மேலும் அறிய
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு.. தமிழ்நாட்டின் வடக்கு மண்டலங்களில் முக்கியச் செய்திகள்..
50 லட்சம் குட்கா பறிமுதல், வெட்டியவர் பாத்ரூமில் வழுக்கி விழுந்து மாவு கட்டு, படப்பை குணாவை சுற்றிவளைக்கும் போலீஸ் உள்ளிட்ட முக்கிய செய்திகள் இதோ
1. பெங்களூரிலிருந்து காஞ்சிபுரத்திற்கு 50லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்களைக் கடத்தி வந்தவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
2. 3-ஆவது வாரமாக ஞாயிற்றுக்கிழமையான நேற்று முழு ஊரடங்கை ஒட்டி காஞ்சிபுரம் முக்கிய சாலைகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சோதனை மேற்கொண்டு ஊரடங்கை மீறி வெளியே சுற்றித் திரிந்த வாகனங்களுக்கு அபராதம் விதித்துனர்.
3. காஞ்சிபுரத்தில் ரவுடி படப்பை குணா ஆக்கிரமித்து வைத்திருந்த 5 கோடி ரூபாய் மதிப்புள்ள 5 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தை மாவட்ட வருவாய்த்துறை அலுவலர் பன்னீர்செல்வம் தலைமையிலான அலுவலர்கள் அதிரடியாக மீட்டெடுத்தனர்
4. திருத்தணி கீழ் பஜாரில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் கோயில் பூசாரி வந்து பார்த்தபோது அம்மனுக்கு அணிவிக்கப்பட்டிருந்த 4 சவரன் தாலி செயின் மற்றும் தங்க கிரீடத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றிருப்பது தெரியவந்தது. மேலும், கோயில் உண்டியலை உடைத்து அதில் உள்ள பணத்தையும் அவர்கள் திருடிச்சென்றதும் தெரியவந்தது.
5. வடபழனி ஆண்டவர் கோயிலில் இன்று அதிகாலையிலேயே 2,000க்கும் மேற்பட்டவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
6. ரயிலில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் காவலரை போலீஸார் கைது செய்துள்ளனர். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் காவலரை போலீசார் கைது செய்தனர்.
7. தமிழகத்தின் 30 மாவட்டங்களில் கொரோனா தொற்றுப் பரவல் தொடா்ந்து அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.
8. வேலை வாங்கி தருவதாக, 14 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட தலைமைச் செயலக ஊழியரை போலீசார் கைது செய்தனர். வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த ராஜமுருகபாபு என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் தலைமைச் செயலக ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
9. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே அரசு ஊழியர் வீட்டில், 20 பவுன் நகையை திருடி சென்றவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
10. நகைக் கடை உரிமையாளரை வெட்டும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வரும் நிலையில், வெட்டியதாக கைதான நபர் பாத்ரூமில் வழுக்கி விழுந்ததாக மாவு கட்டு போடப்பட்டுள்ளது
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion