Jacto Geo Strike: தமிழ்நாடு முழுவதும் பிப்.12-ந் தேதி ஜாக்டோ- ஜியோ ஆர்ப்பாட்டம்
Jacto Geo : தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 12- ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முழுவதும் பிப்ரவரி 12- ஆம் தேதி ஆர்பார்ட்டம் நடத்தப்படும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர். மேலும், மார்ச் 5-ம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும், மார்ச் 24ம் தேதி மனிதச்சங்கிலி போராட்டமும் நடத்த திட்டமிட்டுள்ளதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் தொடர்ந்து எங்களது கோரிக்கைகளை புறக்கணித்து வருவதாகாவும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் காலியாக உள்ள பணியிடங்கலை நிரப்ப வேண்டும உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தப்போவதாக மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.
அக விலைப்படியைத் தொடர்ச்சியாக ஆறு மாத காலம் தாழ்த்துவதோடு நிலுவைத் தொகையினை மறுப்பது, காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு, மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து முதலமைச்சர் எந்தவித அறிவிப்பும் வெளியிடாததால் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
அக விலைப்படியினை மத்திய அரசு வழங்கிய தேதியில் வழங்காமல் தொடர்ச்சியாக ஆறு மாத காலம் தாழ்த்துவதோடு நிலுவைத் தொகையினை மறுப்பது, காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண் விடுப்பு, மீண்டும் பழைய ஒய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்துதல், இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் முதுநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடுகளைக் களைவது, தொகுப்பூதியம்- சிறப்பு காலமுறை ஊதியம் மற்றும் தினக் கூலியில் பணியாற்றும் ஆசிரியர்கள், சத்துணவு, அங்கன்வாடி, எம்ஆர்பி செவிலியர், வருவாய் கிராம உதவியாளர். ஊர்ப்புற நூலகர், பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் ஆகியோருக்கு காலமுறை ஊதியம் வழங்குவது, சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கக் காலத்தினை முறைப்படுத்துதல், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், 21 மாத ஊதிய மாற்று நிலுவைத் தொகையினை வழங்குதல் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்.
செய்தியாளர்களிடம் பேசுகையில், எங்களுக்கான பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்ற எண்ணத்தோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பட வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டனர்.
நாங்கள் ஆட்சியாளர்களுக்கு எதிராக போராட்டம் செய்யவில்லை; எங்கள் போராட்டம் கொள்கைக்கு எதிரானது. நிதி அமைச்சர் தொடர்ந்து எங்களது கோரிக்கைகளை புறக்கணித்து வருவதாகவும் அவர்கள் கவலையுடன் தெரிவித்தனர். வரும் பிப்ரவரி 12 ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாகவும் தெரிவித்துள்ளன.
இதையும் படிங்க..