Guduvancheri Railway Station: கிளாம்பாக்கத்திற்கே டஃப்.. விரைவில் புதிய தோற்றத்தை பார்க்கப்போகும் கூடுவாஞ்சேரி மக்கள்
Guduvancheri Railway Station: கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில், புதுப்பிக்கப்பட்டு வருகிறது.

Guduvancheri Railway Station Upgrade: சென்னை புறநகர் பகுதியில் உள்ள கூடுவாஞ்சேரி ரயில் நிலையம், புதுப்பிக்கும் பணி வேகமாக நடைபெற்று வருகிறது
சென்னை மின்சார ரயில் போக்குவரத்து - Chennai Electric Trains
சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகள் அதீத வளர்ச்சியை நோக்கி பயணித்து வருகின்றன. அந்த வகையில் சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளை இணைக்கக்கூடிய, முக்கிய போக்குவரத்தாக மின்சார ரயில் போக்குவரத்து இருந்து வருகிறது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை உள்ள ரயில் வழித்தடம் மிக முக்கிய வழித்தடமாக இருந்து வருகிறது. இந்த வழித்தடத்தில் தினமும் 100க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் இரு மார்க்கமாக இயக்கப்படுகின்றன.
கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் Guduvancheri Railway Station
சென்னை புறநகர் பகுதியில் செங்கல்பட்டு மாவட்டத்திற்கு உட்பட்ட கூடுவாஞ்சேரி, வளர்ச்சி அடைந்த பகுதியாக இருந்து வருகிறது. பல்வேறு அடுக்குமாடி குடியிருப்புகள், கூடுவாஞ்சேரி மகாலட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் வளர்ச்சி அடைந்த பகுதிகளாக இருந்து வருகின்றன.

நாள்தோறும் கூடுவாஞ்சேரி பகுதியில் இருக்கும் பல ஆயிரக்கணக்கான பயணிகள், சாலை மார்க்கமாகவும் மற்றும் ரயில் மூலமாக சென்னை நகருக்குள் பணி நிமிர்த்தமாக சென்று வருகின்றனர். தற்போதைய நிலவரப்படி, நாள் ஒன்றுக்கு 25000க்கும் மேற்பட்ட பயணிகள் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர். விடுமுறை நாட்களில் இந்த எண்ணிக்கை, அதிகரித்து வருகிறது.
கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் புதுப்பித்தல் - அம்ரித் பாரத்
கூடுவாஞ்சேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் தொடர்ந்து வளர்ச்சி அடைந்து வருவதால், ரயில் நிலத்தை மேம்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், இந்தியா முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களை மறு சீரமைக்கும் வகையில், "அம்ரித் பாரத் " என்ற ரயில் நிலையின் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தின் மூலம் கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தை, மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. கூடுவாஞ்சேரி ரயில் நிலையத்தை மேம்படுத்த சுமார் 21 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.
சிறப்பு அம்சங்கள் என்னென்ன ? Key Features in Guduvancheri Railway Station Railway Station
கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் நவீனப்படுத்தப்பட்டு மேம்படுத்தப்பட உள்ளது. கூடுவாஞ்சேரி ரயில் நிலையம் முகப்பு தோற்றம் முழுமையாக மாற்றப்பட்டு, கண் கவரும் வகையில் கட்டுமானங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

நவீன நடைபாதங்கள், மின் ஏணிகள் மற்றும் மின் தூக்கிகள் அமைக்கப்பட உள்ளன. ரயில்கள் வருகை மற்றும் புறப்பாடு தொடர்பான தகவல்களை தெரிந்து கொள்ள டிஜிட்டல் விளக்க பலகைகள். மறு வடிவமைக்கப்பட்ட தங்குமிடங்கள் மற்றும் வானிலை பாதிக்காத நடைமேடைகள் மற்றும் கூடுதல் காத்திருப்பு இருக்கைகள் அமைக்கப்பட உள்ளன. பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி கண்காணிப்பு தீவிர படுத்தப்பட உள்ளது.

சுகாதாரமான நவீன கழிப்பறைகள் கட்டப்பட உள்ளன. குறிப்பாக கூடுதலாக வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங் வசதிகளும் செய்து தரப்பட உள்ளன. தூய்மையான சுற்றுப்புறப் பகுதிகளையும் உள்ளடக்கியதாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருவதால், விரைவில் புதிய தோற்றத்தை கூடுவாஞ்சேரி மக்கள் காண உள்ளார்கள்.




















