மேலும் அறிய
Advertisement
ஈரோடு இடைத்தேர்தல் வெற்றி என்பது மகத்தான வெற்றி.. கே. பாலகிருஷ்ணன், சி.பி.எம்
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்திருக்கும் மகத்தான வெற்றி என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றிருப்பது மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு கிடைத்திருக்கும் மகத்தான வெற்றி என மார்க்சிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
"மக்களிடம் நம்பிக்கை"
செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் அவர் தெரிவித்ததாவது, மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தொடக்க காலத்திலிருந்து இணக்கமான முறையில் ஒருமித்த கருத்தோடு தேர்தல் பேணியை தேர்தல் போராட்டத்தை நடத்தினோம் எந்த கட்சி போட்டியிட வேண்டும் என்ற பிரச்சனை எங்களுக்குள் ஏற்படவில்லை யார் வேட்பாளர் என்ற பிரச்சனை ஏற்படவில்லை.
எந்த சின்னம் என்ற குழப்பம் இல்லை. ஒருமித்த கருத்து ஒற்றுமையுடன் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி இந்த தேர்தலை எதிர்கொண்டதால் மக்களிடம் ஒரு நம்பிக்கையை இந்த கூட்டணி ஏற்படுத்தியுள்ளது என்பதை இந்த தேர்தல் முடிவில் தெரிகிறது.
"குளறுபடிகளுடன்தான் தேர்தலை துவக்கினர்"
இதற்கு நேர்மாறாக பாஜக அதிமுக கூட்டணி தொடக்கம் முதலே பல்வேறு விதமான குழப்பங்கள் குளறுபடிகளுடன்தான் தேர்தலை துவக்கினர். தேர்தல் அலுவலகத்தில் பேனர் வைப்பதில் கூட இவர்களுக்குள் குழப்பம் இருந்தது. எந்த கட்சி போட்டியிடுவது, வேட்பாளர் யார் என்ற குழப்பத்துடனே இரந்தனர். இதற்கு மேலாக எந்த சின்னம் என்பதில் குழப்பம் ஏற்பட்டு இறுதி நேரத்தில் தான் அதிமுக இரட்டை இலை சின்னம் என்ற முடிவுக்கு வந்தனர். தொடக்கத்தில் ஏற்பட்ட இந்த குளறுபடிகள், தேர்தல் இறுதிவரை அவர்களுக்கும் ஒருமித்த கருத்து இல்லாமல் தேர்தலை சந்திக்கின்ற நிலை ஏற்பட்டது பாஜக அதிமுக கூட்டணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணம்.
வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்பது உண்மை
கடந்த இரண்டு ஆண்டு திமுக ஆட்சி காலத்தின் செயல்பாடுகள் இந்த தேர்தல் வெற்றிக்கு பின்புலமாக அமைந்துள்ளது. சட்டமன்ற தேர்தல் காலத்தில் திமுக அறிவித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்ற வேண்டியுள்ளது உண்மைதான். தமிழக முதல்வர் ஈரோடு இடைத்தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும்போது ஏற்கனவே நாங்கள் அறிவித்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றியிருக்கின்றோம். அடுத்து வருகின்ற மாதங்களில் மிக முக்கியமான தேர்தல் அறிவிப்புகளை நாங்கள் நிறைவேற்றுவோம் சொன்ன வாக்குறுதிகள் எதையும் கைவிட மாட்டோம் சொல்லாத பல திட்டங்களை நாங்கள் நிறைவேற்றியிருக்கின்றோம் என பல திட்டங்களை பட்டியல் போட்டு காட்டியுள்ளார். இதுவும் கூட மக்களுக்கு ஒரு நம்பிக்கை அளித்துள்ளது
மோசமான பொருளாதாரக் கொள்கை
ஈரோடு மாவட்டம் சிறு குறு தொழில் நிறைந்துள்ள மாவட்டம், மேற்கு மண்டலத்தில் சிறு குறு நிறுவனங்கள், ஜவுளி ஆலைகள், விசைத் தறி, நூற்பாலைகள், பின்னலாடைகள் நிறைந்துள்ள மாவட்டங்கள் மோடி அரசு கடைபிடிக்கின்ற மிக மோசமான பொருளாதார கொள்கைகள் சிறுகுறு தொழில்கள் எல்லாம் அழிந்து பலர் தற்கொலை செய்து கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு அடிப்படைக் காரணம் மோடி அரசின் பொருளாதார கொள்கை இதுவரை பஞ்சை அரசு கொள்முதல் செய்து நியாயமான விலைக்கு நூற்பாலைகளுக்கு வழங்கி வந்தனர். அனால் மோடி அரசு உற்பத்தி ஆகக்கூடிய பஞ்சை கொள்முதல் செய்யாமல் அம்பானிக்கும் அதானிக்கும் ஏற்றுமதி செய்து பெரிய பற்றாக்குரையை உறுவாக்கி அந்த மாவட்டங்களின் தொழில் வளத்தை எல்லாம் நாசம் பண்ணிவிட்டனர்.
ஒரு முடிவு கட்ட வேண்டும்
இதனால் அப்பகுதியில் தொழில் முனைவோர் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்களின் குடும்பங்கள் இந்த தொழிலை நம்பி உள்ளவர்கள் அனைவரும் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இதற்கு எல்லாம் ஒரு முடிவு கட்ட வேண்டும் என்ற முறையில் பாஜக அதிமுக கூட்டணியை புறக்கணித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணிக்கு அதிகப்படியான வாக்குகளை அளித்து வெற்றி பெற செய்திருக்கின்றனர்.
அதிமுக பாஜகவுடன் கூட்டணி இல்லாமல் போட்டியிட்டிருந்தால் கூட சற்று கூடுதலாக வாக்குகளைப் பெற்றிருக்கக்கூடும் அதிமுக மோடியை தலையில் சுமந்து சென்றதால் மோடி மீது ஆத்திரமும் கோபமும் கொண்டுள்ள மக்கள் அதிமுகவை கோபத்துடன் நிராகரித்துள்ளனர் என்பதை இந்த வாக்கு வித்தியாசம் எடுத்துக் காட்டுகின்றது என தெரிவித்தார். கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் பி.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாநில குழு உறுப்பினர் ஆறுமுக நயினார், மாவட்ட செயலாளர் ப.சு.பாரதிஅண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர் இ.சங்கர் உள்ளிட்டவர்கள் உடனிருந்தனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion