முதல் மனைவியின் மகள் கொலை மிரட்டலால் இரண்டாவது மனைவி தீக்குளிக்க முயற்சி...!
’’கடந்த 3 மாதங்களாக என் கணவரிடம் இருந்து எந்த தகவலும் வராததால் நான் இங்கு வந்து பார்த்தேன் அப்பொழுது தான் எனக்கு என் கணவர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார் என்பது தெரியவந்தது’’
முதல் மனைவியின் மக்களிடமிருந்து ஜீவனாம்சம் பெற்றுத்தர கோரி இரண்டாவது மனைவி தீகுளிக்க முயன்றதால் பரபரப்பு*
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் வாராந்திர பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுவது வழக்கம். சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் ரத்து செய்யப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா 2ஆவது அலை அச்சுறுத்தல் காரணமாக குறை கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை.
மேலும் பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பான மனுக்களை அளிக்க வசதியாக, ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகில் புகார் பெட்டி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. திங்கட்கிழமைதோறும் குறைகேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை என்றாலும், ஏராளமான பொதுமக்கள் திரண்டுவந்து, தங்களது கோரிக்கை தொடர்பான மனுக்களை அந்த புகார் பெட்டியில் போட்டு விட்டு செல்கின்றனர். இதில் மனு குடுப்பதற்காக வந்த பெண்மணி ஒருவர் திடீரென தான் வைத்திருந்த பையில் இருந்த பெட்ரோலை எடுத்து ஊற்றிக்கொள்ள முயலும் போது அங்கு இருந்த காவல்துறையினர் தடுத்தனர். அதன்பின் அவரிடம் காவல்துறையினர் விசாரித்த போது அவரின் பெயர் விமலா (வயது 43) இவரின் கணவர் ராம்மோகன் ராவ் என்றும் கூறினார் பின் அவரது பிரச்சனையை விசாரித்த போது,
நான் என் கணவரின் இரண்டாவது மனைவி ஆவேன் என் கணவர் என்னை முதல் மனைவி இருக்கும் போதே என்னை திருமணம் செய்துகொண்டார். நாங்கள் பெரியகங்கனாங்குப்பம் பகுதியில் வாழ்ந்து வந்தோம் , எங்களுக்கு திருமணமாகி 22 வருடங்கள் ஆகிறது இந்தநிலையில், 8 வருடங்களுக்கு முன் முதல் மனைவி லக்ஷ்மி உடல்நலக்குறைவால் இறந்த பின் லக்ஷ்மியின் மகள் மனிமாலா (26) என் கணவரின் மனதை மாற்றி என்னை வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டனர் இந்நிலையில் எனக்கு குழந்தை ஏதும் இல்லாத காரணத்தினால் என் சொந்த ஊரான ஆந்திராவுக்கு சென்று அங்கே என் சொந்த ஊரிலும் எனக்கென யாரும் இல்லை இருந்தாலும் அங்கு பிழைப்புக்காக சென்றேன்.
நான் பல வருடங்களாக என் கணவருடன் சேர்ந்து வாழ முடியவில்லை இருந்தாலும் அவரோடு அவ்வப்போது அவருடன் தொடர்பில் தான் இருந்தேன். இந்தநிலையில் கடந்த மூன்று மாதங்களாக என் கணவரிடம் இருந்து எந்த தகவலும் வராததால் நான் இங்கு வந்து பார்த்தேன் அப்பொழுது தான் எனக்கு என் கணவர் மூன்று மாதங்களுக்கு முன்னர் கொரோனாவால் உயிரிழந்துள்ளார். இதனை என்னிடம் கூட கூறாமல் அவரின் முதல் மனைவியின் மகள் மணிமாலாவும் அவளின் கணவருமான ஆனந்த் என்பவரும் அவரின் உடலை அடக்கம் செய்துள்ளனர் . இதனை அறிந்ததும் நான் மனம் உடைந்து போனேன் பின் என் கணவருக்கு என இருந்த வாடகை பாத்திரக்கடையினை தங்கள் பேருக்கு மாற்றிக்கொண்டு என்னையும் வீட்டை விட்டு வெளியே துறத்திவிட்டனர்.
பின் எனக்கென ஜீவனாம்சம் கேட்டு அருகே உள்ள காவல் நிலையத்திற்கு சென்று புகார் அளித்தேன் அங்கே உள்ள காவலர்கள் என் கணவரின் சொத்தை மூன்று பங்காக பிரித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்கள். ஆனால் அதனை சற்றும் மதிக்காமல் இருந்தனர் இதனை நான் கேட்ட போது எனக்கு உணவு மட்டும் அளிப்பதாகவும் அதனோடு அமைதியாக இருக்கவும் என்னை மிரட்டினார்கள் இதனை மீறி நான் மீண்டும் கவால்துறையினரிடம் சென்றால் என்னை கொன்றுவிடுவேன் என்றும் மிரட்டினார்கள். அதனால் கடந்த மூன்று வாரங்களாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்து சென்றுள்ளேன் ஆனால் யாரும் மனுவினை பொருட்படுத்துவதாகா தெரியவில்லை அதனால் தான் இவ்வாறு செய்தேன், எனக்கு சேர வேண்டிய ஜீவனம்சத்தை பெற்று தருமாறு கேட்டுகொள்கிறேன் என கூறினார். இதற்குப்பின் காவலர்கள் அவரிடம் இருந்து மனு எழுதி வாங்கிகொண்டு அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்த பின் அந்த பெண்மணி அங்கிருந்து சென்றார்.