முதலமைச்சர் கொரோனா நிதிக்காக ஐந்தாயிரம் ரூபாய் வழங்கிய நளினி..
திரை உலக பிரபலங்கள் ரஜினி , சூர்யா , விக்ரம் உள்ளிட்ட பலர் கொரோன நிதிகொடுத்து வரும் நிலையில் . முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி கொரோனா நிவாரண நிதியாக தனது சிறைவாசி வைப்பு நிதியில் இருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5000/- ரூபாயை சிறை கண்காணிப்பாளர் மூலம் அனுப்பி வைத்தார்.
கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதியன்று ஸ்ரீபெரும்புதூரில் நடந்த குண்டுவெடிப்பில் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கை விசாரித்த சி.பி.ஐ நளினி, முருகன் உள்பட 7 பேருக்கு தூக்குத்தண்டனை விதித்தது.
மேல்முறையீட்டுக்குப் பின் தூக்குத்தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு நளினி, முருகன் உள்பட 7 பேர் , கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு சிறைகளில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனா நோயின் தாக்கம் அதிகரித்து கோரத்தாண்டவமாடி வருகிறது. இதன் அடிப்படையில் தமிழகத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 30,000 திற்கும் மேற்பட்டோர் கொரோனா நோயினால் புதியதாக பாதிக்க பட்டு வருகின்றனர் . கொரோனா நோய் தொற்றின் தாக்கத்தால் நாள் ஒன்றுக்கு 300-க்கும் மேற்பட்டோர் மரணித்து வருகின்றனர் .
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு மே மாதம் 10-ஆம் தேதி முதல் , மே 24 வரை ஊரடங்கை விதித்துள்ளது .மேலும் கொரோனா நோயாளிகள் படுக்கை வசதி, ஆக்சிஜன் வசதி, வென்டிலேட்டர் ஆகியவற்றின் தேவை அதிகரித்துள்ளதால் நிலையில் கொரோனா தடுப்பு பணிக்காக மக்கள் நிதி உதவி தரலாம் என முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.
இதனை ஏற்று திரை உலக பிரபலங்கள் ரஜினி , சூர்யா , விக்ரம் உள்ளிட்ட பலர் கொரோனா நிதிகொடுத்து வரும் நிலையில் . முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளுக்கு மேலாக வேலூர் பெண்கள் சிறையில் தண்டனை அனுபவித்து வரும் நளினி கொரோனா நிவாரண நிதியாக தனது சிறைவாசி வைப்பு நிதியில் இருந்து முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 5000/- ரூபாயை சிறை கண்காணிப்பாளர் மூலம் அனுப்பி வைத்தார்.
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் புதிதாக பதவியேற்றுள்ள மு க ஸ்டாலின் தலைமையிலான அரசு எப்பொழுது வேண்டுமென்றாலும் விடுதலை செய்யலாம் என்று எதிர்பார்ப்பு நிலவி வருவது குறிப்பிடத்தக்கது.