Rain In Kanchipuram : கொட்டி தீர்க்கும் கோடை மழை.. வேனிற்காலத்தில் குட்டி ஊட்டி.. மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள்..
காஞ்சிபுரத்தில் நள்ளிரவில் பலத்த மழை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி
02.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, ஈரோடு, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், கரூர், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை மற்றும் வேலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
04.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
05.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும். இருப்பினும் சென்னையில் நேற்று முதல் பல்வேறு பகுதிகளில் அவ்வப்போது லேசான மழை பெய்து வருகிறது.
இன்று காலை நிலவரப்படி தமிழ்நாட்டில் அதிகபட்சமாக பதிவான மழையின் அளவு (மில்லி மீட்டரில்): அதிராமபட்டினம் 153.0 மி.மீ, கடலூர் 93.0 மி.மீ, வால்பாறை 78.0 மி.மீ, புதுச்சேரி 69.0 மி.மீ, பாம்பன் 59.0 மி.மீ, கன்னியாகுமரி 54.0 மி.மீ, பாளையம்கோட்டை 47.0 மி.மீ, சேலம் 42.0 மி.மீ, மீனம்பாக்கம் 38.2 மி.மீ, நுங்கம்பாக்கம் 32.1 மி.மீ, திருச்சிராப்பள்ளி 30.0 மி.மீ, திருப்பத்தூர் 15.0 மி.மீ, கொடைக்கானல் 14.0 மி.மீ, கோவை 11.0 மி.மீ, ஊட்டி 14.0 மி.மீ, நாகப்பட்டினம் 6.0 மி.மீ, டோண்டி 5.0 மி.மீ, குன்னூர் 3.0 மி.மீ, அரியலூர் 1.2 மி.மீ, கரூர் பரமத்தி 1.0 மி.மீ, காரைக்கால் 2.0 மி.மீ, வேலூர் 0.6 மி.மீ மழை பதிவாகியுள்ளது.