செங்கல்பட்டு மாவட்டத்தில் மதுராந்தகம், படாளம், புக்கத்துறை, பூதூர், மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் லேசான மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் மதுராந்தகம் அடுத்த படாளம் பகுதியில் செயல்பட்டு வரும் நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில படாளம், புக்கத்துறை, பழமத்தூர், பூதூர், புலிப்பர கோயில், உள்ளிட்ட பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த ஏராளமான விவசாயிகள் அறுவடை செய்த நெல்லை, அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விற்பனை செய்வது வழக்கம்.
விவசாயிகள் கடந்த 10 நாட்களுக்கு மேலாக காத்திருந்து நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் தங்களது நெல்லை அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்துள்ள நிலையில் அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எதுவும் மேற்கொள்ளாததால் கொள்முதல் செய்யப்பட்ட சுமார் 4000 மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்து சேதம் ஆகி உள்ளது. மாவட்ட நிர்வாகம் சார்பில் முறையாக திட்டமிடல் இல்லாமல், காரணத்தினாலேயே நெல் மூட்டைகள் வீணாகி வருவதாகவும், இதனால் அரசுக்கு பல கோடி ரூபாய் அரசுக்கு இழப்பீடு ஏற்படும் எனவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
வானிலை ஆய்வு மையம்
தென் இந்திய பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, 4 மாவட்டங்களில் மிக கன மழையும் 17 மாவட்டங்களில் கன மழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
02.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
03.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், தர்மபுரி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல் மற்றும் தேனி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
04.05.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.