மேலும் அறிய
Advertisement
Fishermen: மீனவர்களுக்கான ஹேப்பி நியூஸ்..விரைவில் வருகிறது செயற்கை உறைவிடங்கள்...!
செங்கல்பட்டு மாவட்டத்தில், 41 இடங்களில் மீன் செயற்கை உறைவிடங்களை அமைக்க மீன்வளத்துறை முடிவெடுத்துள்ளது. அதற்கான பணிகளை மேற்கொள்ள, சுமார் 12.36 கோடி ரூபாயில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் மீனவர்கள் நலன் கருதி செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கும் பணி விரைவில் நடைபெற உள்ளது.
மீன்பிடித் தொழில்
அசைவ பிரியர்களின், முக்கிய தேர்வாக கடல் உணவுகள் உள்ளது. அதேபோன்று சென்னை புறநகர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மீன்பிடி தொழில், முக்கிய தொழிலாக இருந்து வருகிறது. கடலோரங்களில் பல்வேறு மீனவ கிராமங்கள் இருந்து வருகின்றன. காசிக்கொல்லி குப்பம் , கத்திவாக்கம், பனையூர், கானாத்தூர், செங்கல்பட்டு மாவட்டத்தை பொருத்தவரை ரெட்டிகுப்பம் துவங்கி, இடைக்கழிநாடு பேரூராட்சி ஆலம்பரை பகுதி வரை, மீனவர்கள் வசிக்கும் கிராமங்கள் அதிக அளவு உள்ளன. இந்த மீனவ பகுதிகளில் சுமார் 10,000 மீனவர்கள் வரை வசித்து வருகின்றனர். இவர்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் மீன்பிடித் தொழிலையை நம்பி வாழ்ந்து வருகின்றனர் .
பைபர் படகுகள் மூலம்
இங்கிருக்கும் மீனவர்கள் பைபர் படகுகளை பயன்படுத்தி கடலுக்குச் சென்று மீன் பிடித்து வருகின்றனர். பல்வேறு வகையான மீன்களை இவர்கள் பிடித்து பல்வேறு மாவட்டங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். சில சமயங்களில் அறிய வகை மீன் கிடைத்ததன் மூலம், அவற்றை வெளிநாடு, வெளிமாநிலங்களுக்கும் ஏற்றுமதி செய்வதை வழக்கமாக வைத்துள்ளனர்.
20 ஆண்டுகளில் மீனவர்களின் வாழ்வாதாரம் பல்வேறு வகையில் மாற்றத்தை அடைந்துள்ளனர். மக்கள் தொகை பெருக்கத்தின் அடிப்படையில் , தற்பொழுது படகுகள் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. கடந்த 25 ஆண்டுகளை பொருத்திப் பார்த்தால், தற்போது அதிக அளவு படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மீன் வளத்தை பெருக்க நடவடிக்கை
இதன் காரணமாக மீன் பிடி தொழிலாளர்களின் அதிகரிப்புக்கு ஏற்றவாறு மீன்வளம் பெருக்க நடவடிக்கை எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதேபோன்று சில இடங்களில் ஆழ்கடலில் மீன் பிடிக்க பயன்படுத்தும் லாஞ்ச் படகு வாயிலாக ஒரு சிலர் கரைப்பகுதியிலேயே, விதிகளை மீறி மீன்களை பிடிப்பதாலும் மீன்வளம் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பைபர் படகுகள் மூலம் மீன்பிடிப்பவர்களின் வாழ்வதாரமும், பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. லாஞ்சர் போட்டுகள் மூலம் மீன்கள் பிடிக்கப்படுவதால், மீன் குஞ்சுகள் அழிந்து இனப்பெருக்கத்திற்கு வழியின்றி மீன்வளம் குறைந்து வருகிறது.
செயற்கை உறைவிடங்கள்
இதுபோன்ற இடர்பாடுகளை களைவதற்காக வங்கக்கடலில், மீன்வளத்தை அதிகரிக்கவும் நிலையான மீன் வளர்ப்பை ஏற்படுத்தவும் மீன் செயற்கை உறைவிடங்களை அமைக்க தமிழக மீனவர் நலத்துறை முடிவெடுத்திருந்தது. இதற்கான இடங்கள் ஏற்படுத்தி அவை இனப்பெருக்க செய்வதை அதிகரிப்பதன் வாயிலாக மீன் வளம் பெருக்க முடியும் என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சமீபத்தில் கூட, செயற்கை பவள பார்வை திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதற்கு அடுத்த திட்டமாக தற்பொழுது, செயற்கை உறைவிடங்கள் அமைக்க மீன் வளர்ப்பு முடிவு செய்துள்ளது. தற்பொழுது, செங்கல்பட்டு மாவட்டத்தில், 41 இடங்களில் மீன் செயற்கை உறைவிடங்களை அமைக்க மீன்வளத்துறை முடிவெடுத்துள்ளது. அதற்கான பணிகளை மேற்கொள்ள, சுமார் 12.36 கோடி ரூபாயில் டெண்டர் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 14 கிராமங்களில் இந்த செயற்கை மீன் உறைவிடங்கள் அமைக்கப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
மதுரை
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion