மேலும் அறிய

Chennai Metro Train: ஏறுமுகத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவை..! ஆகஸ்ட் மாத பயணிகள் எண்ணிக்கையில் புதிய உச்சம்

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திய பயணிகளின் விவரங்களை, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மெட்ரோ ரயில் சேவையை பயன்படுத்திய பயணிகளின் விவரங்களை, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

மெட்ரோ ரயில் சேவை:

நடப்பாண்டில் ஆகஸ்டு மாதத்தில் மட்டும் 85.89 லட்சம் பயணிகள் பயணித்தனர் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பில் “சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சென்னையில் உள்ள மக்களுக்கும், மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் நம்பக தன்மையான மற்றும் பாதுகாப்பான போக்குவரத்து வசதியை அளித்து வருகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தை விட ஆகஸ்டு மாதத்தில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 215 பயணிகள் மெட்ரோ ரயில்களில் அதிகம் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகளின் எண்ணிக்கை மெட்ரோ ரயில் சேவை தொடங்கியதில் இருந்து இதுநாள் வரையிலான ஒரு மாத எண்ணிக்கையில் இதுவே அதிகபட்சம் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புள்ளி விவரங்கள்:

நடப்பு அண்டு ஜனவரி மாதத்தில் 66 லட்சத்து 7 ஆயிரத்து 458 பயணிகளும், பிப்ரவரி மாதத்தில் 63 லட்சத்து 69 ஆயிரத்து 282 பயணிகளும், மார்ச் மாதத்தில் 69 லட்சத்து 99 ஆயிரத்து 341 பயணிகளும், ஏப்ரல் மாதத்தில் 66 லட்சத்து 85 ஆயிரத்து 432 பயணிகளும் பயணித்துள்ளனர். தேபோன்று, மே மாதத்தில் 72 லட்சத்து 66 ஆயிரத்து 7 பயணிகளும், ஜூன் மாதத்தில் 74 லட்சத்து 6 ஆயிரத்து 876 பயணிகளும், ஜூலை மாதத்தில் 82 லட்சத்து 53 ஆயிரத்து 692 பயணிகளும் பயணித்து இருந்தனர். இந்நிலையில் தான் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சென்னை மெட்ரோ ரயில் சேவையை  85 லட்சத்து 89 ஆயிரத்து 977 பேர் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய சாதனை:

அதிகபட்சமாக கடந்த மாதம் 11ம் தேதியன்று  ஒரே நாளில் 3 லட்சத்து 29 ஆயிரத்து 920 பேர் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் முந்தைய மாதத்தை காட்டிலும் ஆகஸ்ட் மாதத்தில் 3 லட்சத்து 36 ஆயிரத்து 285 பேர் கூடுதலாக பயணம் செய்துள்ளனர். நடப்பாண்டு தொடக்கத்தில் இருந்தே, மெட்ரோ ரயில்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் நடப்பாண்டில் இதுவரை 5 கோடியே 81 லட்சத்து 80 ஆயிரத்து 65 பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்துள்ளனர்.

டிக்கெட் விற்பனை: 

2023ம் ஆண்டு ஜூலை மாதத்தில் மட்டும் க்யூஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 31 லட்சத்து 5 ஆயிரத்து 583 பயணிகளும் (Oline QR - 2,10,744: Static QR - 1,00,766, Paper QR 24,64,111, Paytm- 1,59,737, Whatsapp 1,70,225),  பயண அட்டைகளை (Tavel Cut Ticketing System) பயன்படுத்தி 47 லட்சத்து 56 ஆயிரத்து 951 பயணிகளும்,  டோக்கன்களை பயன்படுத்தி 3 லட்சத்து 26 ஆயிரத்து 491 பயணிகளும்,  குழு பயணச்சீட்டு (Group Ticket) முறையை பயன்படுத்தி 5,685 பயணிகளும் மற்றும் சிங்கார சென்னை அட்டையை (தேசிய பொது இயக்க அட்டை) பயன்படுத்தி 19 ஆயிரத்து 527 பயணிகளும் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tamilisai vs Annamalai : EPS-ஐ வைத்து அ.மலைக்கு ஸ்கெட்ச்!டெல்லிக்கே போன தமிழிசை! பாஜக தலைவர் யார்?Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Pongal 2025 Holiday: என்னாது? பள்ளிகள், அரசு அலுவலகங்களுக்கு 9 நாட்கள் பொங்கல் விடுமுறையா? அறிவிப்பு சொல்வது என்ன?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
Tamilisai Soundararajan : ”தமிழிசைக்கு விரைவில் புதிய பதவி” இதற்காகதான் காய் நகர்தினாரா அவர்?
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
யப்பா! நிம்மதி பெருமூச்சு விட்ட அல்லு அர்ஜுன்.. கிடைத்தது ஜாமீன்!
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
TNPSC Annual Planner: அடுத்த வாரம் வெளியாகும் ஆண்டு தேர்வு அட்டவணை? டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன?
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
சனாதனம் பத்தி புரியாம பேசாதீங்க? கொதித்தெழுந்த துணை ஜனாதிபதி
Kushboo :
Kushboo : "தந்தையால் பாலியல் தொந்தரவுக்கு ஆளானேன்"..நடிகை குஷ்பு ஓப்பன் டாக்
Madurai: அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
அக்னி சட்டி, மிளகாய் அரைத்து போராட்டம் ; மதுரையில் குஷ்பு கைது
"உங்களவிட்டு மனைவி ஓடிடுவாங்க.. பாத்துக்கோங்க" அதானி கொடுத்த அட்வைஸ்!
Embed widget