மேலும் அறிய

Chennai Rain | சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய பெய்த கனமழை..! மழை அளவு எவ்வளவு தெரியுமா..!

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இரவு முதல் அதிகாலை வரை கனமழை பெய்தது

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து ஆங்காங்கே நல்ல மழை பெய்து வருகிறது. வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும் அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

Chennai Rain | சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய பெய்த கனமழை..! மழை அளவு எவ்வளவு தெரியுமா..!
இதன் காரணமாக இன்று தென்காசி, நெல்லை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழையும், மதுரை, விருதுநகர், சிவகங்கை, கடலூர், டெல்டா மாவட்டங்கள் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழையும் பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
 
காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் இரவு பதினோரு மணி முதல் திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. காஞ்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஓரிக்கை, செவிலிமேடு, பேருந்து நிலையம்,  சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், வாலாஜாபாத்  உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது .

Chennai Rain | சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய பெய்த கனமழை..! மழை அளவு எவ்வளவு தெரியுமா..!
 
இருப்பினும் காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 113 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மொத்தம் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் 909 ஏரிகள் உள்ளன. அதில் 113 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. 133 ஏரிகள் 70%-100% ,  123 ஏரிகள் 50% - 75% , 204 ஏரிகள் 25% - 50% , 336 ஏரிகள் 25 சதவீதத்திற்கும் குறைவாக நிறைந்துள்ளதாக பொதுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குடிநீர் ஆதாரங்கள் உயரம் என்பதால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள்  மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
 
சென்னையில் எம்.ஆர்.சி. நகர், பட்டினம்பாக்கம், மெரினா கடற்கரை, மந்தைவெளி உள்ளிட்ட இடங்களில் மழை பெய்தது. அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான தாம்பரம், குரோம்பேட்டை, கூடுவாஞ்சேரி, ஊரப்பாக்கம், மறைமலை நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருகழுகுன்றம், பழையனூர், புலிப்பாக்கம், மேல் ஏரிப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில்  கன மழை பெய்தது. மாவட்டத்தில் தாழ்வான பகுதியில் மழைநீர் தேங்கி உள்ளதால் பொதுமக்கள் அவதி. காலை வரை தொடர்ந்து மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
 
மழை அளவு
 
திருப்போரூர் 22 மில்லி மீட்டர், செங்கல்பட்டில் 20 மில்லி மீட்டர், திருக்கழுக்குன்றத்தில் 9.3 மில்லிமீட்டர், மகாபலிபுரத்தில் 19 மில்லி மீட்டர், மதுராந்தகத்தில் 37 மில்லி மீட்டர், செய்யூரில் 37 மில்லி மீட்டர், தாம்பரத்தில் 43 மில்லி மீட்டர், கேளம்பாக்கத்தில் 29 மில்லி மீட்டர், மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 217 .9 மில்லிமீட்டர் பதிவாகியுள்ளது.
Chennai Rain | சென்னை மற்றும் புறநகரில் விடிய விடிய பெய்த கனமழை..! மழை அளவு எவ்வளவு தெரியுமா..!
காஞ்சிபுரத்தில் 9 மில்லி மீட்டர் ஸ்ரீபெரும்புதூரில் 14 மில்லிமீட்டர் உத்தரமேரூரில் 17 மில்லி மீட்டர் வாலாஜாபாத்தில் காஞ்சிபுரத்தில் 9 மில்லி மீட்டர் ஸ்ரீபெரும்புதூரில் 14 மில்லி மீட்டர் உத்தரமேரூரில் 17 மில்லி மீட்டர் வாலாஜாபாத்தில் ஐந்து மில்லி மீட்டர் செம்பரம்பாக்கத்தில் 12 மில்லி மீட்டர், குன்றத்தூரில் 24 மில்லிமீட்டர், மொத்தம் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 81 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
 
செம்பரம்பாக்கம் நீர் அளவு
 
சென்னையின் பிரதான குடிநீர் ஆதாரமாக விளங்கும் செம்பரம்பாக்கம் ஏரியின் ஆழம் இருபத்தி நான்கு அடி. சுமார் 3.6 டிஎம்சி தண்ணீரை தேக்கிவைக்க முடியும். 24 அடி ஆழம் கொண்ட செம்பரம்பாக்கம் ஏரி தற்போது 20.80 அடியை எட்டியுள்ளது. தற்பொழுது 2.80 டிஎம்சி தண்ணீர் செம்பரம்பாக்கம் ஏரியில் கையிருப்பு உள்ளது
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!
Non-Veg Food Ban: அதிர்ச்சி; உலகிலேயே முதல் நகரம்- குஜராத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை!
Non-Veg Food Ban: அதிர்ச்சி; உலகிலேயே முதல் நகரம்- குஜராத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை!
Breaking News LIVE, JULY 15: ரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யா
Breaking News LIVE, JULY 15: ரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யா
Thangalaan First Single : தங்கலான் முதல் பாடல்  ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
தங்கலான் முதல் பாடல் ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK BJP Alliance | டெல்லி பறக்கும் EPSமாறும் காட்சிகள்?புதுதெம்பில் ஸ்டாலின்Police Pocso Arrest | சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் காவலர் கைது அதிரடி காட்டிய SP மீனாHaridwar Bus Accident | அன்பே சிவம் பட பாணியில்..நடந்த விபத்து...ஹரித்வாரில் பயங்கரம்Rahul Thanks MK Stalin | ’’நன்றி ஸ்டாலின்! நீங்க தான் BEST’’ பாராட்டிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"கல்வித்துறையில் காமராஜர் ஆற்றிய பங்களிப்பு ஈடு இணையற்றது" பிரதமர் மோடி புகழாரம்!
Non-Veg Food Ban: அதிர்ச்சி; உலகிலேயே முதல் நகரம்- குஜராத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை!
Non-Veg Food Ban: அதிர்ச்சி; உலகிலேயே முதல் நகரம்- குஜராத்தில் அசைவ உணவுகளுக்குத் தடை!
Breaking News LIVE, JULY 15: ரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யா
Breaking News LIVE, JULY 15: ரத்த தானம் செய்தார் நடிகர் சூர்யா
Thangalaan First Single : தங்கலான் முதல் பாடல்  ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
தங்கலான் முதல் பாடல் ஜூலை 17-ஆம் தேதி வெளியாகும்.. ஜி.வி பிரகாஷ் இசையில் மினிக்கி ப்ரோமோ இதோ..
Mohan G : கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
கண்ட கண்ட கதைய எடுக்குறீங்க.. ஆயிரத்தில் ஒருவன் 2-ஆம் பாகத்தை வெளியிட சொன்ன மோகன் ஜி
Watch video : அம்பானி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலித்த 'ஜெய் ஹோ'.. ஏ.ஆர். ரஹ்மான் செய்த மேஜிக்!
Watch video : அம்பானி திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் ஒலித்த 'ஜெய் ஹோ'.. ஏ.ஆர். ரஹ்மான் செய்த மேஜிக்!
காலாவதியான உரிமம் ! தெரு நாய்களை தற்போதைக்கு கட்டுப்படுத்த முடியாது - மாமன்றத்தில் ஆணையாளர் தகவல்
காலாவதியான உரிமம் ! தெரு நாய்களை தற்போதைக்கு கட்டுப்படுத்த முடியாது - மாமன்றத்தில் ஆணையாளர் தகவல்
Inflation Rupee : இந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 3.36% ஆக உயர்வு - ஜூன் மாத நிலவரம்!
இந்தியாவின் மொத்தவிலை பணவீக்கம் 3.36% ஆக உயர்வு - ஜூன் மாத நிலவரம்!
Embed widget