Muttukadu Cruise: சென்னை முட்டுக்காடு மிதவை உணவகம் திறப்பு.. முன்பதிவு செய்வது எப்படி? எவ்வளவு செலவாகும்?
Muttukadu Boat Restaurant : " முட்டுக்காடு மிதவை உணவகம் மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது "
தமிழ்நாடு அரசு சுற்றுலாத்துறையை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 26 ஓட்டல்கள் தங்கும் விடுதிகளுடன் செயல்பட்டு வருகின்றன. மேலும் நீங்காத அனுபவங்களை தரும் வகையில, 9 படகு குழாம்கள் மூலம் சுற்றுலா பயணிகளுக்கு படகு சவாரி மேற்கொள்ள ஏதுவாக செயலப்பட்டு வருகின்றது.
சுற்றுலாத்துறையில் முன்னணி மாநிலமாக மாறுவதற்கான முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. சுற்றுலா பயணிகளால் கிடைக்கும் வருவாய் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பயனுள்ளதாக, இருக்கும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை
சென்னையை பொருத்தவரை சென்னை கிழக்கு கடற்கரை சாலை சுற்றுலா பயணிகளுக்கு பிடித்த இடங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதி நாட்களில், சென்னை கிழக்கு சாலையில் இருக்கும் சுற்றுலா தளங்கள் மற்றும் விடுதிகள் ஆகியவை நிறைந்து காணப்படுகிறது. அந்தவகையில், சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் செயல்பட்டு வருகின்றது.
முட்டுக்காடு படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் விசை படகுகள், மிதவை படகுகள், இயந்திர படகுகள், வேகமான இயந்திர படகுகள் என 30க்கும் மேற்பட்ட படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. விடுமுறை நாட்களில் எப்போதும் முட்டுக்காடு படகு இல்லத்தில் சுற்றுலா பயணிகள் படையெடுப்பது வழக்கமாக உள்ளது.
முட்டுக்காடு மிதவை உணவகம் - Muttukadu Foating Restaurant
தமிழகத்தின் முதல் மிதவை உணவகம் கப்பல் (Floating Restaurant) சென்னை முட்டுக்காடு பகுதியில் சுமார் 5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இரண்டு அடுக்குகளுடன் இந்த உணவக பயணக் கப்பல் அமைக்கப்பட்டுள்ளது. நீளம் 125 அடியும், அகலம் 25 அடியும் கொண்டதாக இது உருவாக்கப்பட உள்ளது. உணவகத்தின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடன் அமைக்கப்பட உள்ளது.
முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், மேல் தளத்தில் அமர்ந்து உணவு உண்டு பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. சமயலறை, சேமிப்பு அறை, கழிவறை மற்றும் இயந்திர அறை அமைக்கப்பட உள்ளது. கப்பல் 60 குதிரை சக்தி திறனுடைய இயந்திரம் மூலம் இயக்கப்படும் வகையில் வடிவமைக்கப்பட உள்ளது. இம்மிதவை படகு உணவகம் 3000 சதுர அடி பரப்பளவுடன் இரண்டு அடுக்குகள் கொண்ட 100 நபர்கள் அமர்ந்து உணவருந்தும் வசதிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும், கருத்தரங்குகள், அலுவலக கூட்டங்கள். பிறந்தநாள் கொண்டாட்டங்கள், கேளிக்கை விருந்துகள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்திட ஏதுவாக இப்படகு உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
மிதவை உணவகம் திறப்பு
முட்டுக்காடு படகு குழாமில் ரூபாய் 5 கோடி மதிப்ட்டிலான மிதவை உணவக கப்பலினை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தனர். இந்த மிதவை உணவகம் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் இடையே மிகுந்த வரவேற்பு பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
விலைப்பட்டியல் என்ன ?
தற்போது மிதவை உணவகம் திறக்கப்பட்டுள்ளதால், முதற்கட்டமாக உருவாக வருபவர்களுக்கு முன்பதிவு நடைபெற்று வருகிறது. எவ்வளவு பேர் வருகிறார்கள் அதற்கு ஏற்றார் போல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. விரைவில் தனிநபராக வருபவர்களுக்கும், விலை நிர்ணயம் செய்யப்பட உள்ளது.
ஜனவரி மாதம் இறுதிக்குள் அனைவரும் மிதவை உணவகத்தை பயன்படுத்துவதற்கான வழி வகைகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக ஆன்லைன் மூலமா புக்கிங் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக தொலைபேசி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது, 090378 50857 என்னை தொடர்பு கொள்ளலாம் என தகவல் தெரிவித்துள்ளனர்.