மேலும் அறிய

இந்த நாளுக்காகத்தான் காத்துக்கிடந்தோம்.. மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கிறது - பேரறிவாளன்

பேரறிவாளன் மற்றும் தாயார் அற்புதம்மாள் செங்கொடி நினைவிடத்தில் ஆறு பேர் விடுதலை பெற்றதை முன்னிட்டு நினைவஞ்சலி செலுத்தினார்.

பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டதன் அடிப்படையிலே 6 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.
 
ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் பேரறிவாளன், நளினி, சாந்தன், முருகன் உள்ளிட்ட 26 பேருக்கு 1998-ஆம் ஆண்டு தடா நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவின் விசாரணையின் முடிவில் சாந்தன், நளினி, முருகன் மற்றும் பேரறிவாளனுக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் 2000-ஆம் ஆண்டு நளினியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தால் 2014-ஆம் ஆண்டு பேரறிவாளன், சாந்தன், முருகனின் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்டு ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

இந்த நாளுக்காகத்தான் காத்துக்கிடந்தோம்.. மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கிறது - பேரறிவாளன்
 
அதேநேரத்தில் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று 2016-ஆம் ஆண்டு பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கடந்த மே 18-ஆம் தேதி அரசியல் சாசனத்தின் 142-ஆவது பிரிவின் கீழ் பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டது. பேரறிவாளனை விடுதலை செய்த தீர்ப்பின் அடிப்படையில் தங்களையும் விடுதலை செய்யக் கோரி ரவிச்சந்திரன், நளினி ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால் இம்மனுக்களை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததால் உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தனர்.
 
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் பேரறிவாளனை விடுதலை செய்தது போலவே நளினி, முருகன், சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய ஆறு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
 
செங்கொடி
 
 தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரை தூக்கிலிடக்கூடாது எனக் கோரி ஆகத்து 28, 2011 அன்று காஞ்சிபுரத்தில் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட பெண் போராளி ஆவார். காஞ்சிபுரத்தில் செயல்பட்டு வந்த மக்கள் மன்றம் என்ற அமைப்பில் இணைந்து தமிழுணர்வுப் போராட்டங்களில் இவர் பங்கெடுத்துள்ளார்.Nகாஞ்சிபுரத்தில் நடந்த மனிதச்சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டார். அன்று மாலை 6 மணிக்கு காஞ்சிபுரம் தாலுகா அலுவலகம் எதிரில் திடீரென தன் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டு பலியானார். 
 
இந்த நாளுக்காகத்தான் காத்துக்கிடந்தோம்.. மகிழ்ச்சியையும் மன நிறைவையும் கொடுக்கிறது - பேரறிவாளன்
 
இந்நிலையில் இன்று காஞ்சிபுரம் மேல்கதிர்பூர் ஊராட்சியில் அமைந்துள்ள செங்கொடியூர் மக்கள் மன்றத்தில் செங்கொடி நினைவிடத்தில், பேரறிவாளன் மற்றும் அற்புதம்மாள் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களை சந்தித்த பேரறிவாளன், ”முதலாளாக கடந்த மே 18ஆம் தேதி விடுதலையான 7 பேரில் ஒருவர் மட்டுமே விடுதலை குறித்து கசப்பான அனுபவத்தோடு விடுதலையானது நினைத்து வருத்தத்துடன் வெளி வந்ததாகவும், இன்று தன்னுடன் சேர்ந்த மற்ற ஆறு பேரும் விடுதலை செய்ததை பெரிய மகிழ்ச்சியாகவும்,  தெரிவித்தார். எங்களுக்காகவும் எங்களின் தூக்கு தண்டனை நிறுத்த வேண்டி  வழக்கறிஞர்கள் உள்ளிட்டோர்  உதவியாக இருந்து, 15 ஆண்டுகளாக எங்களுக்காக போராடி இந்த தீர்ப்பினை பெற்று தந்தது. விடுதலை அறிவிப்பை கேட்டவுடன் பெரு மகிழ்ச்சியுடனும், இன்று தான் எங்களுக்கு உரிய நீதியைப் பெற்றதாக” தெரிவித்தார்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Breaking News LIVE: ஹேமந்த் சோரனுக்கு ஜாமீன் - ராகுல் வரவேற்பு
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget