மேலும் அறிய

கிரிவலப்பாதையில் துள்ளி குதித்து விளையாடும் மான்கள்

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் துள்ளி குதித்து விளையாடும் மான்கள் கூட்டத்தை புகைப்படம் எடுத்து மகிழும் பொதுமக்கள், மான்களுக்கு உணவு பழங்கள் வழங்கி மகிழ்ந்து வருகின்றனர்.

ஆன்மீக நகரமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் பின்புறத்தில் சிவனே மலையாக வீற்றிருக்கும் மலை அங்கு அடர்ந்த காடுகளையும் மலைப் பகுதிக்கு நடுவே அமைந்துள்ளது.  திருவண்ணாமலையில்  சுமார் 10,000 ஹெக்டேர்  காப்பு காட்டுகள் உள்ளது.  இந்த காப்பு காடுகளில் குரங்குகள்,லங்கோரி வகை குரங்குகள் , மான்கள், காட்டு பன்றிகள் , எரும்பு தின்னி  உள்ளிட்ட வனவிலங்குகளும், பாதுகாக்கப்பட கூடிய  தேசிய பறவைகள் மயில், குயில், புறா உள்ளிட்ட   பறவைகளின் இருப்பிடமாக திகழ்கிறது. 

திருவண்ணாமலை மலையை சுற்றி 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை அமைந்துள்ளது. கிரிவலப்பாதையில் மாதந்தோறும் சித்ரா பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான மக்கள் கிரிவலம் செல்கின்றனர். இந்நிலையில் கொரோனா தொற்று அதிகரித்ததால் ஊரடங்கு போடப்பட்டதால் போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் வெறிச்சோடிய மலை அடிவாரத்தில் மான்கள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. இதனை காண ஏராளமானோர் அங்கு வந்து குவிகின்றனர்.  செல்போனில் படம் எடுத்து மகிழ்ந்து வருகின்றனர். 

கிரிவலப்பாதையில் துள்ளி குதித்து விளையாடும் மான்கள்

மலையில் ஆயிரக்கணக்கான மான்கள் வசிக்கின்றனர். சில மாதங்களாக பெய்து வரும் மழையின் காரணமாக  தேவையான தண்ணீர் அங்கேயே கிடைத்து விடுகிறது. அதுமட்டும் மின்றி தொடர் மழையால் மலையில்  இருந்த செடி ,கொடி ,மரங்கள் துளிர்விட்டு பசுமையாக காட்சியளிகிறது.

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் வாகன போக்குவரத்து முடங்கி இருப்பதால் அமைதியான சூழல் ஏற்பட்டு உள்ளதால். கிரிவலப்பாதையில் மக்கள் நடமாட்டம் இல்லாததாலும் ஆயிரக்கணக்கான மான்கள் அச்சமின்றி மலையில் இருந்து கூட்ட கூட்டமாக கீழே இறங்கி மலை அடிவார பகுதிக்கு வருவது அதிகரித்து வருகிறது. போக்கு வரத்து நேரத்தில், எப்போதாவது தான் மான்கள் அங்கும் இங்குமாக நடமாடி வரும்.  குறிப்பாக இரவு நேரங்களில் மக்கள் நடமாட்டம் குறைந்த பிறகு மான்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். தற்போது எந்த விதமான அச்சமின்றி  மான்கள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றது. இந்நிலையில் கிரிவலப்பாதை முழுவதும் கம்பி வேலி அமைக்கப்பட்டுள்ளது. இதனால் பாதுகாப்போடு மான்கள் கம்பி வேலி அருகே துள்ளி குதித்து விளையாடி வருகிறது. அங்குவரும் மக்களுக்கு அது கண்கொள்ளா காட்சியாக உள்ளது.

கிரிவலப்பாதையில் துள்ளி குதித்து விளையாடும் மான்கள்

குடும்பம் குடும்பமாக வந்து  துள்ளி குதித்து விளையாடும் மான்களை பொதுமக்கள் செல்போனில் படம் எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். மான்களுக்கு பழங்கள் உணவுகள் அளித்தும் அதுமட்டும் மின்றி இளைஞர்கள் தங்களது செல்போனில் செல்பி எடுத்தும் மகிழ்ந்து வருகின்றனர். இனி மான்களை  பார்ப்பதற்காக மக்கள் இனிவரும் நாட்களில் அதிகரிக்க கூடும் என தெரிகிறது. எனவே அதை கட்டுப்படுத்தும் வகையில் அப்பகுதியில் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அதுமட்டுமின்றி, மான்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும்  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
RSS ”சட்டம்லா ஒன்னும் வேண்டாம், இந்தியா இந்து நாடு தான்” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகவன் பகவத் பேச்சு
RSS ”சட்டம்லா ஒன்னும் வேண்டாம், இந்தியா இந்து நாடு தான்” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகவன் பகவத் பேச்சு
ABP Premium

வீடியோ

”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்- இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு குட்நியூஸ்.? இன்று வெளியாகுமா அறிவிப்பு.?
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
VBGRAMG Bill: நோ ப்ராப்ளம் - 125 நாள் திட்டம், அணுசக்தி மசோதாக்களுக்கு உடனே ஓகே சொன்ன குடியரசு தலைவர்
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
முருகா.. பழனி பஞ்சாமிர்தம் கெட்டுப்போகாமல் இருப்பது எப்படி? இத்தனை ஆரோக்கியமா?
RSS ”சட்டம்லா ஒன்னும் வேண்டாம், இந்தியா இந்து நாடு தான்” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகவன் பகவத் பேச்சு
RSS ”சட்டம்லா ஒன்னும் வேண்டாம், இந்தியா இந்து நாடு தான்” - ஆர்எஸ்எஸ் தலைவர் மோகவன் பகவத் பேச்சு
நாளை முதல் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு
நாளை முதல் தொடர் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு குஷி- போக்குவரத்து துறை சூப்பர் அறிவிப்பு
Train Ticket Price: டிச.26 முதல்.. ரயில் கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு - கிலோ மீட்டருக்கு எவ்வளவு? ரூ.600 கோடி லாபம்?
Train Ticket Price: டிச.26 முதல்.. ரயில் கட்டணத்தை உயர்த்திய மத்திய அரசு - கிலோ மீட்டருக்கு எவ்வளவு? ரூ.600 கோடி லாபம்?
148 வருடத்தில் இதுவே முதன்முறை.. இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய தொடக்க வீரர்கள் - யார் அந்த ஹீரோக்கள்?
148 வருடத்தில் இதுவே முதன்முறை.. இரண்டு இன்னிங்சிலும் சதம் விளாசிய தொடக்க வீரர்கள் - யார் அந்த ஹீரோக்கள்?
Mahindra XEV 9S Vs XEV 9e: மஹிந்த்ரா ப்ராண்டின் பாக்ஸிங் - XEV 9S Vs XEV 9e எது பெஸ்ட்? ரேஞ்ச், விலை, அம்சங்கள்
Mahindra XEV 9S Vs XEV 9e: மஹிந்த்ரா ப்ராண்டின் பாக்ஸிங் - XEV 9S Vs XEV 9e எது பெஸ்ட்? ரேஞ்ச், விலை, அம்சங்கள்
Embed widget