மேலும் அறிய

பத்திர பதிவில் GPS Camera பாதுகாப்பானதா ? விரைவில் மாற்று ஏற்பாடு செய்ய அரசு முடிவு ?

பத்திரங்களில் GPS புகைப்படத்தை இணைக்க , தனியார் செயலிகளை பயன்படுத்துவதில் பல்வேறு பாதுகாப்பு சிக்கல் குறைபாடு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆவண எழுத்தர்கள் புகார்

வீடு , மனை பத்திர பதிவு - GPS புகைப்படம் அவசியம்

தமிழகத்தில் வீடு , மனை போன்ற சொத்துக்களை வாங்குவோர் , அதற்கான பத்திரங்களை , சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். இதில் எவ்வித முறை கேடும் நடக்க கூடாது என்பதற்காக பதிவுத்துறை பல்வேறு பாதுகாப்பு வழி முறைகளை அமல்படுத்தி உள்ளது. இதன்படி , பத்திரத்தில் குறிப்பிடப்படும் சொத்து , உண்மையிலேயே உள்ளதா என்பதை உறுதி செய்ய அதன் ஜி.பி.எஸ்., புகைப்படத்தை இணைக்க பதிவுத்துறை சில ஆண்டுகளுக்கு முன் உத்தரவிட்டது.

அட்சரேகை - தீர்க்க ரேகை

GPS புகைப்படத்தில் , சொத்தின் தற்போதைய நிலை தெரிய வருவதுடன், அதன் அட்சரேகை , தீர்க்க ரேகை அடிப்படையில் , அந்த இடத்தின் விபரங்கள் இடம் பெறும். அத்துடன் அந்த இடம் அமைந்துள்ள நகர் மற்றும் தெரு பெயரும் , புகைப்படத்தில் இடம் பெற்றிருக்கும். வழக்கமான கேமராக்களில் , இத்தகைய புகைப்படத்தை எடுக்க முடியாது என்பதால் , இதற்கென பல மொபைல் போன் செயலிகள் உள்ளன.

GPS புகைப்படம் - கூடுதல் பாதுகாப்பு

தனியார் நிறுவனங்களின் இந்தச் செயலியை செய்து , பதிவிறக்கம் அதன் வாயிலாக சொத்தின் GPS புகைப்படம் எடுக்கப்படுகிறது. இந்த புகைப்படங்கள் , பத்திரப் பதிவின் போது ஆய்வுக்கு உட்படுத்தப்படும். உண்மையில் சொத்து குறித்த விபரங்கள், பத்திரத்தில் இடம் பெறுவது , அதை வாங்கும் மக்களுக்கு கூடுதல் பாதுகாப்பை ஏற்படுத்தும். ஆனால் இந்தப் புகைப்படம் எடுப்பதில் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

இதுகுறித்து ஆவண எழுத்தர்கள் கூறும் போது ; 

பத்திரத்தில் இணைப்பதற்காக ஜி.பி.எஸ்., புகைப்படம் எடுப்பது தொடர்பாக , மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லை. பத்திரம் தயார் செய்வோர் தான் , இதற்கு உதவ வேண்டியுள்ளது. குறிப்பாக , இத்தகைய புகைப்படங்கள் எடுக்க , அரசு தரப்பில் எந்த செயலியும் இல்லை.

தனிப்பட்ட விபரங்கள் - வெளியே செல்லும் நிலை

தனியார் நிறுவனங்களின் செயலியை பயன்படுத்தும் போது பாதுகாப்பு குறைபாடு ஏற்படுகிறது. குறிப்பாக மக்கள் இதை பயன்படுத்தி புகைப்படம் எடுக்கும் போது அவர்களின் தனிப்பட்ட விபரங்கள் , வெளியாட்களுக்கு செல்லும் நிலை உள்ளது. அத்துடன் தேவையில்லாத பல்வேறு தகவல்கள் , அவர்களின் மொபைல் போனில் தானாக பதிவிறக்கமாகிறது.

எனவே இந்த விஷயத்தில் நம்பகமான பாதுகாப்பான முறையில் எந்தச் செயலியை பயன்படுத்த வேண்டும் என , பதிவுத்துறை உரிய வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் அல்லது பிரத்யேக செயலியை உருவாக்க வேண்டும். இவ்வாறு கூறினர். 

இதுகுறித்து பதிவுத் துறை தரப்பில் கூறுகையில் , பத்திரங்களில் GPS புகைப்படம் இணைக்க , பாதுகாப்பான செயலியை பரிந்துரைக்க முடியுமா அதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

தூங்குறவங்க காதிலும், வயதானவர்களிடமும் விசில் அடிக்காதீங்க.! ஓட்டு போயிடும்- செங்கோட்டையன் அட்வைஸ்
தூங்குறவங்க காதிலும், வயதானவர்களிடமும் விசில் அடிக்காதீங்க.! ஓட்டு போயிடும்- செங்கோட்டையன் அட்வைஸ்
ADMK candidates list : அதிமுகவில் வேட்பாளர்கள் யார்.! எப்போது வெளியாகுது பட்டியல்- இபிஎஸ் போடும் திட்டம் என்ன.?
அதிமுகவில் வேட்பாளர்கள் யார்.! எப்போது வெளியாகுது பட்டியல்- இபிஎஸ் போடும் திட்டம் என்ன.?
Toyota Ebella Vs Maruti E-vitara: டொயோட்டா Vs மாருதியின் முதல் மின்சார கார் - எது பெஸ்ட்? விலை, ரேஞ்ச் எப்படி? அம்சங்கள்
Toyota Ebella Vs Maruti E-vitara: டொயோட்டா Vs மாருதியின் முதல் மின்சார கார் - எது பெஸ்ட்? விலை, ரேஞ்ச் எப்படி? அம்சங்கள்
Madurai ; வடிவேலு இருப்பது ஆமை நுழைந்த கட்சி - என கடுமையாக ஒருமையில் விமர்சித்த நடிகர் கஞ்சா கருப்பு !
Madurai ; வடிவேலு இருப்பது ஆமை நுழைந்த கட்சி - என கடுமையாக ஒருமையில் விமர்சித்த நடிகர் கஞ்சா கருப்பு !
ABP Premium

வீடியோ

MK Stalin vs Modi | டபுள் என்ஜின் vs டப்பா என்ஜின்! மோடியை விளாசிய ஸ்டாலின்! கோபமான தமிழிசை
Anbumani Mango symbol | அன்புமணிக்கு மாம்பழம்! சம்பவம் செய்த பாஜக! அப்செட்டில் ராமதாஸ் தரப்பு
”விசில் அடிக்க தெரியாதுபா?” பாவமாக சொன்ன விஜய் வைரலாகும் வீடியோ!
”விசில் போடு...” TVK கேட்ட அதே சின்னம் நிறைவேறிய விஜய்யின் ஆசை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தூங்குறவங்க காதிலும், வயதானவர்களிடமும் விசில் அடிக்காதீங்க.! ஓட்டு போயிடும்- செங்கோட்டையன் அட்வைஸ்
தூங்குறவங்க காதிலும், வயதானவர்களிடமும் விசில் அடிக்காதீங்க.! ஓட்டு போயிடும்- செங்கோட்டையன் அட்வைஸ்
ADMK candidates list : அதிமுகவில் வேட்பாளர்கள் யார்.! எப்போது வெளியாகுது பட்டியல்- இபிஎஸ் போடும் திட்டம் என்ன.?
அதிமுகவில் வேட்பாளர்கள் யார்.! எப்போது வெளியாகுது பட்டியல்- இபிஎஸ் போடும் திட்டம் என்ன.?
Toyota Ebella Vs Maruti E-vitara: டொயோட்டா Vs மாருதியின் முதல் மின்சார கார் - எது பெஸ்ட்? விலை, ரேஞ்ச் எப்படி? அம்சங்கள்
Toyota Ebella Vs Maruti E-vitara: டொயோட்டா Vs மாருதியின் முதல் மின்சார கார் - எது பெஸ்ட்? விலை, ரேஞ்ச் எப்படி? அம்சங்கள்
Madurai ; வடிவேலு இருப்பது ஆமை நுழைந்த கட்சி - என கடுமையாக ஒருமையில் விமர்சித்த நடிகர் கஞ்சா கருப்பு !
Madurai ; வடிவேலு இருப்பது ஆமை நுழைந்த கட்சி - என கடுமையாக ஒருமையில் விமர்சித்த நடிகர் கஞ்சா கருப்பு !
Budget 2026: 79 ஆண்டுகளில் முதல் முறை, மத்திய அரசின் வரலாற்றில் புது சரித்திரம் - பட்ஜெட்டின் சிறப்பம்சம்..!
Budget 2026: 79 ஆண்டுகளில் முதல் முறை, மத்திய அரசின் வரலாற்றில் புது சரித்திரம் - பட்ஜெட்டின் சிறப்பம்சம்..!
TN Roundup: மதுரையில் கோர விபத்து, பொதுவெளியில் விஜய், அமித் ஷா எண்ட்ரி, மழை நிலவரம் - தமிழகத்தில் இதுவரை
TN Roundup: மதுரையில் கோர விபத்து, பொதுவெளியில் விஜய், அமித் ஷா எண்ட்ரி, மழை நிலவரம் - தமிழகத்தில் இதுவரை
Republic Day 2026 Wishes: பாரதம் போற்றுவோம்..! குடியரசு தினம், தேசபற்றுடன் கூடிய வாழ்த்து மெசேஜ், இமேஜ், ஸ்டேடஸ்
Republic Day 2026 Wishes: பாரதம் போற்றுவோம்..! குடியரசு தினம், தேசபற்றுடன் கூடிய வாழ்த்து மெசேஜ், இமேஜ், ஸ்டேடஸ்
TN Weather Update: சென்னையில் வெளுக்கும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: சென்னையில் வெளுக்கும் மழை.. இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? தமிழக வானிலை அறிக்கை
Embed widget