்ற கருத்துகளை யூடியூப்-ல் பேசுவது ஃபேசனாகிவிட்டது என தெரிவித்ததுடன், ஒரு கட்சியில் இருக்கும்போது மாற்று கொள்கை உடையோர் குறித்து ஏன் பேச வேண்டும் என கனல் கண்ணனுக்கு கேள்வி எழுப்பினார்.
பின்னர் கனல் கண்ணனுக்கு ஜாமீன் வழங்கிய நீதிபதி, எதிர்காலத்தில் இதுபோன்று மீண்டும் பேச மாட்டேன் என உத்தரவாதம் அளித்து எழும்பூர் நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமெனவும், 4 வாரங்களுக்கு தினமும் காலையும், மாலையும் விசாரணை அதிகாரி முன்பு ஆஜராகி கையெழுத்திட வேண்டுமெனவும் நிபந்தனைகள் விதித்துள்ளார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion